"டோட்டல் சேஞ்ச்".. ஆ. ராசா சொன்னதில் 2 அர்த்தம் இருக்கே.. சபாஷ் போட்ட சித்தர் மூங்கிலடியார்.. ஏன்?
சித்தர் மூங்கிலடியார் திமுக எம்பி ஆ ராசாவுக்கு ஆதரவு தெரிவித்து பேட்டி தந்துள்ளார்
சென்னை: திமுக எம்பி ஆ.ராசாவுக்கு எதிராக, பாஜகவினரும் இந்து மத ஆதரவாளர்களும் கொந்தளித்துள்ள நிலையில், ஆ.ராசா பேசிய பேச்சு ஏற்புடையது என்று கூறி அவருக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார் இந்து வேத மறுமலர்ச்சி இயக்க தலைவர் சித்தர் மூங்கிலடியார்.
Recommended Video
ஆ.ராசா பேசியபோது, "தனித் தமிழ்நாடு கேட்டார் பெரியார். ஆனால், பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்ட திமுக அதில் இருந்து விலகி ஜனநாயகத்துக்காக, இந்திய ஒருமைப்பாட்டுக்காக, இந்தியா வாழ்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்... சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சமன். இந்துவாக, இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை, பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்" என்ற இந்த பேச்சுக்குதான், தமிழக பாஜக, சென்னையில் டிஜிபியிடம் புகார் தந்துள்ளது.

ராசா சப்போர்ட்
இந்நிலையில், இந்து வேத மறுமலர்ச்சி இயக்க தலைவர் சித்தர் மூங்கிலடியாரை ஒன் இந்தியா தமிழ் சார்பாக சந்தித்து பேசினோம்.. அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகளையும் முன்வைத்தோம்.. குறிப்பாக, நான்கு மதம் உள்ளனவா? தீண்டாமை ஒழிய வேண்டும் என்பதும் உண்மையா? இந்து மதம் என்பது என்ன? 4 வர்ணங்கள் என்பது என்ன? என்பது குறித்து சந்தேகங்களை எழுப்பினோம்.. அதுபோல, இந்துவாக இருக்கும்வரை நீ சூத்திரன் என்று எம்பி ஆ ராசா சொல்லி உள்ளாரே, இந்து மக்களுக்கு எதிராக ராசா செயல்படுவதாகவும், இந்துக்களுக்கு எதிராக திமுக அரசு செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறதே.. இது உண்மையா? என்றும் கேள்விகளை முன்வைத்தோம்..

மூங்கிலடியார்
சித்தர் மூங்கிலடியார் நமக்கு தந்த விளக்கம் இதுதான்: "பிற மண்ணினரான பிராமணர்கள் என்ன சொல்லுகிறார்கள், தாங்கள் இந்து மதம் இல்லை என்று சொல்லி கொண்டிருக்கிறார்கள்.. சனாதன தர்மம் இதுதான் பெயர்.. ஆ.ராசா அவர்கள், கடந்த 2 வருடங்களுக்கு மேலாகவே இந்த கருத்தை பல்வேறு மேடைகளில் சொல்லி வருகிறார்.. அவர் சொல்வதை 2 ஆக பிரித்து பார்க்க வேண்டும்.. மனுதர்மம் இப்படி சொல்கிறது, மனுதர்மத்தின்படி இந்துக்கள் என்றால் சூத்திரர்கள், தாழ்வானர்கள், இதெல்லாம் சொல்லப்பட்டிருப்பதாக மனுதர்மத்தை சாடுகிறார்..

பிராமணர்கள்
இந்த கருத்தை இந்து வேத மறுமலர்ச்சி இயக்கம் முழுக்க முழுக்க ஆதரிக்கிறது.. பிற மண்ணினரான பிராமணர்கள்தான் உயர்ந்தவர்கள், மற்றவர்கள் எல்லாம் தாழ்ந்தவர்கள், தாழ்ந்தவர்களுக்குள்ளேயே பிரிவினை இருக்கிறது.. இதில் பெரும்பாலானோர்கள் சூத்திரர்கள்.. அவர்களுக்கு படிக்கவும் உரிமை இல்லை, கோயிலுக்கு வரவும் உரிமை இல்லை.. இப்படி சொல்வது ஒருவகை.

காயத்ரி மந்திரம்
இன்னொரு வகையை எடுத்துக் கொண்டால், பெண்கள் அடிமைப்படுத்தப்பட வேண்டும்.. அடிமையாகவே இருக்க வேண்டியவர்கள்.. மந்திரம் சொல்ல அதிகாரம் கிடையாது.. காயத்ரி மந்திரம் சொல்லக்கூடாது.. பெண்கள் யாகங்களை வளர்ப்பதில் கலந்து கொள்ளக்கூடாது.. இப்படியெல்லாம் மனுதர்மத்தில் வகுக்கப்பட்டுள்ளதாக எடுத்து காட்டுகிறார் ஆ ராசா.. இப்படியெல்லாம் மனுதர்மத்தில் சொல்லப்பட்டுள்ளதே, இதை நாம் எதிர்க்க வேண்டாமா? பெண்களுக்கு உரிமை தர வேண்டாமா? என்று கேட்டு விழிப்புணர்வை ஊட்டி வருகிறார்.. இது உண்மையிலேயே பாராட்டத்தக்கது. ஏற்றுக்கொள்ளத்தக்கது.. அனைத்து தமிழர்களும் இந்த கேள்வியை கேட்க வேண்டும்.

நாத்திகம் + ஆத்திகம்
நாத்திக கருத்துக்கள் என்பது இந்து மதத்திற்கு புதிது கிடையாது.. கடவுளை பல்வேறு வழிகளில் வணங்கலாம் என்று இந்து மதம் சொல்கிறது.. இதில் உருவ வழிபாட்டை எதிர்ப்பவர்களும் உண்டு, ஆதரிப்பவர்களும் உண்டு.. இந்து மதத்தில், உருவ வழிபாட்டிலும் இடமுண்டு, ஜோதி வழிபாட்டிலும் இடமுண்டு.. ஆனால், ஜோதி வழிபாடு என்பதே ஒரு உருவ வழிபாடுதான்.. குறியை வைத்து வழிபடுவதே உருவ வழிபாடு.. நாத்திகவாதிகளின் பேச்சை, ஆத்திகவாதிகள் எப்படி ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று என்னை கேட்கிறார்கள்.. சித்தர்கள் பலர் வாழ்ந்த காலகட்டத்தில் இருந்தே, சாதி ஏற்றத்தாழ்வுகள் தமிழனை அழித்து கொண்டிருந்தன.. அதை சாட வேண்டியதாக இருக்கிறது..

பெரியாரியவாதிகள்
என் கருத்தை பெரியாரியவாதிகள் என் கூற்றை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை.. அவர்கள் கருத்து வேறு.. ஆனால், பெரியார் சொன்னதிலேயே மக்களுக்கு எந்த கருத்துக்கள் இன்றும் தேவையாக உள்ளது என்பதைதான் நாம் பார்க்க வேண்டும்.. உதாரணமாக, கோயிலை கட்டியவன் தமிழன், சிலையை வடித்தவன் தமிழன்.. ஆனால், கருவறைக்குள்ளே தமிழன் நுழைய அனுமதி இல்லை என்றால், நான் அந்த சிலையை உடைத்து சாலை அமைப்பேன் என்றார்..
வேத மறுமலர்ச்சி இயக்கம்
இதை எப்படி பார்க்க வேண்டும் என்றால், கடவுள் மறுப்பு என்பதும் இதில் உண்டு.. ஆனால், எப்படி கடவுளை எப்படி மறுக்கிறார்? என்பதை பார்க்க வேண்டும்.. தமிழனுக்கு உள்ளே இடமில்லை என்றால், அந்த சிலையை உடைத்து நொறுக்கி சாலை போடுவேன் என்கிறார்.. எங்களின் இந்து வேத மறுமலர்ச்சி இயக்கம் என்ன சொல்கிறது என்றால், அனைத்து பூஜைகளும் தமிழில்தான் நடைபெற வேண்டும் என்றே சொல்கிறது.. இப்படி சில கருத்துக்கள் ஒருமித்து பயணிக்கின்றன" என்றார்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications