முட்டி போட்டு ஜெபம் செய்தாரே விஜய்.. இப்ப மே 3 ரிசல்ட் முன்பு தவெக தலைவர் அடுத்த சர்ப்ரைஸ் டூர்
சென்னை: தவெக தலைவர் விஜய் மேற்கொண்டு வரும் ஆன்மீகப் பயணங்கள் தற்போது அரசியல் மற்றும் ஊடகத் தளங்களில் கவனத்தைப் பெற்றுள்ளன. தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், மே 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகிறது.. இந்த இடைப்பட்ட நாட்களை வழிபாட்டிற்காக அவர் ஒதுக்கியுள்ளதாகத் தெரிகிறது. அதுகுறித்த சில தகவல்கள் இணையத்தில் வட்டமடித்தபடி உள்ளன.
ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, விஜய் இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வருகை தந்தார். அங்குள்ள கடலில் புனித நீராடிய அவர், பிறகு மூலவர் சந்நிதியில் முருகப்பெருமானை வேண்டி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் உரிய மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த வழிபாட்டின் போது விஜய்யுடன் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் ரூட் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் ஜெகதீஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
தவெக தலைவர் விஜய்
கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை, சண்முகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களையும் அவர் வழிபட்டார். தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள இக்கட்டான தருணத்தில் விஜய்யின் இந்தத் திடீர் வருகையை முன்னிட்டு, அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான தொண்டர்களும் ரசிகர்களும் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்செந்தூர் பயணத்தை தொடர்ந்து, விஜய்யின் அடுத்தகட்ட நகர்வு குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. வரும் மே 3ம் தேதி, அதாவது தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முந்தைய நாள், அவர் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள ஷீரடி சாய்பாபா கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்ய உள்ளதாகத் தெரிகிறது.
ஷீரடிக்கு பயணம்
விஜய் ஏற்கனவே பலமுறை ஷீரடிக்குச் சென்று வழிபாடு நடத்தியுள்ளதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் ஷீரடி சென்ற போட்டோக்கள், சோஷியல் மீடியாவில் பெரிதும் பேசப்பட்டன.
அதேபோல், தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டிற்கு முன்பாகவும் அவர் அங்கு சென்று தரிசனம் செய்திருந்தார். அந்த தொடர்ச்சியில், இப்போது தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்கும் சூழலிலும் அவர் ஷீரடி செல்லத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல்கள்தான் மீடியாவில் கவனம் பெற்று வருகின்றன.
ஒரு அரசியல் கட்சியின் தலைவராக தனது முதல் தேர்தலை சந்தித்துள்ள விஜய், வாக்குப்பதிவிற்குப் பிந்தைய நேரத்தை அமைதியான முறையில் ஆன்மீக பயணங்களில் செலவிட்டு வருவது தெரிய வருகிறது.. தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியத் தலைவர்கள் தேர்தல் முடிவுகளுக்கு முன்பாக இது போன்ற வழிபாடுகளை மேற்கொள்வது வழக்கமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
முட்டி போட்டு ஜெபம் செய்தாரே
விஜய்யின் இந்த ஆன்மீகத் தேடல் என்பது வெறும் கோவில்களோடு மட்டும் நின்றுவிடவில்லை. முன்னதாக, திருச்சி கிழக்குத் தொகுதியில் தனது கட்சியின் வேட்பாளரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தபோது, வயர்லெஸ் சாலையில் உள்ள சர்ச்சுக்கு சென்று அவர் பிரார்த்தனை செய்திருந்தார். அங்கு பீடத்தின் முன்பாக முழங்காலிட்டு அவர் நீண்ட நேரம் மனமுருகிப் பிரார்த்தனை செய்த காட்சிகள் கட்சித் தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அதேபோல், அங்குள்ள மசூதி மற்றும் அம்மன் கோவில்களுக்கும் அவர் சென்று வந்திருந்தார். தேர்தல் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அவர் கடைபிடித்து வரும் இந்த மதநல்லிணக்க அணுகுமுறை, அனைத்துத் தரப்பு மக்களையும் அரவணைத்துச் செல்லும் அரசியல் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
ஆன்மீகப் பயணங்களின் தாக்கம்
ஒரு அரசியல் கட்சியின் தலைவராகத் தனது முதல் தேர்தலைச் சந்தித்துள்ள விஜய், வாக்குப்பதிவிற்குப் பிந்தைய நேரத்தை அமைதியான முறையில் ஆன்மீகப் பயணங்களில் செலவிட்டு வருவது கவனிக்கத்தக்கது.
தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியத் தலைவர்கள் தேர்தல் முடிவுகளுக்கு முன்பாக இது போன்ற வழிபாடுகளை மேற்கொள்வது வழக்கமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்ல, பகுத்தறிவு மற்றும் ஆன்மீகம் கலந்த தமிழக அரசியல் சூழலில், விஜய்யின் இந்த நகர்வுகள் அவரது அரசியல் பயணத்தின் ஒரு முக்கியப் பகுதியாகவே கவனிக்கப்படுகின்றன. திருச்செந்தூர் முதல் ஷீரடி வரையிலான இந்த ஆன்மீகப் பயணங்கள், கட்சித் தொண்டர்களிடையே ஒருவித நேர்மறையான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன. வரும் மே 4ம் தேதி வெளிவரப்போகும் தேர்தல் முடிவுகள், இந்த அமைதியான தேடல்களுக்குப் பின்னால் இருக்கும் அரசியல் வெற்றியை தீர்மானிக்கும் காரணியாக அமையுமா? பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications