காதலனுடன் ஓடிய 13 வயது மகள்.. ஏளன பேச்சு.. சென்னையில் போலீஸ் ஸ்டேசன் முன்பு தீக்குளித்த தந்தை!
சென்னை: 13 வயது மகள் வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் சென்ற நிலையில், மகளை கண்டுபிடித்து தருமாறு புகார் கூறிய தந்தை, திடீரென சேலையூர் காவல் நிலைத்தின் முன்பு தீக்குளித்தார். படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். காவல் நிலையத்தில் மனஉளைச்சல் ஏற்படுத்தும் வகையில் போலீசார் பேசியதால் அவர தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.
சென்னை அடுத்த தாம்பரம் காமராஜபுரம், பவணந்தியார் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (44). அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார்.. இவரது மனைவி ரம்யா(38). இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகள், 11 வயதில் ஒரு மகன் உள்ளனர். இவரது மகள் சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 3ம் தேதி அதிகாலை சீனிவாசனின் மகள் திடீரென வீட்டிலிருந்து மாயமானார். இதனால், அதிர்ச்சி அடைந்த சீனிவாசன், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடு எனப் பல இடங்களில் தேடியும் மகள் கிடைக்கவில்லை.

கல்லூரி மாணவர்
இதனையடுத்து சீனிவாசன், தனது மகளைக் காணவில்லை என சேலையூர் காவல் நிலைத்தில் புகார் கொடுத்தார்.. அப்புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், அச்சிறுமிக்கும் காமராஜபுரம், எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த முதலாம் ஆண்டு கல்லூரி மாணவருக்கும் இடையே, ஏற்பட்ட காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அத்துடன், இருவரும் வீட்டைவிட்டு வெளியேறியது தெரியவந்தது.

சரியாக வளர்க்கவில்லை
இதனிடையே ஓடியவர்கள் திருமணம் செய்த பின்பு திரும்பி விடுவார்கள் என்று கூறிய சேலையூர் போலீசார் கூறியதாக கூறப்படுகிறத. அத்துடன் மகளை சரியாக வளர்க்கவில்லை என்று போலீசார் ஏளமாக பேசியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் கடந்த 2 நாட்களாக வீட்டிற்கும் போலீஸ் ஸ்டேசனுக்குமாக அலைந்து வந்த சீனிவாசன், தனது மகளை எப்படியாவது மீட்டு தாருங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அவளுக்கு வெளியுலகம் தெரியாது என்று அழுதபடி கூறியிருக்கிறார்.

அலட்சியமாக பேச்சு
அதை கேட்ட இன்ஸ்பெக்டர், ‘‘வளர்க்கும்போது ஒழுங்காக வளர்க்காதே. உன் மகள் காதலனுடன் தானே ஓடிபோனாள். திரும்பி வந்துவிடுவார். என்று அலட்சியமாக'' பேசியதாக புகார் எழுந்தது. ஏற்கனவே மகள் ஓடிப்போன வேதனையில் இருந்த சீனிவாசன், போலீஸ் இன்ஸ்பெக்டரின் ஏளன பேச்சால் மன உளைச்சலுக்கு ஆளானாராம்..

அதிர்ச்சி
இந்நிலையில் இன்ஸ்பெக்டரின் அலட்சியம் மற்றும் ஏளன போக்கை கண்டித்து சேலையூர் காவல் நிலையத்திற்கு நேற்று பெட்ரோல் கேனுடன் வந்த சீனிவாசன். பின்னர் மகளை மீட்டு தர வேண்டும். இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டு பெட்ரோலை தன் மீது ஊற்றிக்கொண்டு தீயிட்டுக் கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

மருத்துவமனை
பின்னர் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அவரைகொண்டு சென்றனர். பின்னர், அவரை மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி, பரிதாபமாக உயிரிழந்தார்.

மனைவி புகார்
இந்நிலையில், எனது மகள் காணாமல் போனது குறித்து சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், போலீசார் எவ்வித நடவடிக்கை எடுக்காததால்தான் எனது கணவர் தீக்குளித்தார் என சீனிவாசனின் மனைவி ரம்யா சேலையூர் காவல் நிலைத்தில் புகார் அளித்தார்.. மகளை கூட்டிச் சென்ற கல்லூரி மாணவன், ஏளமாக பேசிய இன்ஸ்பெக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications