தேசிய ஓய்வூதிய திட்டத்தில் அக்டோபர் 1 முதல் பெரிய மாற்றம்.. 100% பங்குகளில் முதலீடு செய்ய அனுமதி!
சென்னை: தேசிய ஓய்வூதிய திட்டத்தில் அக்டோபர் 1 முதல் மிகப்பெரிய மாற்றங்கள் வரப்போகின்றன.. தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) பல புதிய மற்றும் முக்கிய மாற்றங்களை, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) அறிவித்திருக்கிறது.. அரசு சாராத துறை சந்தாதாரர்களுக்கான இந்த புதிய விதிமுறைகள் முதலீட்டில் அதிக வாய்ப்புகளையும், நெகிழ்வுத் தன்மையையும் (Flexibility) வழங்கும்.. அந்தவகையில், முக்கிய அம்சங்களை மட்டும் இங்கே பார்ப்போம்.
NPS என்று அழைக்கப்படும் தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ், மத்திய அரசு ஊழியர்களுக்கு உத்தரவாதமான ஓய்வூதியத்தை உறுதி செய்யும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு கடந்த வருடம் அறிவித்திருந்தது.. எனினும், ஒருங்கிணைந்த பென்சன் திட்டத்துக்கு மாற விரும்பாதவர்கள் தேசிய பென்சன் திட்டத்தைத் தொடரலாம் என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியது.

அதாவது, மத்திய அரசு ஊழியர்கள் தேசிய பென்சன் திட்டம் அல்லது ஒருங்கிணைந்த பென்சன் திட்டத்தை தேர்வுசெய்யும் விருப்பத்தைப் பெறுவார்கள். தேசிய பென்சன் திட்டத்தின் கீழ் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமே இந்தத் திட்டம் கிடைக்கும் என்று கூறப்பட்டது.
தேசிய ஓய்வூதிய திட்டம்
இந்நிலையில், தேசிய ஓய்வூதிய திட்டத்தில் வருகிற 1 முதல் சில முக்கியமான மாற்றங்கள் நடைமுறைக்கு வரப்போகின்றன.. இதில் ஏராளமான சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன..
குறிப்பாக, அரசு சாராத சந்தாதாரர்களால் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய முடியும்.. அரசு சாரா துறைகளில் உள்ள தேசிய ஓய்வூதிய (NPS) சந்தாதாரர்கள் இனி ஒரு திட்டத்தில் தங்கள் முதலீட்டில் 100% வரை ஈக்விட்டியில் (பங்குச் சந்தையில்) முதலீடு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதுவரை இப்படியொரு சலுகை கிடைக்காத நிலையில், 1ம் தேதி முதல் கிடைக்க போகிறது. இதனால் முதலீட்டாளர்கள், தங்களது திறனுக்கேற்ப முதலீடுகளை தேர்ந்தெடுக்க முடியும்.
நிரந்தர ஓய்வூதிய கணக்கு
அதேபோல CRA (CAMS, Protean, KFintech போன்ற மத்திய பதிவேடு குழுமங்களில்) ஒரு திட்டம்தான் இயக்க அனுமதிக்கப்பட்டது.. ஆனால் தற்போதைய MSF (Multiple Scheme Framework) என்ற புதிய விதியால் PRAN என்று சொல்லக்கூடிய நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண்ணின் கீழ் பல திட்டங்களை வைத்திருக்கலாம்.
இதன் மூலம், அரசு சாரா என்.பி.எஸ். சந்தாதாரர்கள் இனி ஒரே பான் எண் (PAN) கீழ் பல திட்டங்களில் முதலீடு செய்ய முடியும்.
15 ஆண்டுகள்
ஒரு சந்தாதாரர் தங்கள் தற்போதைய திட்டத்தில் திருப்தி இல்லை என்றால், அவர்கள் திட்டத்தை மாற்றிக்கொள்ளலாம். ஆனால், 15 வருட முதலீட்டுக் காலம் நிறைவடைந்த பின்னரே MSF திட்டத்திலிருந்து பொதுத்திட்டத்துக்கு மாற அனுமதி உண்டு. இதன் மூலம், அரசு சாரா NPS சந்தாதாரர்கள் இனிமேல் ஒரே பான் நம்பரின் கீழ் பல திட்டங்களில் முதலீடு செய்ய முடியும்.
அதேபோல ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம், பல்வேறு திட்டங்களை ஒன்றிணைக்கும் திட்டம் எனப்படும் MSF வசதியும் இதில் அறிமுகப்படுத்துகிறது. அதாவது பல்திட்ட கட்டமைப்பு என்றும் இதனை சொல்லலாம்..
ஒரே பான் எண்
இதன் மூலம், அரசு சாரா என்.பி.எஸ். சந்தாதாரர்கள் இனி ஒரே பான் எண் (PAN) கீழ் பல திட்டங்களில் முதலீடு செய்ய முடியும். சந்தாதாரர்கள் ஒரு CRA (Central Recordkeeping Agency), ஒரு அடுக்கு (Tier) கீழ் மட்டுமே ஒரு திட்டத்தை வைத்திருக்க முடிந்தது..
ஆனால், இந்த புதிய அமைப்பு மூலம் ஓய்வூதியத்துக்கேற்ப தனிப்பட்ட திட்டங்களை உருவாக்கவும் உதவும். இதன் மூலம், அரசு சாரா என்.பி.எஸ். சந்தாதாரர்கள் இனி ஒரே பான் எண் (PAN) கீழ் பல திட்டங்களில் முதலீடு செய்ய முடியும். இதனால், பாதுகாப்பான மற்றும் தாக்கத்துடன் கூடிய முதலீடுகளை ஒரே கணக்கில் சமநிலைப்படுத்தலாம்.
சந்தாதாரர்கள் - ஓய்வூதியம்
PFRDA அறிவிப்பின்படி, ஓய்வூதிய நிதிகள் வெவ்வேறு சந்தாதாரர் குழுக்களுக்கு ஏற்றவாறு தனி பயனாக்கப்பட்ட திட்டங்களை (Customized plans) உருவாக்க முடியும். இதில் நிறுவன ஊழியர்கள், டிஜிட்டல் பொருளாதார பணியாளர்கள், சுயதொழில் புரிவோர் போன்றோர் இடம்பெற்றிருப்பார்கள்.. இதனால் ஒவ்வொருவரும், தங்களின் தனிப்பட்ட தேவைகளுக்கேற்றவாறு முதலீட்டு திட்டங்களை பெற முடியும்..
புதிய மாற்றங்கள்
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை அமைப்பு மொத்தமாக பணம் எடுக்கும் வரம்பை அதிகரிக்கவும் பரிந்துரைத்துள்ளது. அதன்படி, முதலீட்டாளர்கள் கல்வி, மருத்துவ சிகிச்சை மற்றும் வீடு கட்டுதல் போன்ற தேவைகளுக்கு நிதியை எடுக்கக்கூடிய வகையில் "பகுதி பணம்" எடுப்பதும் எளிதாக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு திட்டத்தின் செயல்பாடும் ஒரு பொருத்தமான சந்தை குறியீட்டுடன் (market index) ஒப்பிடப்படும் என்பதால், இது வெளிப்படையான செயல்திறனை உறுதி செய்கிறது.
மொத்தத்தில் வரும் அக்டோபர் 1 முதல் வரப்போகும் இந்த மாற்றங்கள், நீண்டகால ஓய்வூதிய நிதிகளை பல்வேறு இலக்குகளுக்கேற்ப திட்டமிடுவதற்கு அடித்தளமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது..












Click it and Unblock the Notifications