தமிழகத்தில் மத்திய அரசின் சூப்பர் திட்டம்.. நம்ப முடியாத விலையில் பருப்பு, கோதுமை.. இதை பாருங்க
சென்னை: தமிழகத்திலும் பாரத் பிராண்ட் பெயரில் தரமான பருப்பு வகைகளை மானிய விலையில் விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசின் என்சிசிஎப் அமைப்பு தொடங்கி உள்ளது. ஏற்கனவே இந்த திட்டம் வட இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தமிழகத்திலும் வரவேற்பை பெறும் என தெரிகிறது..
மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் பிரிவான இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (என்சிசிஎப்) 'பாரத் தால்' என்ற பெயரில், மானிய விலையில் துவரம் பருப்பு விற்பனை செய்ய உள்ளதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம், மத்திய அரசு அறிவித்திருந்தது.

இதன்படி பருப்பு வகைகள் நுகர்வோருக்கு மலிவு விலையில் கிடைக்கும் வகையில் பருப்பு வகைகள் 1 கிலோ பேக் ஒன்று கிலோ ரூ. 60க்கும், 30 கிலோ மூட்டை ஒரு கிலோ ரூ. 55 என்ற அடிப்படையில் விற்கப்படும் என்றும் மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணை அமைச்சர் அஸ்வினி கடந்த ஆண்டு கூறியிருந்தார்.
இதனிடையே உள்நாட்டில் கிடைக்கும் பருப்பு வகைகளை அதிகரிக்கவும், பருப்புகளின் விலையை குறைக்கவும், துவரம் பருப்பு மற்றும் உளுந்து இறக்குமதிக்கான வரி பூஜ்ஜியம் ஆக வரும் மார்ச் 31 வரை குறைத்தது மத்திய அரசு. மசூர் மீதான இறக்குமதி வரி 2024 மார்ச் 31 வரை வரியே இல்லை என்றும் அறிவித்திருக்கிறது. மேலும் விலை உயர்வை தடுக்க பருப்புகளை கடைகளில் அதிக ஸ்டாக் வைப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதித்தது.
இதனிடையே விலைவாசி உயர்வை குறைக்வும், உணவுப் பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், உணவு தானியங்களை மானிய விலையில் விற்பனை செய்யும் பாரத் பிராண்ட் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். இந்த திட்டம் வட இந்திய மாநிலங்களில் அதிகப்படியான வரவேற்பை பெற்றள்ளது. இந்த நிலையில், தற்போது தமிழகத்திலும் பாரத் பிராண்ட் பெயரில் பருப்பு வகைகளை மானிய விலையில் விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசின் என்சிசிஎப் அமைப்பு தொடங்கி இருக்கிறது.
தமிழ்நாட்டில் 50 நடமாடும் வேன்கள் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நகரம் மற்றும் கிராமங்களின் முக்கிய இடங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அதிக தரம் வாய்ந்த பருப்பு வகைகளை மானிய விலையில் விற்பனை செய்ய மத்திய அரசு ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த நடமாடும் வேன்களில் துவரம்பருப்பு ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், கோதுமை 27.50 ரூபாய்க்கும் கிடைக்கிறது. இந்த திட்டத்திற்கு தமிழகத்திலும் அதிக வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications