ஹே அறிவாலயமே.. சென்னை ஹார்பரில் நடந்த சம்பவம்.. வினோஜ் வெளியிட்ட வீடியோ.. ஆனா.. இதை கவனிச்சீங்களா?
சென்னை: ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு இடையே சென்னை துறைமுகம் தொகுதியில் நடந்த சம்பவம் ஒன்றை பற்றிய வீடியோவை பாஜகவின் வினோஜ் பி செல்வம் பகிர்ந்து உள்ளார்.
அயோத்தி ராமர் கோவில் இன்று திறக்கப்பட்டது. இந்த ஆலயம் முற்றிலும் நாட்டின் பாரம்பரிய மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கோவிலின் சில முக்கிய அம்சங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.

திறப்பு விழா: ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்தத்தின்படி, ராமர் கோயில் மூன்று அடுக்குகளைக் கொண்ட கோயிலாகும், ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் உள்ளது. இது மொத்தம் 392 தூண்களையும் 44 கதவுகளையும் கொண்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவிலுக்குச் செல்லும் பிரதான நுழைவாயில் யானைகள், சிங்கங்கள், ஹனுமான் மற்றும் 'கருடா' போன்ற சிலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் ராஜஸ்தானின் பன்சி பஹர்பூர் பகுதியில் இருந்து பெறப்பட்ட மணற்கல்லைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
பாரம்பரிய நாகரா பாணியில் கட்டப்பட்ட கோயில் வளாகம், 380 அடி நீளம் (கிழக்கு-மேற்கு திசை), 250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரம் கொண்டது. கோவிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 வாயில்களைக் கொண்டிருக்கும்.
Hello @arivalayam . This is happening at Chennai, harbour constituency right now. When there is a uprising, no amount of your appeasement tactics stands a chance. pic.twitter.com/4mNe4uDKtD
— Vinoj P Selvam (@VinojBJP) January 22, 2024
வினோஜ் பி செல்வம்; இந்த நிலையில்தான் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு இடையே சென்னை துறைமுகம் தொகுதியில் நடந்த சம்பவம் ஒன்றை பற்றிய வீடியோவை பாஜகவின் வினோஜ் பி செல்வம் பகிர்ந்து உள்ளார்.
ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு பெண்கள் சென்னை துறைமுகம் தொகுதியில் தலையில் பால்குடம் போல எடுத்து செல்லும் வீடியோவை அவர் பகிர்ந்து உள்ளார். ஹே அறிவாலயமே.. . இது தற்போது சென்னை துறைமுகம் தொகுதியில் நடக்கிறது. ஒரு எழுச்சி ஏற்படும் போது.. நீங்கள் மேற்கொள்ளும் உத்திகள் எதுவும் வெற்றிபெற வாய்ப்பே இல்லை, என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் சிறப்பு கோவில் பூஜைகளுக்கு தடை இருப்பதாக வெளியான பொய்யான செய்திகளை குறிப்பிட்டு அவர் இதை போஸ்ட் செய்துள்ளார்.
ஆனால் அவர் வெளியிட்ட வீடியோ முழுக்க வடஇந்திய பெண்கள் மட்டுமே உள்ளனர். அந்த பகுதியில் உள்ள மார்வாடி பெண்கள் மட்டுமே அவர்களின் பாரம்பரிய உடையில் அங்கே குடத்தை தூக்கி சென்றுள்ளனர். தமிழ் பெண்களை வீடியோவில் காணவே இல்லை என்று சிலர் விமர்சனங்களை வைத்துள்ளனர்.
பாஜக வழக்கு: ஒரு மாநிலத்தில், நாட்டில் பிற சமூகத்தினர் வசிக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக கோவிலில் நடத்தப்படும் சிறப்பு பூஜைக்கான அனுமதியை நிராகரிக்க முடியாது என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பல சமூகங்கள் வசிக்கின்றன என்பதை காரணம் காட்டி பூஜைகளை தடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு ராமர் சிலை பிரதிஷ்டையை முன்னிட்டு நேரடி ஒளிபரப்பு, பூஜைகள், அர்ச்சனைகள், அன்னதானம், பஜனைகள் நடத்த தடை எதுவும் விதிக்கப்படவில்லை. இந்த மனு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. .
நோட்டீஸ்: இதில் முறையாக விளக்கம் அளிக்கப்படும் உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டிற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தமிழ்நாடு அரசு கோவிலில் சிறப்பு பூஜை நடத்த தடை விதித்துள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் பாஜக மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவில் உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டிற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சிறப்பு பூஜை, ராமர் கோவில் விழாவை ஒளிபரப்ப தடை செய்துள்ளது . அயோத்தி ராமர் சிலை பிராண பிரதிஷ்டை நேரலை விவகாரத்தில் தமிழ்நாடு முதல்வருக்கு உத்தரவிட கோரிய பாஜக கட்சி சார்பாகவும், பாஜகவின் வினோஜ் பி செல்வம் சார்பாகவும் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அந்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications