பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் வழக்கு.. ரத்து செய்து உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: கார் பார்க்கிங் தகராறு தொடர்பாக, நடிகர் தர்ஷன் மற்றும் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியின் மகன் தரப்பிற்கும் சமரசம் ஏற்பட்டதால், இரு தரப்பினருக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் தர்ஷன். கார் பார்க்கிங் செய்வது தொடர்பாக, அவருக்கும், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியின் மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், ஒரு பெண் மற்றும் நீதிபதியின் மகன் காயமடைந்தனர். நண்பருடன் சேர்ந்து தர்ஷன், தங்களை தாக்கியதாக நீதிபதியின் மகன், அவரது மனைவி மற்றும் மாமியார் தரப்பில் ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதேபோல, நடிகர் தர்ஷன் தரப்பிலும் புகார் அளிக்கபட்டிருந்தது. இந்த இரு புகார்களின் அடிப்படையிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த நிலையில், தர்ஷன் தரப்பிற்கும், தங்கள் தரப்பிற்கும் இடையே சமரசம் ஏற்பட்டுவிட்டதால் தங்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி நீதிபதியின் மகன் ஆதிச்சூடி மற்றும் அவரது மனைவி லாவண்யா, மாமியார் மகேஸ்வரி தரப்பிலும், நடிகர் தர்ஷன் மற்றும் அவரது நண்பர் லோகேஷ் தரப்பில் வழக்கறிஞர் தேன்மொழி சிவபெருமாள் ஆஜராகி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், சமரச மனுவை ஏற்று நடிகர் தர்ஷன், அவரது நண்பர் மற்றும் நீதிபதியின் மகன் மற்றும் மனைவி, மாமியார் மீது பதியப்பட்ட இரண்டு வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications