ஜெயலலிதா மரணம்.. ஆறுமுகசாமி ஆணையம் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும்! சீறிய பெங்களூர் புகழேந்தி
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி கமிஷன் தொடர்பாகப் பெங்களூர் புகழேந்தி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் பெங்களூர் வா.புகழேந்தி ஒசூர் தனியார் ஓட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை செய்ய அணைக்கப்பட்ட ஆறுமுகசாமி கமிஷன் குறித்து சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

பெங்களூர் புகழேந்தி
அப்போது பெங்களூர் புகழேந்தி கூறுகையில், "ஆறுமுகசாமி கமிஷன் மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ளது. முன்னாள் முதல்வர் எடப்பாடியால் ஆணையம் அமைக்கப்பட்டது, அதற்குக் காரணமானவர் ஓபிஎஸ், அம்மாவின் சாவில் உள்ள மர்மத்தைத் தெரிந்துகொள்ள அமைக்கப்பட்டது. பல இடையூறுகளுக்குப் பிறகு ஆணையம் செயல்படுகிறது. ஸ்டாலின் தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிட்டிருந்தார்.

ஓபிஎஸ்
யார் மீது சந்தேகமில்லை, சசிகலா மீது பற்றுடையவன் என ஓபிஎஸ் ஆணையத்தில் கூறியுள்ளார். அப்படியானால் ஆணையம் எதற்கு..? எடப்பாடி பழனிசாமி ஊழல்வாதி எனக் கூறியவர் ஓபிஎஸ். தர்மயுத்தம் நடத்தி கட்சியில் இணைந்தீர்கள், மக்கள் மடையர்களா? முட்டாளா? சாதாரண ஓபிஎஸ், உயரத்திற்குக் கொண்டு சென்றவர் அம்மா, சசிகலா மீது போடப்பட்ட பழி போகுமா? பழி போகும் என்றாலும், ஓபிஎஸ் - இபிஎஸ் பொதுமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்

விசாரணை ஆணையம்
விசாரணை ஆணையம் என்பது நாங்கள் சேர்ந்துகொள்ளத் தான் என்பதைக் கூற வேண்டும். எனவே, எடப்பாடி பழனிசாமியை ஆறுமுகசாமி கமிஷன் அழைத்து விசாரிக்க வேண்டும். இப்போது மூளை முடுக்கெல்லாம், ஜெயலலிதாவை சசிகலா கொன்று விட்டார் என கேபி.முனுசாமி உள்ளிட்டோர் ஆதாரமில்லாமல் குற்றஞ்சாட்டி வருகின்றனர். எம்ஜிஆரை போல் ஏன்? ஜெயலலிதாவை ஏன் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்லவில்லை.

நாடகமாடிய ஓபிஎஸ்
ஆறுமுகசாமி ஆணையம் என்னையும் விசாரிக்கட்டும், சசிகலா மருத்துவரல்ல.. ஜெயலலிதாவை மருத்துவமனையில் சேர்த்ததே அவர் தான். ஓபிஎஸ் தொடர்ந்து நாடகமாடி வருகிறார். புகழேந்தி விடமாட்டான், மக்களை ஏமாற்ற நினைப்பவர்கள். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குத் துரோகம் செய்கிறார்கள் என யாரையும் விடக் கூடாது அனைவரையும் கைது செய்ய வேண்டும்" என்றார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications