"டீல் ஓகே?".. எல்லாமே "அந்த" காரணம்தான்.. அங்கே ராகுல்.. இங்கே மோடி.. பிரம்மாஸ்திரம் எடுக்கும் திமுக
ராகுல்காந்தி ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன
சென்னை: இந்த முறை தேர்தலில், தமிழகத்தை குறி வைத்து தேசிய தலைவர்கள் நகர்ந்து வருவதுடன், அதற்கான சைலண்ட்கள் மூவ்களும் நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன...!!
விரைவில் எம்பி தேர்தல் வரவுள்ள நிலையில், தேசிய கட்சிகள் அதற்கு தயாராகி வருகின்றன.. அந்தவகையில், சமீபகாலமாகவே ராகுல் காந்தியின் அரசியல் உற்றுநோக்கப்பட்டு வருகிறது..
இதற்கு முக்கிய காரணம், அவர் மேற்கொண்ட யாத்திரைதான்.. இந்திய வரலாற்றை பொறுத்தவரை, பெரும் தலைவர்களுக்கு பெரிதும் கைகொடுத்து உதவியுள்ளது யாத்திரைகள்தான்..

அத்வானி
காந்தியின் தண்டி யாத்திரை முதல் அத்வானியின் ரத யாத்திரை வரை இந்தியா ஏராளமான யாத்திரைகளை கண்டுள்ளது இந்த நாடு.. அவ்வளவு ஏன், நம் தமிழகத்தில்கூட, இந்தி திணிப்பு முதல் வைகோவின் பாதயாத்திரை வரை, அழியாத தடங்களை பதித்து சென்றுள்ளன.. இதன்மூலம் மக்களுடன் நேரடியாக நெருங்கி சந்திப்பதால் ஏற்படக்கூடிய தாக்கங்கள், அதிர்வுகள் அதிகம்.. அந்தவகையில்தான், ராகுல் பாதயாத்திரையை கையில் எடுத்தார்.. அதைவிட முக்கியம், அந்த யாத்திரையை ராகுல், தமிழகத்தில் இருந்து துவக்கியதுதான்..

கிண்டலடிச்சாரு
பாஜக இந்த யாத்திரையை முதல்நாளே கிண்டலடித்தது.. ஒன்றேகால் மணிநேரம் நடைப்பயிற்சி செய்வது போல உள்ளது என்று சீமானும் கிண்டலடித்தார்.. ஆனாலும், இந்தியா முழுவதும் ராகுலின் இந்த நடைபயணம்தான், இந்த வருடம் அவரது அரசியலை தூக்கி நிறுத்தி அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு போயுள்ளது என்றே சொல்லலாம். இந்த யாத்திரையை தமிழ்நாட்டில் துவக்க காரணம் இல்லாமல் இல்லை.. கடந்த சில வருடங்களாகவே, ராகுலின் பேச்சில் தமிழ்நாட்டு அரசியல் நெடி பொதிந்து வருகிறது.

ராகுல் அண்ணா
அன்று பாராளுமன்றத்தில், "எப்போதும் எந்த சூழலிலும் தமிழக மக்களை உங்களால் ஆட்சி செலுத்த முடியாது ; ஆளுமை செலுத்தவும் முடியாது" என்று பாஜகவிடம் சீறியதை நாடே கண்டு வியந்தது.. ஏன் தமிழ்நாடு பெயரை மட்டும் பல முறை உச்சரித்தீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கும் "ஏனென்றால் நானும் தமிழன்" என்று சட்டென யோசிக்காமல் பதில் தந்ததும் ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.. ராகுலை பொறுத்தவரை நிறைய முறை தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறார்.. தமிழக சகோதரிகள் ராகுலை அண்ணா என்று கூப்பிடுவதையும், பாசத்துடன் நெருங்கி பழகுவதையும் பலமுறை பார்த்துள்ளோம்..

மண்பானை சோறு
அரசியல் ரீதியாக எடுத்து கொண்டால், மறைந்த தலைவர் கருணாநிதியை சந்திக்க வந்தது முதல், உதயநிதியுடன் சேர்ந்து ஜல்லிக்கட்டு, மண்பானை சோறு வரை ராகுலின் தமிழக தடங்கள் இன்னும் பளிச்சிட்டே காணப்படுகின்றன. எனினும், இந்த பற்றையெல்லாம் தாண்டி, அரசியலே ராகுலின் பேச்சுக்கு காரணமாக இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.. ராகுல்காந்திக்கு திடீரென தமிழகத்தை பற்றி அதிகம் பேச வேண்டிய தேவை என்ன இருக்கிறது? எல்லாம் ஒரு அரசியல் கணக்கு என்றும் சொல்கிறார்கள்.

ஸ்ரீபெரும்புதூர்
கடந்த லோக் சபா தேர்தலில் கேரளாவில் நின்று வெற்றிப்பெற்ற ராகுல் காந்தி, 2024-ல் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட திட்டமிடுவதாகவும், அதற்காகவே, தமிழகத்தின் மீது அக்கறை இருப்பது போல காட்டுவதற்கு ஒத்திகைப் பார்க்க துவங்கியுள்ளதாகவும் கடந்த ஒரு வருடமாகவே சலசலக்கப்பட்டு வருகிறது.. பாராளுமன்றத்தில் ராகுல் அன்று பேசியதற்கு, முதல்வர் நன்றி தெரிவித்து, ராகுலின் விருப்பத்திற்கு கண் அசைத்து ஒப்புதல் சிக்னல் தந்துவிட்டதாகவும் அப்போதே மீடியாக்களில் முணுமுணுக்கப்பட்டன.

செண்ட்டிமென்ட்
இதை மனதில் வைத்துதான், "தமிழ்நாட்டை தன் வாழ்நாளில் பாஜக ஆளவே முடியாது" என்ற வார்த்தையை, ராகுல் துணிந்து உதிர்த்துள்ளார் என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, ராகுல் எந்த தொகுதியில் போட்டியிட போகிறார் என்ற விஷயம்கூட கசிந்தது.. தன்னுடைய அப்பா உயிரிழந்த ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை செண்டிமெண்ட்டாக ஸ்டாலினிடம் கேட்க யோசித்து வருகிறாராம்... ஒருவேளை ஸ்ரீபெரும்புதூரை ராகுல் கேட்டாலும், அதற்கு ஸ்டாலினும் எவ்வித மறுப்பும் சொல்ல போவதில்லை என்றும் அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்..

பச்சை தமிழன்
அதுமட்டுமல்ல, தமிழகத்தில் போட்டியிடுவது, தென் மாநிலங்களில் அதிக இடங்களில் வெல்ல உதவும் என்று ராகுல் நினைப்பதாகவும், அதற்கான முன் தயாரிப்பாகவே, தமிழகம், தமிழ் மொழி பற்றிய ராகுலின் பேச்சுக்கள் அமைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.. காங்கிரஸை தவிர்த்துவிட்டு திமுகவால் கூட்டணி அமைக்க முடியாத சூழல் உள்ளது.. தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான கட்டமைப்பை உருவாக்க முதல்வர் ஸ்டாலின் முயற்சி எடுத்து வரும்நிலையில், காங்கிரஸின் ஒத்துழைப்பு இல்லாமல் அது நடக்காது என்பதையும் திமுக மேலிடம் நன்கே அறிந்து வைத்துள்ளது.

ஹோப் கமல்
சோனியா காந்தி, ராகுல் மீது தனிப்பட்ட பிரியத்தையும், அன்பையும் பொழிந்துவரும் முதல்வர் ஸ்டாலின், கூட்டணி விஷயத்திலும் விட்டுக்கொடுக்காமல், ராகுல் கேட்கும் தொகுதியையும் தாராளமாக வழங்கி உறுதுணையாக நிற்கும் என்றே நம்பப்படுகிறது.. ராகுல் ஸ்ரீபெரும்புதூரில் நிற்பதாக ஒருவருடமாகவே தகவல்கள் வட்டமடித்து வரும்நிலையில், ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட வாய்ப்புள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.. அதற்காகத்தான், கடந்த எம்பி தேர்தலின்போதே, அதிமுக கூட்டணியில் இருந்தபோது, இந்த ராமநாதபுர தொகுதியை பாஜக கேட்டு வாங்கியது.

அச்சாரம் போட்டாச்சு
சமீபத்தில் காசியில் தமிழ் சங்கமம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளதும், இதற்கான அச்சாரம் போடுவதற்காகதான் என்று பாஜவினர் சொன்னதாக, தி சண்டே கார்டியன் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.. இந்நிலையில், பிரதமர் தமிழகத்தில் போட்டியிட இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது.. ஒருவேளை மோடி, ராமநாதபுரத்தில் போட்டியிடுவதாகவே இருந்தாலும்கூட, கமல் போன்றவர்களுக்கு அதே தொகுதியை ஒதுக்கி, அங்குள்ள இந்து ஆதரவு ஓட்டுக்கள் அல்லாமல், இஸ்லாமிய ஓட்டுக்களையும் சேர்த்து அள்ள திமுக - காங்.கூட்டணி முயற்சிக்கும் என்கிறார்கள். ஆகமொத்தம், இரு தேசிய கட்சிகளும் தமிழகத்தை குறி வைத்து வருவது இந்த முறை தேர்தலில் மிகுந்த எதிர்பார்ப்பையும், கவனத்தையும் பெற்று வருகிறது.. என்ன நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!!!
-
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
ராகுல் சொல்லியும் அடங்கலையே! கூட்டணிக்குள் குண்டு வைக்கும் மாணிக்கம் தாகூர்! -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications