அந்த "25 நிமிஷம்".. செங்கோட்டையில் விழுந்த நியூஸ்.. மயிலாடுதுறையும் பார்க்குது.. என்னாச்சு திடீர்னு
சென்னை: செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயில் இன்று மாற்றுப் பாதையில் இயக்கப்படுகிறது என்று ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. என்ன காரணம்?
செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறைக்கு விரைவில் எதுவுமே இல்லாமல் இருந்தது.. இதையடுத்து, பயணிகள் நீண்ட காலமாகவே இந்த கோரிக்கையை எழுப்பி வந்த நிலையயில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு, தினசரி முன்பதிவில்லாத விரைவு ரெயில் 25 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கியது.

மயிலாடுதுறை: செங்கோட்டையில் இருந்து மதுரைக்கும், மயிலாடுதுறையில் இருந்து திண்டுக்கல்லுக்கும் இயங்கி வந்த 2 ரயில்களை இணைத்து செங்கோட்டை- மயிலாடுதுறை ரெயிலாக, இயக்கப்பட்டு வருகிறது.. இந்த ரயிலின் சேவையானது, பொதுமக்களுக்கு மிகுந்த வசதியை தந்து கொண்டிருக்கிறது.
மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயில் மயிலாடுதுறையில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு செங்கோட்டை வந்து சேரும். அதேபோல, மறு மார்க்கத்தில் செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயில் 16848 செங்கோட்டையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு மயிலாடுதுறை சென்று சேரும்.
திருப்பரங்குன்றம்: இந்த ரயில்கள் குத்தாலம், ஆடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், பூதலூர், திருவெறும்பூர் மஞ்சத்திடல், திருச்சி, மணப்பாறை, வையம்பட்டி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்நிலையில், திருச்சி - திண்டுக்கல் இடையே நடைபெறும் ரயில்வே மின் பாதை பணிகளையொட்டி, இன்று ஒருநாள் மட்டும், செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயில் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே சார்பில் அறிவித்திருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.
செங்கோட்டை: அதில், "திருச்சி - திண்டுக்கல் பிரிவில் குளத்தூர் - சமுத்திரம் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே மின் பாதைப் பணிகள் நடைபெறுகின்றன. இதனால், செங்கோட்டையிலிருந்து இன்று புறப்படும் செங்கோட்டை- மயிலாடுதுறை விரைவு ரயில் (16848) வழக்கமான தடத்துக்குப் பதிலாக, விருதுநகர் மானாமதுரை, காரைக்குடி வழியே, 25 நிமிஷம் தாமதத்தில் திருச்சியைச் சென்றடையும்
இதற்கேற்ப இன்று இந்த ரயிலில் பயணம் செய்பவர்கள் தங்கள் திட்டத்தை வகுத்துக் கொள்ளலாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. நாளைய தினம் வழக்கம்போலவே ரயில்கள் இயக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications