பன்னீர்செல்வம் என் கையை நீட்ட சொன்னார்.. நானும் நீட்டினேன்.. அப்ப திடீர்னு".. பூரித்த ராமதாஸ்.. வாவ்
டாக்டர் ராமதாஸ் தனக்கு பிடித்தமான நண்பர் பன்னீர்செல்வம் என கூறியுள்ளார்
சென்னை: பன்னீர்செல்வம்தான் எனக்கு மிகவும் பிடித்த நண்பர் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சொன்னதை கேட்டு, அவரது தொண்டர்கள் வியந்து போயுள்ளனர்..!
அதிமுக, பாஜக கூட்டணியில் பாமக இருந்தபோதிலும், அன்று முதல் இன்றுவரை தமிழக நலன் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
தமிழக நலன்களை விட்டுத் தர மாட்டோம் என்று அன்றும், இன்றும் தெளிவாக சொல்லி வருகிறார் டாக்டர் ராமதாஸ்.

ஆக்டிவ் ராமதாஸ்
இந்தி திணிப்பு விவகாரம் ஆகட்டும், இந்தியில் பேச வேண்டும் என்ற அறிவிப்பு ஆகட்டும், அஞ்சல்துறை தேர்வு ஆகட்டும், மத்திய அரசின் எந்தவித அறிவிப்பு வந்தாலும், அதற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்யும் தலைவர்களில் ஒருவர் டாக்டர் ராமதாஸ்.. சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாகவும் இருந்து வருகிறார்.. அரசியல் குறித்த பதிவுகள் தவிர, சில சமயம், தனக்கிருக்கும் ஆசைகள் அனைத்தையும் சின்ன சின்ன ஆசை என்ற தலைப்பில் மனம் திறந்து முகநூல் பதிவுகளில் தெரியப்படுத்துவார்..

கொள்ளுப்பேரன்
இப்படித்தான் ஒருமுறை, கொள்ளுபேரப் பிள்ளைகளை வைத்து ஒரு பாட்டு எழுதினார் ராமதாஸ்.. அதில், "என்ன இந்த பூமி? என்பதையறிய எனது கொள்ளுப்பேரன், பேத்திகளுடன் சுற்றி வர ஆசை.. வீட்டுக்குள் நடக்கும் ஓட்டப்பந்தயத்தில் அவர்களை முந்தும் வேகத்தில் ஓடி, அவர்களிடமே கைத்தட்டல் வாங்க ஆசை... எனக்கிருக்கும் கொள்ளுப்பேரன், பேத்திகள் நால்வருடன் சேர்ந்து ஐந்தாவதாக நானும் ஒரு குழந்தையாக மாறி குதூகலிக்க ஆசை" என்று பாட்டுக்களை எழுதி தானும் ஒரு குழந்தையாகவே மாறிப்போனார் ராமதாஸ்.

தைலாபுரம்
ஒருமுறை ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார்.. அதில், "எனது மூன்றரை வயது கொள்ளுப் பெயரன் அகிரா இன்று சென்னையிலிருந்து தைலாபுரம் தோட்டத்திற்கு வந்தான்... என்னருகே வந்ததும், ''சாப்பிட்டீங்களா தாத்தா?'' என்று கேட்டான். மெய்சிலிர்த்துப் போனேன். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!" என்று பதிவிட்டிருந்தார்.. அந்தவகையில், இப்போது, தன்னுடைய நண்பர் ஒருவரை பற்றி சிலாகித்து பேசியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.

நெறியாளர்
மூத்த தலைவர்களை தனியார் ஊடகம் ஒன்று சிறப்பு நேர்காணல் எடுத்து வருகிறது... அந்த வரிசையில் ராமதாஸிடமும் நேரடியாகவே பேட்டி எடுத்துள்ளது.. அதில், சிறு வயது முதல் அரசியல் எழுச்சி வரை ராமதாஸ் நிறைய விஷயங்களை பகிர்ந்துள்ளார்.. அதாவது, "உங்களுடைய இத்தனை வருட அரசியல் வாழ்க்கையில், உங்களுக்கு மிகவும் பிடித்தவர் யார்? என்ற கேள்வியை நெறியாளர் முன்வைக்கிறார். அதற்கு ராமதாஸ், தன்னுடைய நண்பர் ஒருவரை பற்றி சுவாரஸ்யமாக அதில் பகிர்ந்துள்ளார்.

பேக்கிரவுண்ட்
"உங்களிடம் ஏற்கனவே என்னுடைய பள்ளிப்பருவ வாழ்க்கை பற்றி சொல்லியிருக்கிறேன்.. நான் சென்னையில் படிக்கும்போது எனக்கு உற்ற துணையாக இருந்தவர் என் நண்பர் பன்னீர்செல்வம் தான்... அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்.. ஓரளவுக்கு வசதியான குடும்ப பின்னணியையும் கொண்டவர்... நான் பல நேரங்களில் சாப்பிடாமல் இருப்பேன்.. அவர்தான் தன்னுடைய சாப்பாட்டை எனக்கும் பகிர்ந்து தருவார்.

வாட்ச்
நான் அப்போதெல்லாம் பள்ளிக்கு தாமதமாக வந்து கொண்டிருந்தேன்.. ஒருநாள் பன்னீர்செல்வம், என் கையை நீட்ட சொன்னார்.. எதற்கு என்று தெரியாமலேயே நானும் தயக்கத்துடன் கையை நீட்டினேன்.. அப்போது திடீர்னு என் கையில் ஒரு வாட்ச் கட்டிவிட்டார்.. நான் ரொம்பவும் நெகிழ்ந்து போய்விட்டேன்.. முதல் முதலில் அப்போதுதான் நான் வாட்ச் கட்டினேன்... அதனால், பன்னீர்செல்வம்தான் எனக்கு மிகவும் பிடித்தவர்" என்றார் டாக்டர் ஐயா...!!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications