Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

25 பாஜக.. ‘கேபினட்’ ‘தலை’ அதிமுக.. அண்ணாமலையின் எகிடுதகிடு கணக்கு.. கிறுகிறுக்கும் கூட்டணி கட்சிகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 16 மாதங்கள் தான் உள்ளன. 25 எம்.பிக்கள் டெல்லி செல்வார்கள், அவர்களில் பலர் மத்திய அமைச்சர்கள் ஆவார்கள் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

2024 நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை பாஜக தீவிரப்படுத்தியுள்ளது. பாஜக கூட்டணியில் இணையவிருக்கும் கட்சிகள், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

கூட்டணிக்கு அதிமுக தலைமை வகிக்கும் என எடப்பாடி பழனிசாமி கூறிய நிலையில், அதனை ஏற்றுக்கொண்ட அண்ணாமலை, தற்போது பாஜகவில் இருந்து 25 எம்.பிக்கள் செல்வார்கள் எனக் கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டணிக்கு அதிமுக தலைமை வகிப்பதையும் அண்ணாமலை ஏற்றுக்கொள்கிறார். 25 எம்.பிக்கள் பாஜக சார்பில் வெல்வார்கள் என்றும் பேசி வருகிறார், பாஜகவின் திட்டம் தான் என கூட்டணி கட்சிகளே குழம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

பாஜக கூட்டணி

பாஜக கூட்டணி

பாஜக தேசிய தலைமை, 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு தமிழகத்தில் மெகா கூட்டணியை அமைக்க முயன்று வருகிறது. தோழமைக் கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையையும் டெல்லி தலைமை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சமீபத்தில் அமித்ஷா, மாநில தலைவர்களுடன் ஆலோசனையும் நடத்தினார். இந்நிலையில் தான் சமீபத்தில், அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என எடப்பாடி பழனிசாமி பேசினார். பெரிய கட்சியான அதிமுக தலைமையில் கூட்டணி என்பதை பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் ஏற்றுக்கொண்டார்.

பாஜகவை விட குறைவாக அதிமுக?

பாஜகவை விட குறைவாக அதிமுக?


இதுஒருபுறம் இருக்க, அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் பலரும் 25 எம்.பி சீட்களில் பாஜக வெல்லும் என தொடர்ந்து பேசி வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் பாஜக 25 சீட்களில் வெல்லும் என்றால், அதிமுக பாஜகவை விட குறைவான சீட்களில் போட்டியிடுமா என்ற கேள்வியும் எழுகிறது. அதேசமயம், எடப்பாடி பழனிசாமி தரப்பினர், பாஜக கூட்டணியில் இருந்து முறித்துக் கொள்ளும் திட்டத்தில் இருப்பதாகவும் தகவல்கள் உலவி வருகின்றன. பாஜக, அதிமுக இரண்டு கட்சிகளுடனும் கூட்டணிக்காக இணக்கத்தைக் கடைபிடித்து வரும் சிறிய கட்சிகள், பாஜக, அதிமுகவின் நிலைப்பாடுகளால் குழப்பத்தில் இருந்து வருகின்றன.

 25 எம்பிக்கள் செல்வார்கள்

25 எம்பிக்கள் செல்வார்கள்

இந்நிலையில் தான் மீண்டும் பாஜகவிலிருந்து 25 எம்.பிக்கள் டெல்லி செல்வார்கள் என்று இன்றும் பேசியுள்ளார் அண்ணாமலை. இதனால், பாஜகவின் திட்டம் என்ன என பலருக்கும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இன்று ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நடைபெற்ற பாஜக ஆர்ப்பாட்டத்தில் பேசிய அண்ணாமலை, "நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 16 மாதங்கள் தான் உள்ளது. பாஜக தொண்டர்கள் இதே உற்சாகத்தோடு அடுத்த 16 மாதங்களுக்கு செயல்பட்டால்தான், 25 எம்பிக்கள் டெல்லி செல்வார்கள். அதில் பலர் முக்கிய துறைகளில் அமைச்சர்களாக பதவியேற்பார்கள்." எனப் பேசியுள்ளார்.

அண்ணாமலை குற்றச்சாட்டு

அண்ணாமலை குற்றச்சாட்டு

பால் விலை, மின்சார கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக சார்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து பேசிய அண்ணாமலை, கடந்த 16 மாத திமுக ஆட்சியில் விலை உயர்வு மட்டுமே சாதனையாக உள்ளது. பாலை ஊற்றும் விவசாயிகளுக்கு விலை கிடைப்பதில்லை, பாலை வாங்கும் வாடிக்கையாளர்களிடம் அதிகம் பணம் வசூலிக்கப்படுகிறது எனக் குற்றம்சாட்டினார்.

இதுதான் தாயுள்ளமா?

இதுதான் தாயுள்ளமா?

மேலும் பேசிய அண்ணாமலை, தாயுள்ளம் கொண்ட முதலமைச்சர் என அமைச்சர்கள் கூறுகின்றனர். தாயுள்ளம் கொண்ட முதலமைச்சர் தான் பால் விலை, மின் கட்டண விலை, சொத்து வரி என பல்வேறு கட்டணங்களை உயர்த்தினாரா? வாய்க் கோளாறு, நிர்வாகக் கோளாறுடன், ஊழலின் இலக்கணமாக விளங்கும் அமைச்சர்களுக்கு முதல்வர் பாராட்டுச் சான்றிதழ் கொடுக்கிறார். இதுபோன்ற மோசமான ஆட்சியை தமிழக வரலாற்றில் பார்த்ததில்லை.

டார்கெட் அமைச்சர்கள்

டார்கெட் அமைச்சர்கள்

நமது முதல்வர், பிரதமர் மோடி போல் ஆக ஆசைப்படுகிறார். அப்படி அவர் பிரதமர் போல் ஆக வேண்டுமென்றால், 21 ஆண்டுகளில் ஒருநாள் கூட விடுமுறை எடுக்கக் கூடாது. எந்த காரியத்திலும், குடும்ப உறுப்பினர்களை பக்கத்தில் விடக் கூடாது. பிரதமரின் தாயார் பிரதமர் உடன் இல்லாமல் அகமதாபாத்தில் உள்ளார். ஆனால் தமிழகத்தில் அனைத்து நிகழ்வுகளிலும் முன் வரிசையில் முதல்வரின் குடும்பம் தான் இருக்கின்றனர். கை சுத்தமாக இருக்க வேண்டும். ஆனால், தமிழக முதல்வரைச் சுற்றி, 'டார்கெட்' அமைச்சர்கள்தான் உள்ளனர். எனவே, கனவில் கூட மோடியின் நகத்திற்கு கூட தமிழக முதல்வர் ஈடாக முடியாது." எனக் கூறியுள்ளார்.

 16 மாதம் தான்- அமைச்சர்கள்

16 மாதம் தான்- அமைச்சர்கள்

மேலும் பேசிய அண்ணாமலை, வரும் மக்களவைத் தேர்தலின்போது, தமிழகம் திராவிட மாயையில் இருந்து வெளியேறி, தேசியத்தின் பக்கம் நிற்கும். மக்களவைத் தேர்தல் வரை இதுபோன்ற போராட்டங்கள் தொடரும். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 16 மாதங்கள் தான் உள்ளது. நேரம் வந்துவிட்டது. களத்தில் இறங்க வேண்டும். வீடு வீடாகச் செல்ல வேண்டும். தமிழகத்தில் மாற்றம் வர போகிறது. பாஜக தொண்டர்கள் இதே உற்சாகத்தோடு அடுத்த 16 மாதங்களுக்கு செயல்பட்டால்தான், 25 எம்பிக்கள் டெல்லி செல்வார்கள். அதில் பலர் முக்கிய துறைகளில் அமைச்சர்களாக பதவியேற்பார்கள்." எனப் பேசியுள்ளார்.

என்னதான் கதை?

என்னதான் கதை?

அதிமுகவில் ஆயிரம் குழப்பங்கள் நீடித்துக் கொண்டிருக்க, ஓபிஎஸ், ஈபிஎஸ், டிடிவி தினகரன் என அனைவரும் ஒன்றிணைந்த அதிமுகவோடு கூட்டணி அமைக்க பாஜக தலைமை திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில், ஈபிஎஸ் தரப்பு பாஜகவின் முயற்சிகளுக்கு முரண்டு பிடித்து வரும் நிலையில், பாஜகவும் 25 எம்.பிக்கள், முக்கிய அமைச்சர்கள் என திட்டவட்டமாகப் பேசியிருப்பது அரசியல் களத்தில் பல்வேறு யூகங்களைக் கிளப்பிவிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+