முற்றுகையிடப்பட்ட செந்தில் பாலாஜி வீடு.. கூடிய பார் உரிமையாளர்கள்.. பெரும் கோஷம்.. என்ன நடந்தது?
சென்னை: சென்னையில் மின்சாரத் துறை மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டின் முன்பு பலர் கூடி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.
Recommended Video
தமிழ்நாட்டில் மின்சாரத்துறை மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வை துறை ஆகிய இரண்டு துறைகளையும் அமைச்சர் செந்தில் பாலாஜி கவனித்து வருகிறார். இந்த நிலையில் தமிழ்நாட்டில் சில நாட்களுக்கு முன் டாஸ்மாக் சார்பாக பார் டெண்டர் விடுக்கப்பட்டது.
டாஸ்மாக்குகளில் புதிதாக பார் அமைப்பதற்கு இந்த டெண்டர் எடுக்கப்பட்டு பலருக்கு டெண்டர் வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

செந்தில் பாலாஜி
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்கு நெருக்கமான சிலருக்கு டெண்டர் வழங்கியதாக பார் உரிமையாளர்கள் புகார் வைத்துள்ளனர். தங்களிடம் ஏற்கனவே இருந்த பார் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய நபர்களுக்கு பார் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதில் பல கோடி கை மாறி உள்ளது என்று பார் உரிமையாளர்கள் புகார் வைக்கின்றன.

செந்தில் பாலாஜி போராட்டம்
தங்களுக்கு பார் உரிமம் வழங்காமல் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டும் பார் உரிமம் வழங்கப்பட்டுள்ளது என்று பார் உரிமையாளர்கள் சங்கம் புகார் வைத்து உள்ளது. இதனால் இந்த டெண்டர்களை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் சிலர் நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதான் போராட்டமாகவெடித்துள்ளது .

பார் உரிமையாளர்கள் போராட்டம்
இதையடுத்து சென்னை, பசுமை வழி சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டின் முன்பு இன்று பார் உரிமையாளர்கள் ஒன்று கூடி போராட்டம் செய்தனர். கிட்டத்தட்ட 100 பேர் ஒன்று கூடி செந்தில் பாலாஜி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். இதனால் அங்கு பெரிய பரபரப்பு ஏற்பட்டது.

செந்தில் பாலாஜி பார் உரிமையாளர்கள்
பொற்கால ஆட்சியில் ஒரு பொல்லாத அமைச்சர்.. அமைச்சரே உங்களுக்கு கோடி.. எங்களுக்கு தெரு கோடி என்ற வாசகங்கள் அடங்கிய போர்டுகளை வைத்துக்கொண்டு பார் உரிமையாளர்கள் அங்கு கோஷங்களை எழுப்பினார்கள். அங்கு உடனடியாக போலீஸ் குவிந்ததால் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இதையடுத்து போராட்டம் நடத்திய தமிழ்நாடு பார் உரிமையாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications