சக்கிலியனுக்கு எதுக்கு ஜெமினி கணேசன் மாதிரி அழகான மூஞ்சி.. வைரலாகும் பாரதிராஜாவின் வீடியோ
சென்னை: சக்கிலியனுக்கு எதற்கு ஜெமினி கணேசன் மாதிரி அழகான மூஞ்சி என இயக்குநர் பாரதிராஜாவின் வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
ஜெய்பீம் படம் குறித்து சூர்யாவுக்கு பாமக இளைஞரணி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியிருந்தார். அதில் 9 கேள்விகளை சூர்யாவுக்கு கேட்டிருந்தார். இந்த நிலையில் அன்புமணி ராமதாஸுக்கு பாரதிராஜா ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
அதில் ஜெய்பீம் படத்தை பூதக்கண்ணாடியை கொண்டு குற்றம் பார்க்கத் தொடங்கினால் எந்த ஒரு படைப்பும் எளியோருக்காக பேசாமல் முடங்கிவிடும். ஒரு படைப்பை படைப்பாக மட்டுமே பாருங்கள். படைப்பின் சுதந்திரத்தை அதன்படியே விட்டுவிடுவது இன்னும் அதிகமான நல்ல படைப்புகளைக் கொண்டுவர உதவும் என பாரதிராஜா குறிப்பிட்டிருந்தார்.

பாரதிராஜாவுக்கு அன்புமணி கடிதம்
இந்த நிலையில் பாரதிராஜாவுக்கு அன்புமணி ராமதாஸ் பதில் கடிதம் எழுதியிருந்தார். அதில் படைப்புச் சுதந்திரம் சூர்யாவுக்கு மட்டும்தானா. ஜெய்பீம் படத்தில் அக்னி கலசம் சின்னம் பொருந்திய காலண்டருக்கு பதிலாக முத்துராமலிங்கத் தேவரின் படம் இருந்தால் நீங்களும் தேவர் சமுதாயமும் படைப்பு சுதந்திரம் என சும்மா இருந்திருப்பீர்களா என கேள்வி எழுப்பியிருந்தார்.

சூர்யாவுக்கு எதிர்ப்பு
ஜெய்பீம் தொடர்பாக சூர்யாவுக்கு எதிர்ப்புகளும் பாராட்டுகளும் குவிகின்றன. இந்த நிலையில் பாரதிராஜா பார்க்கும் வரை பகிரவும் என கூறி ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில் ஏதோ ஒரு திரைப்படத்தின் விழாவில் கலந்து கொண்ட பாரதிராஜா பாக்யராஜுடன் நின்று பேசுகிறார். அவர், என் கதைக்கு என் மூஞ்சி, உன் கதைக்கு உன் மூஞ்சி #சக்கிலியனுக்கு ஜெமினிகணேசனின் அழகான மூஞ்சி தேவையா? என கேள்வியெழுப்பியுள்ளது எந்த அரசியல் கட்சியும் கண்டிக்கவில்லை என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.

வேதம் புதிது
படைப்பு சுதந்திரம் என கூறிக் கொள்ளும் பாரதிராஜா தான் இயக்கிய வேதம் புதிது திரைப்படத்தில் பாலு தேவர் என்ற கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்திருப்பார். அவர் ஒரு பிராமண சமூகத்தை சேர்ந்த சிறுவனை தத்தெடுப்பார். இதனால் வேதம் படிக்க விரும்பும் சிறுவனுக்கு ஒருவரும் வேதம் கற்றுத் தர மாட்டார்கள். ஒரு நாள் அந்த சிறுவனை தோள் மீது உட்கார வைத்துக் கொண்டு ஆற்றை கடந்து கொண்டிருப்பார்.

பாலு
அப்போது மறுகரை வந்தவுடன் சிறுவனை இறக்கிவிடும் சத்யராஜ் காலை கழுவிக் கொண்டே கூறுவார், " நம்மாளுங்களுக்கு ஜாதி எனும் ஆணியை ஆழமாக அடிச்சிட்டாங்க, அதான் இடைஞ்சல் என்பார். அதற்கு அந்த சிறுவன் இடைஞ்சல்ன்னா என கேட்பான், அதற்கு சத்யராஜ் புரியலையா ஜாதிதான் என்பார். உடனே அந்த சிறுவன் என்பது உங்கள பேரு என்ன என கேட்க, அதற்கு சத்யராஜ் இந்த ஊரில் விரல் சப்பும் குழந்தை கூட என் பெயர் பாலு தேவர் என சொல்லும் என்பார். உடனே அந்த சிறுவன் பாலு என்பது உங்களது பெயர், தேவர் என்பது நீங்கள் படித்து வாங்கிய பட்டமா? (சத்யராஜின் முகமே மாறிவிடும்) ஜாதி இல்லை ஜாதி இல்லைனு சொல்லும் நீங்களே மூச்சுக்கு முன்னூறு முறை பாலு தேவர் பரம்பரை பாலு தேவர் பரம்பரைனு சொல்லிகிட்டு இருக்கீங்களே என சிறுவன் கேட்டது சத்யராஜின் கன்னத்தில் அறைந்தது போல் இருக்கும். நான் கரை ஏறிவிட்டேன், நீங்கள் இன்னும் கரையேறவில்லை என கேட்பான். சத்யராஜ் அப்படியே ஸ்தம்பித்து நிற்பார். இந்த படமும் இந்த காட்சியும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அது போல் ஜாதிக்கு முக்கியத்துவம் தரக் கூடாது என்பதை போல் படம் எடுத்த பாரதிராஜா, தனது முதல் மரியாதை படத்தில் அப்படியே நேர் மாறாக எடுத்திருப்பார்.

உயர் ஜாதி
ஒரு தலித் பெண்ணை கொலை செய்தது தன் ஜாதிக்காரனே என்று தெரிந்தும் அவனுக்கு தண்டனை வாங்கி தந்த நீதிமானாக, முக்கியமாக தலித் தோழனாக சிவாஜியின் கேரக்டர் காட்டப்பட்டிருக்கும். ஆனால், தன் காலில் முள் குத்தியதும், அதை குனிந்து எடுக்காமல், "செங்கோடா" என்று ஒரு தாழ்த்தப்பட்டவரை அழைத்து, அந்த முள்ளை எடுக்க சொல்லும் காட்சியில் தலித் விரோதம்தான் தென்பட்டது, தன் ஜாதி திமிர்தான் வெளிப்பட்டது என்று பரவலான சர்ச்சைகளையும் அந்த படம் அப்போது தாங்கி வந்தது. இந்நிலையில்தான் சக்கிலியனுக்கு ஜெமினி கணேசனின் அழகான மூஞ்சி தேவையா என கேள்வி எழுப்பியுள்ளது மீண்டும் வைரலாகி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications