"நான் சொன்னது அத்தனையும் உண்மை.. ஒரு வார்த்தை கூட பொய் இல்லை!" பயில்வான் ரங்கநாதன் திட்டவட்டம்
சென்னை: பயில்வான் ரங்கநாதன் மீது தயாரிப்பாளர் கே.ராஜன் புகார் அளித்துள்ள நிலையில், இது தொடர்பாக அவர் அவரே விளக்கம் ஒன்றையும் அளித்துள்ளார்.
Recommended Video
தமிழ் சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்துத் தொடர்ந்து அருவருக்கத்தக்க வகையில் பேசுவதாகப் பயில்வான் ரங்கநாதன் மீது புகார்கள் உள்ளன.
பயில்வான் ரங்கநாதன் பேச்சுக்கள் இணையத்தில் தொடர்ச்சியாக வைரல் ஆகும் நிலையில், மறுபுறம் அவரது அருவருக்கத்தக்க பேச்சுக்களுக்கு எதிர்ப்புகளும் இணையத்தில் அதிகரித்தே வருகிறது.

பயில்வான் ரங்கநாதன் மீது புகார்
இதனிடையே சமீபத்தில் பிரபல தயாரிப்பாளரான கே.ராஜன் சென்னை போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். பயில்வான் ரங்கநாதன் எவ்வித ஆதாரமும் இல்லாமல் தொடர்ந்து பொய்யான தகவல்களை இணையத்தில் பரப்பி வருவதாகவும் இதன் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது. இதற்கிடையே தயாரிப்பாளர் கே.ராஜன் மீது பயில்வான் ரங்கநாதன் பதிலுக்குப் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

பொய் புகார்
அதில் தன்னைப் பற்றி அவதூறாகப் பேசும் திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயில்வான் ரங்கநாதன் கூறி இருந்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பயில்வான் ரங்கநாதன், "எனக்குப் பத்திரிகைத் துறையில் 45 ஆண்டுக் காலம் அனுபவம் உள்ளது. என்னைப் பற்றி முற்றிலும் தவறான மற்றும் பொய்யான தகவல்கள் தயாரிப்பாளர் கே ராஜன் பேசி வருகிறார்.

மிரட்டுகிறார்
நான் தவறாகப் பேசுவதாக என் மீது புகார் அளித்துள்ள ராஜன் எதற்காக குடும்பத்தை விட்டுவிட்டு தனியார் விடுதியில் தங்கி இருக்கிறார்? பல விழாக்களிலும், டிவி சேனல்களிலும் அவர் தொடர்ந்து என்னைப் பற்றி அருவருப்பாகவும், தரக்குறைவாகவும் பேசியும் மிரட்டியும் வருகிறார். நான் யூடியூப் சேனல்களில் சினிமா துறையில் உள்ள பல்வேறு நடிகர், நடிகைகள் குறித்துப் பேசி உள்ளேன். என்னுடைய வாழ்க்கையின் அனுபவத்தை வைத்து யூடியூபில் பேசுகிறேன்.

வாழ வைக்கும் யூடியூப் சேனல்
ராதிகா என்னை அடித்தது திருவான்மியூரில்.. ஆனால் கே.ராஜன் பெசன்ட் நகர் என்று தவறாகச் சொல்லி உள்ளார். தவறு. எனக்குச் செய்தி எழுத கற்றுக் கொடுத்தவர் சி.பா.ஆதித்தனார். என்னை இப்போது யூ டியூப் சேனல்கள் மட்டுமே வாழ வைக்கிறது. ராஜன் கூறுவது முற்றிலும் பொய். நான் இதுவரை எந்த சினிமா நடிகர், நடிகைகளிடம் பணம் வசூலித்தலில்லை. நான் நடிகைகளைப் பற்றி பொய்யாகப் பேசுகிறேன் என்றால் நடிகைகள்தான் போலீசில் புகார் அளிக்க வேண்டும்.

பொய் சொல்லவில்லை
பொய்யாக நான் எதுவுமே பேசியதில்லை. தவறான தகவல்களை யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் தெரிவிப்பதில்லை. மேலும், நான் கூறியதில் எதுவுமே வதந்தி, பொய் என எதுவுமே இல்லை என்றும், என் மீது அளிக்கப்பட்ட புகார் எந்த ஆதாரமும் இல்லாதது" என்றும் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications