சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஷோபனா ரவியை ஞாபகம் இருக்கா.. திருநீறு மிஸ்ஸிங்.. "டபுள் ஸ்கோர்" செய்யும் திமுகவின் ஆன்மீக அரசியல்

வள்ளலாரின் பிறந்தநாளை தனிப்பெரும் கருணை நாளாக திமுக அரசு அறிவித்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: வள்ளலாரின் பிறந்தநாளை 'தனிப்பெரும் கருணை நாளாக' தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், திமுகவின் இந்த ஆன்மீக அரசியல் பெரும் வரவேற்பை பரவலாக பெற்று வருகிறது.. அத்துடன், பாஜக இந்த விஷயத்தில் அரசியல் செய்யவும் முனைப்பு காட்டி வருவதாக தெரிகிறது.

திமுகவை பொறுத்தவரை இந்துக்களுக்கு எதிரான கட்சி, இந்துக்களுக்கு எதிரானவர்கள் திராவிட இயக்கத்தினர் என்ற பிம்பம் இங்கே கட்டமைக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி காலத்தில் இருந்தே இந்த பிம்பம் தமிழகத்தில் இருந்தாலும், மத்தியில் பாஜக அரசு வந்தபிறகு, இதன் தாக்கம் அதிகமாகிவிட்டது.. அதிலும் 10 வருடம் கழித்து திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், இதன் வீர்யம் பன்மடங்காக பெருகிவிட்டது.

மதசார்பற்ற கொள்கை கொண்டவர் முலாயம் சிங்.. டி.ஆர்.பாலு இறுதி அஞ்சலி செலுத்துவார் - ஸ்டாலின் இரங்கல்மதசார்பற்ற கொள்கை கொண்டவர் முலாயம் சிங்.. டி.ஆர்.பாலு இறுதி அஞ்சலி செலுத்துவார் - ஸ்டாலின் இரங்கல்

 ஹேப்பி நியூஸ்

ஹேப்பி நியூஸ்

இந்துக்களுக்கு எதிரானவர்கள் திமுக கிடையாது என்பதை முதல்வரும், அமைச்சர்களும், பலமுறை விளக்கி உள்ளனர்.. இந்துக்கள் மனம் குளிரும்படியான அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றனர்.. எனினும், பாஜக மற்றும் இந்து மத அமைப்புகளின் அரசியல் திமுகவுக்கு எதிரான போக்கையே அமைத்து வருகின்றன.. இந்த சூழலில்தான், வள்ளலார் அரசியல் என்ற ஆயுதத்தை திமுக தரப்பு கையில் எடுத்துள்ளது.. வள்ளலாரின் பிறந்தநாளை 'தனிப்பெரும் கருணை நாளாக'வும், பெரியாரின் பிறந்தநாளை 'சமூகநீதி நாள்' மற்றும் அம்பேத்கர் பிறந்தநாளை 'சமத்துவ நாள்' என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 டபுள் செக்

டபுள் செக்

ஆன்மிகத்தை அரசியலுக்கும், தங்களது சொந்த சுயநலத்திற்கும் உயர்வு தாழ்வு கற்பிப்பதற்கும் மட்டுமே பயன்படுத்திக் கொள்பவர்களுக்கு எதிரானதுதான் இந்த திராவிட மாடல் திமுக ஆட்சி என்று கூறி, இந்துத்துவா சக்திகளை அதிரவும் வைத்துள்ளார் ஸ்டாலின்.. வள்ளலாரை பொறுத்தவரை, ஒருவகையில் இது நாம் தமிழர் கட்சி அரசியலுக்கும் செக் வைக்கும் விதமாகவும் பார்க்கப்படுகிறது.. தமிழர் பண்பாட்டு அரசியல், தமிழர் இறை கடவுள் கோட்பாடு போன்றவற்றை முன்வைத்துதான் சீமான் அரசியல் செய்து வருகிறார்..

 ஸ்கோர் திமுக

ஸ்கோர் திமுக

அதனால்தான், தமிழர் சார்ந்த இறையியல் கோட்பாட்டில் கவனம் செலுத்துவதில்லை என்ற பரவலான தோற்றமும் திமுக மீது விழுந்து வந்தது.. ஒருபக்கம் பாஜகவின் அரசியல் + மறுபக்கம் சீமானின் அரசியல் என இருவித நெருக்கடிக்களுக்கு ஆளாகியதால்தான், வள்ளலாரை முன்னிறுத்தி ஒரே அறிவிப்பில் ஸ்கோர் செய்துள்ளது திமுக அரசு.. பசி, பட்டினி இல்லாத சமுதாயம் நோக்கிய ஆன்மீகத்தில் சென்ற வள்ளலாரும், திருக்குறள், திருவாசகம், திருமந்திரம் இந்த 3 நூல்களைத்தான் கொண்டாடுகிறார்...

 ஷோபனா ரவி

ஷோபனா ரவி

இதனிடையே, பிரபல தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரான ஷோபனா ரவியின் ஒரு முகநூல் பதிவு என்று ஒரு கருத்து, சோஷியல் மீடியாவில் வலம்வந்து கொண்டிருக்கிறது.. அவரது ஃபேஸ்புக் பக்கத்தில், "திருநீறு இல்லாத வள்ளலார் படத்தை பார்த்தால் 40 வருடங்களுக்கு முன்னர் வரை வீடுகளில் வளைய வந்த பிராமண விதவைகளைப் போல் இருக்கிறது. அவர் விபூதியை அழித்தவர்களுக்கு நான் மானசீகமாக நாமம் போட்டுப் பார்க்கிறேன்" என்று பதிவிட்டுள்ளதாக கூறி, அந்த வாசகம் வைரலாகி கொண்டிருக்கிறது.

 செம்ம பாயிண்ட்

செம்ம பாயிண்ட்

இந்த பாயிண்ட்டையும் பிடித்துக் கொண்ட பாஜக, சோஷியல் மீடியாவில் திமுகவுக்கு எதிரான கமெண்ட்களை பதிவிட்டு வருகிறது.. உண்மையிலேயே ஷோபனா ரவிதான் இந்த பதிவை வெளியிட்டிருந்தாரா அல்லது வேறு யாராவது அவர் பெயரில் போலியாக பதிவிட்டுள்ளார்களா என்பது உறுதியாக தெரியவில்லை.. ஆனால், அந்த பதிவின் ஸ்கிரீன் ஷாட்களை வைத்துக்கொண்டு, சோஷியல் மீடியாவில் தங்கள் அரசியலை ஆரம்பித்துள்ளனர் சில இந்துமத ஆதரவாளர்கள்..

 மிஸ்ஸிங் திருநீறு

மிஸ்ஸிங் திருநீறு

இதுஒருபக்கம் இருந்தாலும், அரசு விழாவின்போது, வைக்கப்பட்டிருந்த வள்ளலார் படத்தில் திருநீறு மிஸ்ஸாகி இருந்ததையே சாக்காக கையில் எடுத்துள்ளது பாஜக.. இதை வைத்து, ஒரு மீட்டிங் போட்டு, திமுகவை விமர்சிப்பதுடன், இந்து மக்களின் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக இப்படியெல்லாம் நடைமுறைகளை மாற்றி வருகிறது என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்க பாஜக ரெடியாகி வருகிறதாம்..!!

English summary
Big Politics by TN BJP and why did dmk announce vallalar muperum vizha thani perum karunai naal
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X