பாரத் பந்த்: மத்திய அரசை கண்டித்து இன்று 2வது நாளாக வேலைநிறுத்தம் தொடரும் என அறிவிப்பு
இன்று 2வது நாளாக தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் குதித்துள்ளன
சென்னை: தொழிற்சங்க கூட்டமைப்பினரின் 2 நாள் பொது வேலைநிறுத்தம் இன்றும் 2வது நாளாக தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் ஒன்று திரண்டுள்ளன.. இதற்காக 2 நாள் பொது வேலை நிறுத்தத்தையும் கையில் எடுத்துள்ளன.
மத்திய, மாநில அரசு ஊழியர் சங்கங்கள், சிஐடியு, ஐஎன்டியுசி, எம்எம்எஸ், ஏஐடியுசி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவும் தெரிவித்திருந்தன.

2 நாள் ஸ்டிரைக்
குறிப்பாக, தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிட வேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக் கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியே, மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பினர் 2 நாள் பொது வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தனர்.

ஆதரவு - மறியல்
நேற்றைய தினம் முதல்நாள் போராட்டம் நடந்த நிலையில், பல்வேறு மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது... தமிழகத்திலும் திமுக உட்பட பல்வேறு கட்சிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தன... பல தொழிற்சங்க தொழிலாளர்கள், அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள், போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறை தொழிலாளர்கள் என ஏராளமானோர் போராட்டத்தில் குதித்தனர்.

சம்பளம்
இதனால், அந்தந்த துறை சார்ந்த பாதிப்புகளும் நிறையவே ஏற்பட்டன.. இத்தனைக்கும், ஊழியர்கள் வேலைக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது என்று மத்திய, மாநில அரசுகள் எச்சரித்தபோதும்கூட பொது வேலைநிறுத்தம் நேற்றைய தினம் தீவிரமாக நடந்து முடிந்தது.. பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டாலும்கூட, நேற்றைய தினம் சுமார் 68 சதவீத பஸ்கள் இயங்கவில்லை.

ஹைலைட்
இதில் ஒரு ஹைலைட் என்னவென்றால், அண்ணா தொழிற்சங்கத்தினர் மட்டும் இந்த ஸ்டிரைக்கில் பங்கேற்க போவதில்லை என்று அறிவித்திருந்தனர். ஆனால், அந்த சங்கத்தை சேர்ந்த டிரைவர்கள், கண்டக்டர்களும் மறியல் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதால், தமிழகத்தில் போக்குவரத்து அதிகமாகவே பாதிக்கப்பட்டது... அரசு பேருந்து இயங்கவில்லை என்பதால், மக்கள் தனியார் பஸ்களைதான் தேடி ஓடினார்கள்.. பெரும்பாலானோர் ரயில்களில் பயணம் செய்ய முயன்றதால், ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது...

பள்ளி மாணவர்கள்
அதிலும் அலுவலகம் செல்பவர்களும், பள்ளி கல்லூரி மாணவர்களும் பஸ் இல்லாமல் அவதிப்பட்டனர்.. இதுதான் சாக்கு என்று ஆட்டோ, டாக்சிகளில் 3 மடங்கு பணத்தை வசூலித்துவிட்டனர்.. வங்கி ஊழியர் சங்கங்கள் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் மற்றும் தி.நகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது... இதனால் வங்கி சேவை பாதிக்கப்பட்டாலும், வங்கி ஆன்லைன் சேவைகள் இயங்கின.. ஏடிஎம்-களும் வழக்கம்போலவே இயங்கின.

2வது நாள்
தமிழகத்தில் ரயில், சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட கிட்டத்தட்ட 37 ஆயிரம் பேரை போலீஸார் கைது செய்து, பிறகு விடுவித்துவிட்டனர்.. நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் சுமார் 165 இடங்களில் மறியல் போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்ட நிலையில், இன்று 2வது நாளாக இன்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications