பிஎஸ்பி ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. திமுக ஆட்சியில் காவல்துறை கைகள் கட்டப்பட்டுள்ளது.. ஜெயக்குமார்
சென்னை: ஆம்ஸ்ட்ராங் படுகொலை அதிர்ச்சியளிக்கிறது என்றும், எங்களது ஆட்சியில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறை இந்த ஆட்சியில் கைகள் கட்டப்பட்டு உள்ளது என்றும் தொடர் கொலைகள் நடந்து வரும் நிலையில் இந்த அரசு எதைப்பற்றியும் கவலைப்படாமல் தூங்கிக்கொண்டிருக்கிறது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் (வயது 52). இவர் சென்னை பெரம்பூர் வேணுகோபால் சாமி தெருவில் புதிதாக வீடு கட்டி வந்தார். இங்கு தான் இவரது பழைய வீடு இருந்தது. இதை இடித்து தற்போது இவர் புது வீடு கட்டி வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை இங்கு வந்திருந்த ஆம்ஸ்ட்ராங்கை மர்ம கும்பலினர் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சென்னையில் நடந்த இந்த கொலை சம்பவம் தொடர்பாக நேற்று 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தது ஏன் என்றும் கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் உடல் பிரேத பரிசோதனை முடிந்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து சென்னை அயனாவரத்தில் உள்ள இல்லத்துக்கு ஆம்ஸ்ட்ராங் உடல் கொண்டு செல்லப்பட்டது. நாளை காலை இவரது உடல் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது. முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக சார்பில் ஆஸ்பத்திரிக்கு வந்து குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, எங்களது ஆட்சியில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறை இந்த ஆட்சியில் கைகள் கட்டப்பட்டு உள்ளது என்றும் தொடர் கொலைகள் நடந்து வரும் நிலையில் இந்த அரசு எதைப்பற்றியும் கவலைப்படாமல் தூங்கிக்கொண்டிருக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். ஜெயக்குமார் கூறியதாவது:-
தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.. அதிர்ச்சியளிக்கிறது.. இந்த சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்கெட்டு இருப்பது என்பதற்கு இந்த தொடர் கொலைகள் சான்றாக உள்ளது. ஒரு கட்சியின் தலைவருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் சாதாரண மக்களுக்கு பாதுகாப்பு எப்படி இருக்கும் என்பதை தமிழ்நாட்டு மக்கள் பார்க்க வேண்டும்.
ஆட்சி பொறுப்பேற்ற ஸ்டாலின், தொடர் கொலைகளை எல்லாம் தடுத்து நிறுத்தாமல் உள்துறையை கையில் வைத்துக்கொண்டு இருக்கிறார். கூலிப்படை கொலைகள் அதிகம் நடந்த போதும் இதுவரை இதனை தடுக்க முதல்வர் ஸ்டாலின் ஒரு கூட்டம் கூட நடத்தவில்லை. நெல்லையில் காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் படுகொலை செய்யப்பட்டார். எங்களது ஆட்சியில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறை இந்த ஆட்சியில் கைகள் கட்டப்பட்டு காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் கொலை வழக்கில் இன்னும் குற்றவாளிகள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகிறது.
இதேபோல் சேலத்தில் விளக்கை எல்லாம் அணைத்துவிட்டு அதிமுக சகோதரர் படுகொலை செய்யப்படுகிறார். இதேபோன்று கடலூரில் அதிமுக நிர்வாகி படுகொலை செய்யப்படுகிறார். இப்படி வரிசையாக கடந்த 3 ஆண்டுகளில் அரசியல் கொலைகள் கூலிப்படைகளால் ஏவப்பட்டு தொடந்து கொலைகள் நடந்து வரும் நிலையில், எதைப்பற்றியும் எங்களுக்கு கவலை இல்லை என்று சொல்லி.. யார் செத்தால் என்ன? யார் போனால் என்ன? என்ற நிலையில், விடியா தூங்குமூஞ்சி அரசாங்கம் தூங்கிக்கொண்டிருக்கிறது.
ஒரு அரசியல் கட்சி தலைவருக்கு இப்படி ஒரு ஆபத்து நேரும் போது, இதற்கு முன்னதாக புலனாய்வுத்துறை என்ன செய்துகொண்டிருந்தது. மிகவும் துயரப்படக்கூடிய வகையில் ஆம்ஸ்ட்ராங் கொலை சென்னையில் நடந்துள்ளது. மேற்கொண்டு தமிழ்நாட்டில் கூலிப்படைகளின் அட்டகாசத்தை குறைத்து அரசியல் தலைவர்களின் பாதுகாப்பிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications