ஆளுநர் ரவி போட்ட அதிரடி உத்தரவு.. பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர் செல்வம் பதவிகாலம் நீட்டிப்பு!
சென்னை: பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வத்தின் பதவிக்காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. துணைவேந்தர் செல்வத்தின் பதவிக்காலத்தை நீட்டித்து தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக எம்.செல்வம் கடந்த 2021ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார். அப்போதைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், எம்.செல்வத்தை துணைவேந்தராக நியமனம் செய்தார்.

எம். செல்வம் 36 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வித் துறையில் அனுபவம் கொண்டவர். அழகப்பா பல்கலைக்கழகத்தின் சர்வதேச வணிக மற்றும் வர்த்தக மேலாண்மைத் துறை தலைவராகவும், பேராசிரியராகவும் இருந்தவர். அதைத் தொடர்ந்து, அவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், துணைவேந்தர் எம்.செல்வத்தின் பதவிகாலம் இந்த மாதத்துடன் நிறைவடையும் நிலையில், அவரது பதவிகாலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை, பாரதிதாசன் பல்கலை. துணைவேந்தராக எம். செல்வம் தொடர்வார்.
-
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications