பான் கார்டு பெற பிறப்பு சான்றிதழ் கட்டாயம்.. மத்திய அரசு அறிவிப்பு.. மக்கள் அறிய வேண்டியவை
சென்னை: மத்திய அரசின் புதிய திருத்த சட்டத்தின்படி, இனிமேல் 'பான் கார்டு' பெறுவதற்கு, பிறப்புச் சான்றிதழ் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. 2023-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு, அரசு வழங்கிய டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் இல்லை என்றால் 'பான் கார்டு' வழங்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த நடைமுறை இனி அனைவருக்கும் பொருந்தும். 'பான் கார்டு' விண்ணப்பத்தில் உள்ள பெயரும், ஆதாரில் உள்ள பெயரும் இனி 100 சதவீதம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். ஒரு சிறிய இனிஷியல் மாற்றம் அல்லது எழுத்துப்பிழை இருந்தாலும் விண்ணப்பம் தானாகவே நிராகரிக்கப்படும்.
பிறப்பு சான்றிதழ் வாங்குபவர்கள் இனிஷியல் சேர்த்தே வாங்குங்கள். இனிஷியல் சேர்க்காமல் வாங்கினால், பின்னாளில் ஆதாரும் இனிஷியல் இல்லாமல் தான் கிடைக்கும். இனிஷியல் இல்லாமலேயே அனைத்து சான்றிதழ்களும் வாங்கும் நிலை வரும். ஏனெனில் 2019, 2020, 2021, 2022, 2023, 2024, 2025 என உங்கள் குழந்தை எந்த ஆண்டில் பிறந்திருந்தாலும் ஆதார் வாங்க பிறப்பு சான்றிதழில் உள்ள தகவல்கள் தான் அடிப்படை அதில் பிறந்த தேதி, பாலினம், உங்கள் பெயர், மனைவியின் பெயர் எல்லாவற்றிலும் கவனமாக இருங்கள்..

ஏனெனில் எப்படி இருக்கிறதோ, அப்படித்தான் ஆதார் கார்டு வரும். ஆதாரில் உள்ள படி தான் பான் கார்டு வரும். ஆதாரில் ஒரு மாதிரியும், பிறப்பு சான்றிதழில் ஒரு மாதிரியும் தகவல்கள் இருந்தால், உங்கள் குழந்தைக்கு இனி பான் கார்டு எடுக்க முடியாது, மறுபடியும் பிறப்பு சான்றிதழில் சரி செய்ய வேண்டும். ஆதாரை பிறப்பு சான்றிதழ் படி சரி செய்ய வேண்டும். இது தான் தற்போது உள்ள நடைமுறைச் சிக்கல் ஆகும். இது ஒருபுறம் எனில், பிறப்பு சான்றிதழ் இல்லை என்றால் பான் கார்டு வாங்க முடியாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் கொண்டு வந்துள்ள 'பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தச் சட்டம்)'-ன் கீழ், ஒரு குடிமகனின் அங்கீகாரத்துக்கு பிறப்புச் சான்றிதழே ஒற்றை ஆவணமாக இனி இருக்க போகிறது. இந்த விதிகளின் படியே இனி 'பான் கார்டு' விண்ணப்பங்களிலும் அமல்படுத்தப்படுகிறது. அதனால் புதிய 'பான் கார்டு' கோரி விண்ணப்பிப்பவர்கள், தங்களின் பிறந்த தேதியை உறுதிப்படுத்தப் பிறப்புச் சான்றிதழை இணைப்பது கட்டாயம் ஆகும்
ஆதார் அட்டையில் பிறந்த தேதி இருந்தாலும், பிறப்புச் சான்றிதழ் கூடுதல் ஆதாரமாகக் கேட்கப்படும். ஏற்கனவே 2023-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு, அரசு வழங்கிய டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் இல்லை என்றால் 'பான் கார்டு' வழங்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த நடைமுறை இனி அனைவருக்கும் பொருந்தும். அதாவது டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் கட்டாயம் ஆகும்
மேலும் 'பான் கார்டு' விண்ணப்பத்தில் உள்ள பெயரும், ஆதாரில் உள்ள பெயரும் இனி 100 சதவீதம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். ஒரு சிறிய இனிஷியல் மாற்றம் அல்லது எழுத்துப்பிழை இருந்தாலும் விண்ணப்பம் தானாகவே நிராகரிக்கப்பட்டுவிடும். அதேபோல் ஏற்கனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள், அதில் பிறந்த தேதி அல்லது பெயரை மாற்ற விரும்பினால், இனி கட்டாயம் பிறப்புச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். ஒரே நபர் பல்வேறு பெயர்களில் அல்லது தவறான பிறந்த தேதிகளைக் கொடுத்துப் பல பான் கார்டுகளைப் பெறுவதைத் தடுக்கவே இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டிருக்கிறதாம். இதன் மூலம் வரி ஏய்ப்பு முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும் என வருமான வரித்துறை நம்புகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications