மோடி கேபினட்டில் 12 அமைச்சர்கள்.. தெலுங்கானா தேர்தல் பரபரப்புக்கு இடையே அண்ணாமலை சொன்ன டேட்டா!
சென்னை: மோடி அமைச்சரவையில்தான், அருந்ததியர் சமூகத்திற்கும் மடிகா சமூகத்திற்கும், பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கிறது.
மத்திய அமைச்சரவையில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 12 அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் மொத்தமுள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வரும் 30ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஆளும் கட்சியான பிஆர்எஸ், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், பாஜக என மும்முனைப் போட்டி நிலவுகிறது. வேட்புமனு தாக்கல் நவம்பர் 3ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 10-ம் தேதியுடன் நிறைவடைந்தது. வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் நாளை (நவம்பர் 15).
தெலங்கானாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மடிகா இடஒதுக்கீடு போராட்ட சமிதி சார்பில் ஹைதராபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, “தெலங்கானா மாநிலம் அமையுமானால் அதன் முதல் முதல்வராக தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர்தான் இருப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தெலங்கானா மாநிலம் உருவான உடன் அதன் முதல் முதல்வராக கே.சந்திரசேகர ராவ் பதவியேற்றார். இதன்மூலம், தலித்துகளின் விருப்பத்தை அவர் நசுக்கிவிட்டார்” எனப் பேசினார்.
தெலுங்கானா மாநிலத்தில் தலித் வாக்கு வங்கியை குறிவைத்து பாஜக களமிறங்கி இருப்பதாக, சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் கட்சி விமர்சித்து வருகிறது. இதற்கிடையே, மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பட்டியலினத்தைச் சேர்ந்த 12 பேர் அமைச்சர்களாக இருப்பதாகக் கூறியுள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எக்ஸ் சமூக தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாரதப் பிரதமர் மோடி அவர்கள் நல்லாட்சியில், நாடு முழுவதும் அனைத்துச் சமூகங்களுக்கும் உரிய முக்கியத்துவமும் பிரதிநிதித்துவமும் கிடைக்கப்பெற்று வருகின்றன. நமது நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளில், பாரதப் பிரதமர் மோடி அவர்கள் அமைச்சரவையில்தான், அருந்ததியர் சமூகத்திற்கும் மடிகா சமூகத்திற்கும், பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கிறது.
இரு பெரும் சமூகத்தின் பிரதிநிதிகளாக மாண்புமிகு மத்திய இணையமைச்சர்கள் அண்ணன் எல்.முருகன் அவர்களும், திரு. A. நாராயணசுவாமி அவர்களும், மத்திய அமைச்சரவையை அலங்கரிக்கிறார்கள். மத்திய அமைச்சரவையில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 12 அமைச்சர்கள் மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்கள்.
பட்டியல் சமூக மக்கள் முன்னேற்றத்திற்காக, மத்திய அரசின் இந்த ஆண்டு பட்ஜெட் ஒதுக்கீடு, 1.59 லட்சம் கோடி ரூபாய் ஆகும். ஆண்டு தோறும் இந்த ஒதுக்கீடு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நாடு முழுவதும் பட்டியல் சமூக மக்கள் வாழ்வியல் முன்னேற்றத்துக்காகத் தொடர்ந்து நலத்திட்டங்களை நிறைவேற்றி வரும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு மோடி அவர்கள், தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் நடைபெறும், மடிகா சமூக மக்களின் விஸ்வரூப மகாசபா மாநாட்டில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
-
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா?












Click it and Unblock the Notifications