வச்சாத்தி வழக்கு: தவறிழைத்த அதிகாரிகளை பாதுகாக்கவே அரசு முயன்றது.. தீர்ப்பின் முழு விபரம் இதோ!
சென்னை: சந்தன மர கடத்தல்காரர்களை காப்பாற்றும் நோக்கில் அப்போதைய அரசின் உதவியுடன் வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றியுள்ளனர் என்று வாச்சாத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிபதி தனது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம், ஆரூர், பாப்பிரெட்டிப்பட்டி நகரங்களுக்கு இடையே அமைந்துள்ள கல்வராயன் மலை தொடரின் அடிவாரப்பகுதியில் அமைந்துள்ளது வாச்சாத்தி மலை கிராமம். இந்த கிராமத்தில், 1992 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி சந்தனமரம் வெட்டி, கடத்தல் மற்றும் விற்பனை செய்வதாக கூறி 155 வனத்துறையினர், 108 காவல்துறையினர், 6 வருவாய் துறையினர் என 269-பேர் உள்ளடங்கிய குழுவினர், அப்பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.

இது தொடர்பாக 90 பெண்கள் உள்ளிட்ட 133 பேர் கைது செய்யப்பட்டும், கிராம மக்கள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது, 18 மலை வாழ் பெண்கள் பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் ஆரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சி.பி.ஐ யிடம் ஒப்படைக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண்கள் 1993ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர்.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 1995 ஆம் ஆண்டு சி.பி.ஐ க்கு வழக்கு மாற்றப்பட்டது. அதன்பின் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணை மேற்கொண்டது, அதில் வனத்துறையை சேர்ந்த 155 பேர்,காவல்துறையை சேர்ந்த 108 பேர், வருவாய்த்துறையினர் 6 பேர் என 269 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். பின்னர், இந்த வழக்கு கோவை, கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்பட்டு 2008ல் தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், இந்த வழக்கில் கடந்த 2011ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. அதில் குற்றஞ்சாட்டப்பட்ட 269பேரில்,தீர்ப்பு வழங்கிய நாளன்று உயிருடன் இருந்த 215பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. 12பேருக்கு 10ஆண்டுகள் சிறையும், 5பேருக்கு 7ஆண்டுகள் சிறையும், மற்றவர்களுக்கு 1-3ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் அனைத்து தரப்பின் வாதங்களை கேட்டறிந்த நீதிபதி இன்று தீர்ப்பளித்தார். அதன்படி, வாச்சாத்தி மலைக் கிராம மக்கள் மீதான வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் தருமபுரி மாவட்ட நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டார்.
மேலும், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார். பாலியல் வன் கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு உடனடியாக 10 லட்சம் இழப்பீடு வழங்கவும், பாதிக்கப்பட்டவர்கள் இறந்து விட்டால் அவர்கள் குடும்பத்திற்க்கு வழங்க வேண்டும் என தெரிவித்தார். இந்த வழக்கில் நீதிபதி பிறபித்த உத்தரவின் முழு விவரங்கள் வெளியாகியுள்ளது. அதில் உள்ள சில முக்கிய அம்சங்கள் வருமாறு:
சந்தன கடத்தல்கார்ரகளை காப்பாற்றும் நோக்கில் அப்போதைய அரசின் உதவியுடன் வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றியுள்ளனர். பழங்குடியின பெண்களை காப்பாற்ற அப்போதைய அரசு அக்கறை காட்டவில்லை. தவறிழைத்த அதிகாரிகளை பாதுகாக்கவே முயன்றது. வாச்சாத்தி பகுதியில் சந்தன மர கடத்தல் தொடர்பாக அப்பாவி மக்கள் மீது குற்றம் சுமத்தி பொய் வழக்கு பதியப்பட்டன.
சந்தன மர கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வனத்துறை எந்த வழக்கையும் பதிவு செய்யவில்லை. வனத்துறை உள்ளிட்டபல்வேறு துறை அதிகாரிகளின் மிரட்டல் காரணமாகவே 18 பெண்களும் தங்களுக்கு நேர்ந்த அவலத்தை வெளியில் கூறவில்லை. சந்தன மர கடத்தல்காரர்களை காப்பாற்றும் நோக்கில் அப்போதைய அரசின் உதவியுடன் வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றியுள்ளனர்.
சந்தன கட்டைகளை தேட 18 பெண்களை அழைத்து சென்ற போது பெண் காவலர் இருந்தும் அவரை போலீசார் அழைத்து செல்லவில்லை. அப்பாவி கிராம மக்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதனால் கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. உண்மை குற்றவாளிகள் யார் என்று தெரிந்தும் மாவட்ட ஆட்சியரோ..காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டவர்களோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உச்ச கட்டமாக 13-வயது சிறுமி, 8 மாத நிறை மாத கர்ப்பிணி ஆகியோரும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதையும் நீதிபதி பதிவு செய்துள்ளார். இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வது, சொத்துக்களை திருடுவது அதிகாரிகளின் பணியல்ல. இந்த அளவுக்கு வன்கொடுமை நிகழ்ந்துள்ள நிலையில் இவற்றை பொய் குற்றச்சாட்டு என்பதை ஏற்க முடியாது எனக்கூறி அனைத்து மேல் முறையீடுகளையும் தள்ளுபடி செய்துள்ளார்.
புகார் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர், வனத்துறை அதிகாரி, காவல் கண்காணிப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு அறிவுறுத்தலாக வழங்கியதோடு அது தொடர்பான அறிக்கையையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications