அதிமுக அலுவலகத்திற்கு நிச்சயம் போவோம்! சுப்ரீம் கோர்ட் அப்படி சொல்லவே இல்லை! பெங்களூர் புகழேந்தி பரபர
சென்னை: அதிமுக அலுவலக சாவி தொடர்பான வழக்கில் ஓபிஎஸ் தரப்பு மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்து உள்ள நிலையில், இது தொடர்பாகப் பெங்களூர் புகழேந்தி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.
அதிமுக கடந்த சில மாதங்களாகவே ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி ஆகியோரின் இரட்டை தலைமையின் கீழ் செயல்பட்டு வந்தது. அப்போது கட்சி தொடர்ச்சியாகத் தோல்விகளைச் சந்தித்து வந்தது.
இதனால் எடப்பாடி ஆதரவாளர்கள் கட்சிக்கு ஒற்றை தலைமை தான் தேவை என்று வலியுறுத்தத் தொடங்கினார்கள். இது கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிமுக
கடந்த ஜூலை மாதம் நடந்த பொதுக்குழுவில் எடப்பாடி இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். மேலும், ஓபிஎஸ் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகச் சென்னை ஐகோர்ட் தீர்ப்பு அளித்தது. அதேநேரம் ஓபிஎஸ் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

சாவி
இது ஒருபுறம் இருக்கப் பொதுக்குழு நடைபெற்ற நாளில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ஓபிஎஸ் கோஷ்டி நுழைந்தது. அப்போது ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. இந்த விவகாரத்திலும் எடப்பாடிக்குச் சாதகமாகவே தீர்ப்பு வந்தது. அதைத் தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலக சாவி எடப்பாடி தரப்பிடம் கொடுக்கப்பட்டது.

வழக்கு
இந்தச் சூழலில் தான் கடந்த வாரம் தற்காலிக பொதுச்செயலாளராகத் தேர்வான பின்பு, முதல்முறையாக எடப்பாடி பழனிசாமி சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்துக்குச் சென்றார். அதைத் தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பும் அதிமுக தலைமை அலுவலகம் செல்ல அனுமதி கேட்ட நிலையில், நீதிமன்ற அனுமதி பெற்று வந்தால் மட்டுமே அனுமதி தர முடியும் என போலீசார் மறுத்துவிட்டனர்.

கேள்வி
இப்படி பெரும் பரபரப்பிற்கு மத்தியில் அதிமுக தலைமை அலுவலக சாவிக்கு உரிமை கோரி ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. குறிப்பாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓபிஎஸ் எப்படி அலுவலக சாவி குறித்து உரிமை கோர முடியும் என்று கேட்டுள்ள நீதிமன்றம், இது தொடர்பாக ஏன் உரிமையில் நீதிமன்றத்தை நாடா கூடாது என்றும் கேள்வி எழுப்பி இருந்தது.

புகழேந்தி
இது ஓபிஎஸ் தரப்பிற்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் இது குறித்து ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார். அதாவது, "இந்த வழக்குத் தீர்ப்பு குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இது குறித்துக் கூறியது தவறு. ஓபிஎஸை நீக்கியது செல்லும் என்று நீதிமன்றம் கூறியதாக சி.வி.சண்முகம் தெரிவித்து உள்ளார்.

தீர்ப்பு என்ன
அதிமுக தலைமை அலுவலகம் உள்ளே செல்லலாமா கூடாதா என்பது குறித்து எல்லாம் எதுவும் கூறவில்லை. இது குறித்து எங்கள் வழக்கறிஞரின் வாதத்தையும் நீதிபதி ஏற்றுக்கொண்டார். சிவில் வழக்கு நிலுவையில் உள்ளதால் அங்கு வாதங்களை வைக்கும்படி குறிப்பிட்டார். மேலும், பொதுக்குழு மேல்முறையீட்டு மனுவில் இந்த தீர்ப்பைக் குறிப்பிடக் கூடாது என்றும் அவர் தெளிவுபடுத்தி உள்ளார்.

பொய் கூறுகிறார்
ஆனால் சி.வி.சண்முகம் வெளியே வந்து பொய் கூறுகிறார். ஒவ்வொரு முறையும் அவர் இதையே தான் செய்கிறார். இதன் மூலம் எங்கள் தரப்பிற்கு மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டதை போலக் காட்ட முயல்கிறார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவர் எப்படி உரிமை கோரலாம் என்று நீதிபதி கேட்டது உண்மைதான். ஆனால் அதற்கும் நாங்கள் விளக்கம் அளித்துவிட்டோம். எந்தவொரு நீதிபதியும் இதுவரை ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாகத் தெரிவிக்கவில்லை.

சாவி குறித்து மட்டுமே தீர்ப்பு
இப்போது அலுவலகம் சாவி தொடர்பான வழக்கு தான் நடைபெறுகிறது. நாங்கள் உள்ளே செல்லக் கூடாது என்று எந்த இடத்திலும் உச்ச நீதிமன்றம் சொல்லவில்லை. ஆனால், எதோ தங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்தது போலப் பொய் சொல்கிறார்கள். பொதுக்குழு மேல்முறையீட்டு மனுவை நாங்கள் தனியாகத் தாக்கல் செய்து உள்ளோம். அந்த வழக்கு பட்டியலிடப்பட்டு உள்ளது. அது விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இரண்டையும் தொடர்புப்படுத்தக் கூடாது என்றும் நீதிபதி தெளிவுபடுத்தி உள்ளார்.

கண்டிப்பாகச் செல்வோம்
இந்த வழக்கு அதிமுக அலுவலக சாவி தொடர்பானது மட்டுமே.. பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு மனு குறித்து உச்ச நீதிமன்றம் எதுவும் சொல்லவில்லை. எடப்பாடி பழனிசாமி அதிமுக அலுவலகத்திற்குச் செல்லாம் என்று யாரும் சொல்லவில்லை. அதேபோல எங்களைச் செல்ல வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மூலம் எங்களுக்கு எந்தவொரு பின்னடைவும் இல்லை. கண்டிப்பாக நாங்கள் அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் செல்வோம். உச்ச நீதிமன்றம் அப்படி எந்தவொரு தீர்ப்பையும் தரவில்லை" என்றார்.
-
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர் -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
John Pandian: அதிமுக பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியன் கட்சிக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கீடு -
மொத்தம் 23 வேட்பாளர்கள்.. இந்த 3 பேரை கவனிச்சிங்களா! அதிமுகவில் தொகுதி மாறியவர்கள்! காரணம் இதுதான்! -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள்












Click it and Unblock the Notifications