• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஆபரேஷன் திமுக".. இங்கே பேராபத்து வந்துவிட்டது.. ஸ்டாலின் தொனியே மாறிவிட்டது.. மதிமாறன் உருக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: ஆர்எஸ்எஸ் பாஜகவுக்கு டார்கெட் இஸ்லாமியர்கள் கிடையாது.. திமுகதான்.. இங்கு திமுகவை வீழ்த்திவிட்டால் எல்லாவற்றையும் வீழ்த்திவிடலாம்.. எனவே, இது விழிப்பாக இருக்க வேண்டிய நேரமிது' என்று கருத்து தெரிவித்துள்ளார் வே.மதிமாறன்.

தமிழகத்தில் வரும் 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று ஆர்எஸ்எஸ், பேரணி நடத்துவதாக இருந்தது.. ஆனால், இந்த பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று கருதி, இந்த ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதுகுறித்த விவாதங்கள் சோஷியல் மீடியாவில் வெடித்து வருகின்றன..

 பெரிய சதி முறியடிப்பு! பாஜக-ஆர்எஸ்எஸ் தலைவர்களை குறிவைத்த பயங்கரவாதிகள் கைது!கடைசி நிமிடத்தில் பரபர பெரிய சதி முறியடிப்பு! பாஜக-ஆர்எஸ்எஸ் தலைவர்களை குறிவைத்த பயங்கரவாதிகள் கைது!கடைசி நிமிடத்தில் பரபர

 ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

இந்நிலையில், சிறந்த எழுத்தாளரும், பெரியாரிஸ்ட்டுமான வே.மதிமாறன், ஒன் இந்தியா தமிழுக்கு ஸ்பெஷல் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அவரிடம் சில கேள்விகளையும், சந்தேகங்களையும் முன்வைத்தோம். அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட தகவல்கள்தான் இவை: வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்குள் முடிந்தவரை நெருக்கடி தருவது, மோசமாக நடந்துகொண்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பது, இதையெல்லாம் ஆரம்பித்துள்ளார்கள்.. அதற்காக திமுக தலைவர்களை இழிவாக பேசி கொண்டிருக்கிறார்கள்.. நேரடியாக வன்முறையை நிகழ்த்துவது, செருப்பை எடுத்து வீசுவது போன்ற செயல்களின் மூலம் திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களை உணர்ச்சிவசப்பட வைக்கிறார்கள்..

டார்கெட்

டார்கெட்

இதனால் பாஜக பிரமுகர்கள் மேலேயோ, பாஜக அலுவகத்திலேயோ வன்முறை நிகழ்த்தினால், அதை வைத்துக் கொண்டு கட்சியை நடத்த முனைவதே இவர்களின் கண்ணோட்டம்.. பல முறை, நிறைய இடங்களில் பெட்ரோல் குண்டுகளை தங்களுக்கு தாங்களே வீசிக் கொள்வது, இஸ்லாமியர்களை கேவலமாக பேசுவது, இதன்மூலம் எல்லாம் பரபரப்பை தேடி கொள்கிறார்கள்.. இந்துக்களுக்கு எதிராக பேசிவிட்டார்கள் என்று சொல்லி கலவரத்தை தூண்டுவது, என திமுகவை டார்கெட் செய்கிறார்கள்.. இன்னும் சொல்லப்போனால், ஆர்எஸ்எஸ் பாஜகவுக்கு டார்கெட் இஸ்லாமியர்கள் கிடையாது.. திமுகதான்.. இங்கு திமுகவை வீழ்த்திவிட்டால் எல்லாவற்றையும் வீழ்த்திவிடலாம்

 அபாய மணி

அபாய மணி

ஆர்எஸ்எஸ் பின்புலத்தில், அதிமுகவின் எடப்பாடி, ஓபிஎஸ்ஸின் ஆட்பலத்தை வைத்துக் கொண்டு, பாஜக செயல்படுகிறது.. உடந்தையாக இருக்கிறது.. அதனால்தான் அவர்கள் மவுனமாக இருக்கிறார்கள்.. திமுகவை ஆட்சியில் இருந்து வீழ்த்த வேண்டும் என்பதற்காக, எவ்வளவு மோசமான, கேவலமான வேலையைக்கூட பாஜகவினர் செய்வார்கள்.. அதன் அடுத்தக்கட்டம் பயங்கரத்தை நோக்கி போவதால்தான், 50 இடங்களில் ஆர்எஸ்எஸ்ஸை வைத்து பேரணியை செய்கிறார்கள்.. இது பேராபத்து.. இது மிகபெரிய எச்சரிக்கை மணி.. இந்த நேரத்தில்கூட தமிழர்கள் விழிப்பாக இல்லையென்றால், தமிழக நிலைமை மிகவும் கவலைக்கிடமாக மாறிவிடும்.

 லட்சணம்

லட்சணம்

முதல்வர் இந்த எச்சரிக்கையை உணர்ந்ததால், தடை உத்தரவு போட்டுள்ளார்.. வருங்காலத்தை உணர்ந்தும் இந்த தடையை போட்டுள்ளார்.. தன்னுடைய நிதியமைச்சர் பிடிஆர் கார் மீது செருப்பை வீசியபோது, பதற்றப்படாத முதலமைச்சர், தன் அமைச்சர்கள் மீது, தன் தொண்டர்கள் மீது, தன் கட்சியின் மீது இழிவான நடவடிக்கைகளை பாஜக தலைவர்கள் உட்பட தினந்தோறும் பொய், கேவலமான வார்த்தைகளால் நடந்து கொள்கிறார்கள்.. அப்போதுகூட அமைதி காத்தார் முதல்வர் ஸ்டாலின்..

ரணகளம்

ரணகளம்

அப்படிப்பட்ட முதலமைச்சர், இந்த ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு தடை போடுகிறார் என்றால், இந்த எச்சரிக்கை அவருக்கு புரியுது.. என்னை நீ அவமானபடுத்தும்போதெல்லாம் பொறுத்துக் கொண்டேன், ஆனால் தமிழ்நாட்டை ரணகளமாக்குவதற்கு நான் அனுமதிக்க முடியாது என்பதுதான், முதல்வர் ஸ்டாலினின் தொனி. இது மரியாதைக்குரிய தொனி.. இதை உணர்ந்து தமிழக மக்கள் இதுபோன்ற நெருக்கடி நேரத்தில் முதல்வருக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

English summary
Biggest danger besets Tamil Nadu, DMK should be alert, says Periyarist Ve Mathimaran: Special interview
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X