சென்னை அண்ணா நகரில் அழகு நிலையங்களிடையே பெரிய சண்டை.. ஆக்ரோஷமாக மோதிய ஆண்கள் பெண்கள்
சென்னை: சென்னை அண்ணா நகரில் தொழில் போட்டியில் அழகு நிலையத்திற்குள் புகுந்து தம்பதியர் மீது தாக்குதல் நடத்திய மற்றொரு அழகு நிலைய உரிமையாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
சென்னையில் மிகவும் வளர்ந்த பணக்கார ஏரியாக்களில் முக்கியமானது அண்ணா நகர். மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்புடன் வளர்ந்த அண்ணா நகர், சென்னையின் மிகப்பெரிய விஐபிக்கள் பலர் வசிக்கும் பகுதியாக உள்ளது. இங்கு ஏராளமான வணிக நிறுவனங்கள், வானுயர்ந்த அடுக்குமாடி குடியிருப்புகள், நட்சத்திர ஓட்டல்கள், பார்கள், அழகு நிலையங்கள், ஸ்பா நிலையங்கள் உள்ளன.

குறிப்பாக அண்ணா நகரில் ஏராளமான அழகு நிலையங்கள் இருக்கிறது. இங்கு தொழில் போட்டியில் பெரிய சண்டை ஏற்பட்டிருக்கிறது. அழகுநிலையத்தினரிடையே பெரிய மோதல் நடந்துள்ளது. இதுபற்றி பார்ப்போம்.
சென்னை அண்ணா நகர் சாந்தி காலனி பகுதியைச் சேர்ந்த ஷோபனா என்பவர் அதே பகுதியில் பிரபலமான அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் அண்மையில் சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில். கடந்த 22 ஆம் தேதி மாலையில் தனியார் அழகு நிலைய உரிமையாளர் ஷ்யாம் குமார், மேலாளர் ஆனி, மற்றும் மூன்று பெண்கள் உள்ளிட்டோர் வந்து, தன்னையும் தனது கணவர் லோகேஷையும் தாக்கி அழகு நிலையத்தில் இருந்த பொருட்களை உடைத்துச் சென்றுள்ளார்கள்.
எங்கள்து அழகு நிலையத்தில் மற்ற அழகு நிலையங்களில் வசூலிப்பதை விட குறைவான கட்டணத்தில் சேவை செய்து வருகிறோம். இதனால் எங்கள் ஏரியாவில் இருக்கும் மற்ற அழகு நிலைய உரிமையாளர்கள் தங்களிடம் ஏன் குறைந்த கட்டணம் வாங்குகிறாய்? என கேட்டு பலமுறை அழுத்தம் கொடுத்து வந்தார்கள்.
இதையடுத்து கடந்த 22 ஆம் தேதி மாலை எங்களுடைய அழகு நிலையத்திற்கு வந்த தனியார் அழகு நிலைய உரிமையாளர் ஷ்யாம், அவரது மேலாளர் ஆனி உள்ளிட்ட மூன்று பெண்கள் மற்றும் ஆண்கள் சிலர் உள்ளே வந்து குறைந்த கட்டணம் வாங்குவதற்காக அநாகரீகமாக பேசி தன்னையும் தனது கணவரையும் கொடூரமாக தாக்கினார்கள். மேலும் அழகு நிலையத்தில் இருந்த பொருட்களை உடைத்துச் சென்றார்கள். இவர்கள் மீது சட்ட ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு தனியார் அழகு நிலைய உரிமையாளர் ஷோபனா புகார் அளித்தார்.
இந்த புகாரை விசாரித்த அண்ணா நகர் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்த விவகாரத்தில் தாக்குதல் நடத்துதல், ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ள அண்ணா நகர் போலீசார், தனியார் அழகு நிலைய உரிமையாளர் ஷ்யாம் உள்ளிட்ட இருவரை கைது செய்து செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களை தேடி வருகின்றனர்.
இதனிடையே, தனியார் பியூட்டி பார்லரில் இருதரப்பினரிடையே இடையே நடந்த தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில், ஆண்கள், பெண்கள் என இரு தரப்பினரும் ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட காட்சிகள் வெளியாகி இருக்கிறது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications