மீனு மீனேய்.. கணவாய் மீன் சாப்பிட்டதும் உடலில் ஏற்படும் மாற்றம்! வியக்க வைக்கும் பின்னணி என்ன?
சென்னை: கடல் உணவுகளில் தனித்துவமான சுவையும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்த ஒரு சிறந்த உணவாகக் கணவாய் மீன் விளங்குகிறது. குறைந்த கலோரியும் அதிக புரதச்சத்தும் கொண்ட இது, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.. கணவாய் மீனில் நிறைந்துள்ள சத்துக்கள் மற்றும் அதன் மருத்துவ நன்மைகள் குறித்து இங்கு சுருக்கமாக நாம் பார்ப்போம்.
கணவாய் மீன்கள் முதுகெலும்பு இல்லாத மீன்வகையாகும். பார்ப்பதற்கு ஆப்டோபஸ் போலவே காணப்படும். இதனுடைய கண்களும் வித்தியாசமானது.. கணவான் மீன்களிலேயே நிறைய வகைகள் உள்ளதாம்.

வாலில் 2 துடுப்புகள் - 8 கைகள்
ரம்பம் போல பற்களும், உதடுகளும், தலையில் 8 கைகளும், வாலில் 2 துடுப்புகள் கொண்டிருக்கும் இந்த மீன்கள். இந்த 8 கைகளில்தான் தனக்கான உணவை தேடி கொள்கின்றன.. மீன் குஞ்சுகள், இறால்களை உணவாக சாப்பிடுமாம் கணவான்கள்.. 8 கைகளின் உட்புறங்களிலும் உறிஞ்சு கிண்ணங்கள் போல இருக்கும். இந்த கிண்ணங்களை வைத்துதான், இரையை லபக்கென பிடித்து சாப்பிடும்.
பாஸ்பரஸ், பொட்டாசியம், காப்பர், ஒமேகா-3 போன்ற சத்துக்களும், செலினியம் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்றவை நிறைந்துள்ளது மீன் கணவாய்.. 100 கிராம் கணவாய் மீனில் 44.8 µg செலினியம் நிறைந்துள்ளது. இந்த செலினியம் என்பது ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளது என்பதால், நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த உதவுகின்றன.
கணவாய் மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ள கெட்ட கொழுப்பின் (LDL) அளவைக் குறைத்து, நல்ல கொழுப்பின் (HDL) அளவை அதிகரிக்க உதவுகின்றன. இது இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுத்து, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. மேலும், இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.
கணவாய் என்றாலே கொழுப்பு மீன் என்பார்கள். இதிலிருக்கும் நல்ல கொழுப்புகள், இதய ஆபத்தை தடுப்பதுடன், தமனிகளில் படிந்துள்ள தேவையற்ற கொழுப்புக்களை கரைக்க உதவுகிறது.
B12 நரம்புகளின் ஆரோக்கியம்
இந்த மீனில் வைட்டமின் B12 உள்ளதால், இதய நோயாளிகள் சாப்பிடுவது நல்லது.. B12 நரம்புகளின் ஆரோக்கியத்திற்கும், மூளையின் சுறுசுறுப்பான செயல்பாட்டிற்கும் மிக முக்கியமானது. கணவாய் மீனில் இந்த வைட்டமின் நிறைந்துள்ளதால், இது நினைவாற்றலை மேம்படுத்தவும், மனச்சோர்வைக் குறைக்கவும் உதவுகிறது.
உடல் கட்டமைப்பை மேம்படுத்த விரும்புபவர்களுக்கும், தசை வளர்ச்சிக்கும் புரோட்டீன் சத்து அவசியமானது.. கணவாய் மீன் ஒரு சிறந்த தரமான புரோட்டீன் ஆதாரமாக இருப்பதால், இது தசைகளை வலுப்படுத்தவும், திசுக்களைப் பழுதுபார்க்கவும் உதவுகிறது. புரோட்டீன் உள்ளதால், உடல் எடை அதிகரிக்காது. குறைந்த கலோரி கொண்ட உணவு என்பதால் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் பயமின்றி இதனைச் சாப்பிடலாம்.
ரத்த சிவப்பணுக்கள்
இதில் உள்ள செலினியம் மற்றும் துத்தநாகம் (Zinc) போன்ற தாதுக்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகின்றன. செலினியம் ஒரு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாகச் செயல்பட்டு, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்க உதவுகிறது.
புற்றுநோய் தொடர்பான செல்களையும் அழிக்கும் சக்தி கணவான் மீன்களுக்கு உள்ளது. ரத்த சோகை பிரச்சனை உள்ளவர்களுக்கு கை கொடுத்து உதவக்கூடியது இந்த கணவான் மீன்கள்.. இதை உணவில் தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது, ரத்த சிவப்பணுக்களும், வெள்ளை அணுக்களும் அதிகமாகும். மூளைக்கு தேவையான ஆக்சிஜனும் கிடைக்கும்.. இதன்காரணமாக மூளை வளர்ச்சியும் அதிகமாகிறது.
சர்க்கரை நோயாளிகள்
சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை தரக்கூடிய மீன் இதுவாகும். இன்சுலின் குறைபாட்டையும் சமன்படுத்துகிறது. பாதரசம் மிகவும் குறைவாக உள்ள மீனாகவே கருதப்படுவதால், பயமின்றி உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ளலாம். இதிலிருக்கும் B3 ரத்தத்தின் சர்க்கரை அளவை சமச்சீராக வைப்பதற்கு உதவியாக இருக்கிறது. இதனால் தலைமுடியும் நன்கு வளர்ச்சி பெற முடியும்.
தைராய்டு தொந்தரவு உள்ளவர்கள், அலர்ஜி தொந்தரவு உள்ளவர்கள் தாராளமாக கணவான் மீனை சாப்பிடலாம்.. ஆண்மை குறைபாடுகளை தடுப்பதிலும் இந்த கணவான் மீன்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. தொடர்ந்து கணவான் மீன்களை சாப்பிட்டு வரும்போது, விந்து அதிகரிக்குமாம்..
எப்படி சமைக்கலாம்
கணவாய் மீன் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்றாலும், அதனை சமைக்கும் முறை மிக முக்கியம். இதனை எண்ணெயில் பொரித்து சாப்பிடுவதைத் தவிர்த்து, குழம்பாகவோ அல்லது மசாலா சேர்த்தோ சமைத்து சாப்பிடுவதே முழுமையான சத்துக்களைக் கொடுக்கும். மேலும், இதில் இயற்கையாகவே கொலஸ்ட்ரால் சற்று அதிகமாக இருப்பதால், ஏற்கனவே அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் இதனை மிதமான அளவில் உட்கொள்வது நல்லது என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.












Click it and Unblock the Notifications