இனிமேல் சென்னைக்கு இதுதான் ரூட்.. 2 நாளைக்கு "இந்த பக்கம்" மட்டும் போயிடாதீங்க.. திடீர்னு அறிவிப்பு
சென்னை: சென்னை மாநகரில் 2 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.. என்ன காரணம்?
சென்னையில் மெட்ரோ ரயிலுக்கான தேவை நாளுக்கு நாள் பெருகி கொண்டே வருகிறது.. மெட்ரோவில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் ஒருநாளைக்கு கிட்டத்தட்ட 4 லட்சம் வரை உள்ளது..இந்த எண்ணிக்கை இனி இன்னும் அதிகமாகும் என்றும் நம்பப்படுகிறது..

விரைவான மற்றும் பாதுகாப்பான பயணத்திற்காகவே, மெட்ரோவை தேர்வு செய்யும் பணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரிகிறது.
மெட்ரோ சேவை: அதேசமயம், சென்னையின் அனைத்து பகுதிகளையும் டவுன் பஸ்கள் போலவே, மெட்ரோ ரயில் வழித்தடத்தையும் இணைத்தாக வேண்டியுள்ளது... இதற்கான மெட்ரோவின் 2ம்கட்ட விரிவாக்க பணிகளும் துரிதமாக நடந்து கொண்டிருக்கின்றன
சென்னையை பொறுத்தவரை 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகின்றன.. சென்ட்ரலிலிருந்து திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி வழியாக ஆலந்தூர் வரை ஒரு வழித்தடமும், சைதாப்பேட்டை ஆயிரம் விளக்கு, நந்தனம் வழியாக மற்றொரு வழித்தடமும் செயல்பட்டு வருகின்றன.
கட்டுமான பணிகள்: இதனிடையே மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் சாலை ஆகிய இடங்களில் மெட்ரோ ரயில் நிலையங்கள் கட்டப்பட உள்ளது. இதையொட்டி, கட்டுமான பணிகளுக்காக போக்குவரத்தில் அவ்வப்போது மாற்றங்களும் செய்யப்பட்டு வருகின்றன..
இப்படித்தான், கடந்த 3-ம் தேதி சோதனை முயற்சியாக சில சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இப்போது மீண்டும் சென்னையில் 2 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது.. மெட்ரோ கட்டுமான பணிக்காக மார்ச் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா மேம்பாலம்: இதையொட்டி அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் சாலை ஆகிய இடங்களில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இதன்படி சேத்துப்பட்டில் இருந்து ஜெமினி மேம்பாலம் வரும் வாகனங்கள் உத்தமர் காந்தி சாலை வழியாக திருப்பி விடப்படும்.
அதேபோல, ஜெமினி மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள், எம்ஜிஆர் சாலை வழியாக வள்ளுவர் கோட்டம் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமைந்தகரை செல்லும் வாகனங்கள் டேங்க் மண்ட், நெல்சன் மாணிக்கம் சாலை வழியை பயன்படுத்தலாம் என்றும் போக்குவரத்து துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications