ஓட்டுக்கு கொட்டப் போகுது துட்டு..234 தொகுதிக்கு 2000 கோடி! கொளத்தூருக்கு மட்டும் 100 கோடி! பாஜக பரபர
சென்னை: வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதற்காகத் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் சேர்த்து சுமார் 2,000 கோடி ரூபாய்க்கும் மேல் திமுக பதுக்கி வைத்துள்ளதாகவும், கொளத்தூர் தொகுதியில் மட்டும் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் 100 கோடி ரூபாய் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி செய்தி தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவரது அறிக்கையில்,' திமுகவின் திராவிட மாடல் என்பது பிரேக் இல்லாத ஊழல் ரயில் போன்றது. இந்தியா முழுவதும் இதுபோன்ற ஊழல் ஆட்சிகளுக்கு பாஜக முடிவு கட்டி வருகிறது. 2026 தேர்தலில், மக்கள் விரோத திமுக அரசை வீழ்த்தி, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மோடி மாடல் டபுள் இன்ஜின் அரசு அமையும்.

இந்நிலையில், வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதற்காகத் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் சேர்த்து சுமார் 2,000 கோடி ரூபாய்க்கும் மேல் திமுக பதுக்கி வைத்துள்ளதாகத் தகவல்கள் வருகின்றன.
குறிப்பாக, கொளத்தூர் தொகுதியில் மட்டும் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் 100 கோடி ரூபாய் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், திருவிடந்தையில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில், ஊழல் பணத்தை எப்படி விநியோகிப்பது என்பது குறித்து முதல்வர் முன்னிலையில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, தமிழகம் வந்துள்ள இந்திய தேர்தல் துணை ஆணையர் மனிஷ் கார்க் தலைமையிலான குழுவினர், இது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், மாநிலத்தின் தற்போதைய சூழலைத் தேர்தல் ஆணையத்திடம் விளக்கி, உரிய முறையில் ஆய்வு செய்து இந்தப் பணத்தைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குற்றம் சாட்டியுள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு












Click it and Unblock the Notifications