வரும் 9 ஆம் தேதி ஆட்டோ, பேருந்துகள் ஓடாது.. அகில இந்திய அளவில் வேலைநிறுத்தம் அறிவிப்பு!
சென்னை: நாடு முழுவதும் வரும் 9 ஆம் தேதி ஆட்டோ, பேருந்துகள் ஓடாது என பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு இன்மை உள்பட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இந்த வேலைநிறுத்தம் அமல்படுத்தப்படும் என்றும், தொமுச, ஐஎன்டியுசி, சிஐடியு உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலர்கள், பேருந்து ஓட்டுநர்கள், தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் வாரிய கூட்டமைப்புகள் கடந்த மார்ச் மாதம் டெல்லியில் கூடி தொழிலாளர்களின் தேசிய பேரவை கூட்டம் கூட்டப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தை மேற்கொள்வது என ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் வரும் 9 ஆம் தேதி நாடு தழுவிய அளவில், மத்திய தொழிற்சங்கங்கள் பொது வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். வேலைவாய்ப்பு இன்மை, விலைவாசி உயர்வு, மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் காலிப்பணியிடங்களை நிரப்புதல், பொதுத்துறையை தனியார் துறையில் ஒப்படைக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் போராட்டமானது நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்தினை பொறுத்தவரை 13 தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்க போவதாக அறிவித்துள்ளன. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவித்து உள்ளனர். வரும் 9 ஆம் தேதி தமிழகத்திலும் திட்டமிட்டப்படி இந்த வேலைநிறுத்தம் என்பது நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தியாகராய நகரில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம், சிஐடியு, ஐஎன்டியுசி உள்ளிட்ட 13 தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தமிழகத்தில் 13 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும், பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடாது எனவும், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், ஆட்டோ மற்றும் பேருந்து ஓட்டுனர்கள், தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் கூட்டாக பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டது.
ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 80 சதவீத தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என தொழிற்சங்க பிரதிநிதிகள் தரப்பில் தகவலானது வெளியிடப்பட்டுள்ளது. ஆட்டோ, பேருந்துகள் ஓடாது என்றும், அத்தியாவசிய பணியை தவிர்த்து மற்ற அனைத்து பணிகளும் முடங்கும் என அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications