தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நோட்டீஸ்- ரூ.500 கோடி நஷ்ட ஈடு கோரும் பி.ஜி.ஆர். நிறுவனம்!
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ரூ500 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்று பி.ஜி.ஆர். எனர்ஜி சிஸ்டம்ஸ் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள அண்ணாமலை, நான் ஒரு சாதாரண விவசாயி என்னிடம் இருப்பது சில ஆடுகள் மட்டும்தான்! நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை உள்ளது என கூறியுள்ளார்.
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அண்மையில் சில குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். மேலும் மின்சார கொள்முதலில் ஊழல் நடப்பதாகவும் கூறியிருந்தார்.

பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி
இதனை மறுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி அண்ணாமலை இதற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியிருந்தார். மேலும் கோபாலபுரம் பிஜிஆர் எனர்ஜி மின்சார அமைச்சகம் செந்தில் பாலாஜி இந்தப் புள்ளிகளை இணைத்து பாருங்கள்... விடை எளிதில் புரியும் எனவும் ட்விட்டரில் அண்ணாமலை பதிவிட்டிருந்தார். அவரது இந்த தொடர் பதிவுகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கடும் பதிலடி கொடுத்து வந்தார்.

ரூ500 கோடி கேட்டு நோட்டீஸ்
இந்நிலையில் பிஜிஆர் நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் தினேஷ்குமார் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அந்த நோட்டீஸில் பிஜிஆர் நிறுவனம் தொடர்பாக ஆதாரங்கள் இல்லாமல் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். ஆகையால் பிஜிஆர் நிறுவனத்துக்கு ரூ500 கோடி நட்ட ஈடு தர வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது. இந்த வக்கீல் நோட்டீஸை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அண்ணாமலை.

விவசாயி- சில ஆடுகள்
மேலும் சார், 500 கோடி ரூபாய்க்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றீர்கள் - நான் ஒரு சாதாரண விவசாயி என்னிடம் இருப்பது சில ஆடுகள் மட்டும்தான்! ஊழல் செய்து கொடுப்பதற்கு எதுவுமில்லை! நம்முடைய நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை இருக்கிறது! சந்திப்போம்! என பதிவிட்டிருக்கிறார். அண்ணாமலையில் நான் ஒரு சாதாரண விவசாயி என்ற இந்த ட்விட்டர் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு விமர்சிக்கப்பட்டு வருகிறது.

அண்ணாமலை சொத்து விவரம்
அண்ணாமலையின் வேட்புமனு தாக்கலின் போது கொடுக்கப்பட்ட சொத்து விவர நகல்களும் ஷேர் செய்யப்பட்டு இதுதான் ஒரு சாதாரண விவசாயியின் வருமானமா? என்கிற கேள்விகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. திமுக எம்.பி. செந்தில்குமார் தமது ட்விட்டர் பக்கத்தில், என்ன ஒண்ணுமே புரியல - இப்போ தான் மேல கைய வைச்சு பாரு வட்டியும் முதலும்மா திருப்பி கொடுப்போம் என்று சொல்லிட்டு வழக்கு போட போறாங்க என்றதும் சாதாரண விவசாயியா மாறிடறாங்க. பாவம் இதுல அவர் வளர்க்கும் ஆடுகள் வேற ஏன் சமந்தம் இல்லாம உள்ளே இழுத்து விடுறாங்க என கிண்டலடித்துள்ளார்.
-
இங்க இருக்குற திருவண்ணாமலைக்கு ஏர்போர்ட்.. அந்த பேச்சு பேசின அஸ்வத்தாமன் பெயர் லிஸ்டில் இல்லையே! -
“பாஜகவுக்கு ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்துட்டேன்”.. கூலாக சொன்ன புதிய நீதிக்கட்சி தலைவர் AC சண்முகம் -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை! -
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
செருப்பு போடாதவர்.. 75 வயதில் முதல்முறை எம்எல்ஏ.. யார் இந்த நாகர்கோவில் பாஜக வேட்பாளர் காந்தி? -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்! -
அண்ணாமலை மிஸ்ஸிங்.. அமித் ஷா பிளான்.. அடுத்து என்ன? அண்ணாமலை எடுக்கும் முடிவு இதுதான்? -
மிட்நைட்டில் 4%வாக்குப் பதிவு? 'ஆந்திரா' பாணியில் தேர்தல்? எச்சரித்த நிர்மலா கணவர் -
புதுச்சேரியில் பிரதமர் மோடி ரோடுஷோ.. மலர்தூவி உற்சாக வரவேற்பு கொடுத்த மக்கள்.. -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்?












Click it and Unblock the Notifications