Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அபார பேச்சாற்றல்.. அரசியல் சன்யாசம்.. ஜொலிக்காத பொதுவாழ்க்கை.. இது புலவர் இந்திரகுமாரி கதை..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் அமைச்சர் புலவர் இந்திரகுமாரி மீதான ஊழல் வழக்கில் சிறப்பு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ள நிலையில், அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

5 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்ற தீர்ப்பை கேட்டவுடன் நீதிமன்றத்திலேயே புலவர் இந்திரகுமாரி மயங்கி விழுந்ததால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் புலவர் இந்திரகுமாரியின் பின்னணியை இப்போது பார்க்கலாம்..

வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டம் நாட்றாம்பள்ளியை பூர்வீகமாக கொண்ட புலவர் இந்திரகுமாரிக்கு சினிமாவில் பாடலாசிரியராக வர வேண்டும் என்பது கனவு. இந்தக் கனவை நிஜமாக்க அவர் சென்னைக்கு இடம்பெயர்ந்தார். பள்ளிப்படிக்கும் காலத்திலேயே கவிதை எழுதுவதிலும், மேடைப் பேச்சிலும் அசத்தி வந்தார். புலமைப்பித்தன், எஸ்.பி.பாலசுப்ரமணியம், என புதுமுகங்களை ஊக்குவித்து அவர்களுக்கு எம்.ஜி.ஆர். வாய்ப்பு வழங்கும் தகவலை அறிந்து அவரை சந்தித்திருக்கிறார் இந்திரகுமார்.

மேடைப்பேச்சு

மேடைப்பேச்சு

புலவர் இந்திரகுமாரியின் பேச்சு எம்.ஜி.ஆருக்கு பிடித்துப்போக, அவரை அதிமுக பிரச்சாரத்திற்கும், பொதுக்கூட்டத்திற்கும் பயன்படுத்தத் தொடங்கினார். மிகச்சரளமாக பிசிரின்றி எதிர்க்கட்சிகளை மேடையில் தனது பேச்சாற்றல் மூலம் பந்தாடி வந்தார் புலவர் இந்திரகுமாரி. இப்படியே எத்தனை நாட்களுக்கு தான் மேடைப்பேச்சாளராக மட்டும் இருப்பது என நினைத்த அவர் ஜெயலலிதாவிடம் 1991 சட்டமன்றத் தேர்தலில் சீட் கேட்கிறார்.

எம்.எல்.ஏ. சீட்

எம்.எல்.ஏ. சீட்

இவருக்கு சீட் கொடுக்க சசிகலா ஆட்சேபனை தெரிவித்த போதும், புலவர் இந்திரகுமாரிக்கு வேலூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி தொகுதியில் சீட் கொடுத்தார் ஜெயலலிதா. தேர்தலில் வெற்றிபெற்ற கையோடு அவருக்கு சமூக நலத்துறை அமைச்சர் பதவியும் கிடைத்தது. முதல்முறையாக அமைச்சராக பொறுப்பேற்ற இவருக்கு என்ன செய்வது, எப்படி செயல்படுவது எனத் தெரியவில்லை. அப்போது தான் இவரது கணவர் பாபு, வெங்கடேஷ் என்பரை உதவியாளராக நியமித்து அவர் மூலம் அதிகாரத்துக்கே உரிய ஆட்டத்தை ஆரம்பிக்கின்றனர்.

அரசு நிதி

அரசு நிதி

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவுவதற்காக புலவர் இந்திரகுமாரியின் கணவர் பாபு தொடங்கிய மெர்சி மதர் இந்தியா அறக்கட்டளைக்கு தமிழக அரசின் நிதி ரூ.15 லட்சம் பெறப்பட்டு அது முறையாக செலவு செய்யப்படாமல் மோசடி செய்யப்பட்டது என்ற குற்றச்சாட்டே, இவர் இன்று சிறைத்தண்டனை பெறுவதற்கான காரணம். இதனிடையே இலவச வேட்டி சேலைகள் கொள்முதலில் ஊழல் நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

24 ஆண்டுகள்

24 ஆண்டுகள்

1997-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கை 24 ஆண்டுகளாக நடத்தி வந்தார் புலவர் இந்திரகுமார். ஒவ்வொரு வாய்தாவுக்கும் அவர் நீதிமன்றத்திற்கு செல்லும் போது சிரித்த முகத்துடன் தான் செல்வார். இதனிடையே 1996-ம் ஆண்டு மீண்டும் சீட் கேட்கப்பட்டு ஜெயலலிதா மறுத்துவிட்டதால் சிறிது காலம் அமைதியாக இருந்த இவர், ஊழல் வழக்கு பதிவுக்கு பிறகு அரசியல் சன்யாசம் கூட மேற்கொண்டார்.

அரசியல் சன்யாசம்

அரசியல் சன்யாசம்

அரசியல் சன்யாசம் செய்தால் உங்களுக்கும் சரி உங்களை நம்பியுள்ளவர்களுக்கும் சரி சரியாக இருக்காது என அவரது நலம் விரும்பிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்ததாலும், வழக்குகளில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ளலாம் என நினைத்ததாலும், கடந்த 2006-ம் ஆண்டு திமுகவில் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டார். திமுகவில் இவர் இணைந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாகியும் இவருக்கு எந்தவொரு முக்கியப் பதவிகளையும் தலைமை கொடுக்க விரும்பவில்லை. காரணம் இவர் மீதான ஊழல் வழக்கு.

திசை திரும்பியது

திசை திரும்பியது

சில மாதங்களுக்கு முன்பு தான் திமுக இலக்கிய அணி செயலாளராக நியமிக்கப்பட்டார். 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் வாரியத் தலைவர் பதவியை எதிர்பார்த்தார். ஆனால் அப்போதைய முதல்வர் கருணாநிதி இவரது கோரிக்கையை பரிசீலிக்கக்கூட இல்லை. சினிமா பாடலாசிரியர் கனவு அரசியல்வாதியாக ஆக வேண்டும் என திசை திரும்பியதால் இன்று வழக்கு, தண்டனை என பல சுமைகளை சுமக்க வைத்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+