மனோஜ் எங்கே? போட்டோ பார்த்து கேட்கும் பாரதிராஜா! சகோதரர் ஜெயராஜ் கண்ணீர்!
சென்னை: தனது மகன் புகைப்படத்தை பார்த்து மனோஜ் எங்கே என பாரதிராஜா கேட்பதாக அவருடைய சகோதரர் ஜெயராஜ் உருக்கமாக தெரிவித்துள்ளார். மேலும் மனோஜ் இறந்த அன்று என்ன நடந்தது என்பது குறித்தும் அவர் கூறியிருக்கிறார்.
கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மரணம் யாரும் எதிர்பாராத ஒன்று. அவருக்கு நம்பிக்கையை கொடுக்கும் அளவிற்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது. அவருடைய வயதும் 48 தான்.

மதியம் நன்றாக பேசிக் கொண்டிருந்தவர், திடீரென மயங்கி விழுந்து இறந்தது என பலருக்கும் மனோஜின் இறப்பை ஏற்க முடியவில்லை. அதிலும் மனோஜுடன் பழகியவர்களுக்கும் பாரதிராஜாவின் அபிமானிகளுக்கும் இதை ஏற்க முடியவில்லை.
மனோஜுக்கு என்ன நடந்தது
மனோஜ் குறித்து அவருடைய சித்தப்பா ஜெயராஜ் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மனோஜ் எல்லோருடனும் நன்றாக பேசுவார். அவருக்கு என் மீது பாசம் அதிகம். சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில்தான் அவருக்கு அண்மையில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்தோம்.
பப்பாளி சாப்பிட்ட மனோஜ்
அதன் பிறகு அவர் தனது வீட்டில் ஓய்வில்தான் இருந்தார். இறந்த தினத்தின் போது கூட தனது தந்தை பாரதிராஜாவுடன் நன்றாக பேசிக் கொண்டிருந்தாராம். அன்று மாலை பப்பாளி பழத்துண்டுகளை சாப்பிட்டாராம். அப்போதுதான் தனக்கு உடல் ஏதோ செய்கிறது என கூறியுள்ளார். என்ன செய்கிறது என கேட்பதற்குள் மயங்கிவிட்டார். இதையடுத்து அவரை அழைத்துக் கொண்டு சிம்ஸ் மருத்துவமனைக்கு சென்ற போது அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மகன் எங்கே
மகனின் இறப்பை பாரதிராஜாவால் ஏற்க முடியவில்லை. அவருடைய புகைப்படத்தை பார்த்து மனோஜ் எங்கே என கேட்கிறார். அவரை பொருத்தவரை மனோஜ் உயிரோடு இருப்பதாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறு ஜெயராஜ் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
தாஜ்மகால்
பாரதிராஜா இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு தாஜ்மகால் என்ற திரைப்படத்தில் மனோஜ் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து சமுத்திரம், அல்லி அர்ஜுனா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். விருமன், மாநாடு படத்திலும் மனோஜ் நடித்திருந்தார். அவருடைய மனைவி பெயர் நந்தனா.
பக்கபலமாக இருந்த நந்தனா
நந்தனாவும் நடிகைதான். திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டார். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நந்தனாவை ஆரம்பத்தில் தனக்கு பிடிக்கவில்லை என்றும் போக போக அந்த பெண் இல்லை என்றால் மனோஜ் இல்லை என்ற அளவுக்கு அந்த பெண்ணை பிடித்துவிட்டதாகவும் தனது மகனை அந்த அளவுக்கு ஆறுதல் சொல்லி மாற்றியிருப்பதாகவும் பாரதிராஜா ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
83 வயது பாரதிராஜா
மனோஜும், நந்தனாவும் அவருடைய இரு குழந்தைகளும் இல்லாவிட்டால் மன அழுத்தத்தால் தான் தற்கொலை செய்திருப்பேன் என மனோஜே ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். மனோஜின் இறப்பை 83 வயதாகும் பாரதிராஜாவால் ஏற்க முடியவில்லை.
கதறிய பாரதிராஜா
தனது மகன் உடலை பார்த்து கதறி அழுதார். ஒரு கட்டத்தில் அவர் தனது மகனையே பார்த்தபடி எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் இருந்தார். பின்னர் உடனிருந்தவர்கள் அவரை தேற்றினர். அது போல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் கூட கதறி அழுத பாரதிராஜா, காரில் அவரை உட்கார வைத்த போது தனது மகனை பார்க்க வேண்டும் என அழுதார். "நான் சரியா பார்க்கலை" என அழுத காட்சி காண்போரை கலங்கச் செய்தது. ஒரு கட்டத்தில் அவரால் நடக்க முடியாமல் அவரை நாற்காலியில் தூக்கிக் கொண்டு தனது மகனுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வைத்தனர். இந்த நிலையில் மகனின் புகைப்படத்தை பார்த்து அவர் எங்கே என கேட்பதாக ஜெயராஜ் கூறுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது












Click it and Unblock the Notifications