பாஜக பீ டீம் அரசியல்..நயவஞ்சக எண்ணம் வேண்டாம்..சிராக் பஸ்வானை குட்டிய ஆ.ராசா
தாங்கள் காலம் காலமாகச் செய்து வந்த பொய்களைப் பரப்பும் தொழில் மக்களிடையே அம்பலப்பட்டு நிற்பதால், சிராக் பஸ்வானை துணைக்கு அழைத்து ஆறுதல் தேடியிருக்கிறார்கள் என்று ஆ.ராசா கூறியுள்ளார்.
சென்னை: பாஜவுக்கான பி-டீம் அரசியலை பீகாரிலேயே செய்யட்டும் என்றும், தமிழ்நாட்டில் அத்தகைய நயவஞ்சக எண்ணத்துடன் வர வேண்டாம் என்று சிராக் பஸ்வானை சாடியுள்ளது திமுக. தாங்கள் காலம் காலமாகச் செய்து வந்த பொய்களைப் பரப்பும் தொழில் மக்களிடையே அம்பலப்பட்டு நிற்பதால், சிராக் பஸ்வானை துணைக்கு அழைத்து ஆறுதல் தேடியிருக்கிறார்கள் என்று ஆ.ராசா கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோ சில நாட்களுக்கு முன்பு சமூக வலை தளங்களில் பரவியதால் பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சியினர் அங்குள்ள சட்டசபையில் இதுகுறித்து பேசி அமளியில் ஈடுபட்டனர்.

எனவே இது தொடர்பாக உண்மை நிலையை கண்டறியும் வகையில் பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் இருந்து 8 உயர் அதிகாரிகள் சென்னை வந்திருந்தனர். இவர்கள் தமிழக அதிகாரிகளிடம் நடந்த விசயங்களை கேட்டறிந்தனர். இந்த குழுவினர் கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதுடன் அங்குள்ள வட மாநில தொழிலாளர்களையும் சந்தித்து பேசினார்கள். இந்த குழுவுக்கு தலைமை தாங்கி வந்துள்ள பீகார் மாநில ஊரக வளர்ச்சி திட்ட செயலாளர் பாலமுருகன் கூறுகையில் வடமாநில தொழிலாளர்கள் அனைவரும் தமிழகத்தில் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்தார்.
வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு சிறப்பு தொலைபேசி எண்களை தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. வட மாநில மொழிலாளர்களை சந்தித்து பேசி விழிப்புணர்வும், நம்பிக்கையும் ஏற்படுத்தி வருகின்றனர். தமிழகத்தில் இருந்து வட மாநில தொழிலாளர்கள் வெளியேறி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பீகாரில் இருந்து லோக் ஜன சக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பஸ்வான் எம்.பி. இன்று விமானம் மூலம் சென்னை வந்தார். பல்லாவரம், தாம்பரம் மற்றும் புறநகரில் உள்ள பீகார் மாநில தொழிலாளர்களை சந்தித்து தமிழகத்தில் நிலவும் நிலைமைகளை கேட்டறிந்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிராக் பஸ்வான், பீகார் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்தார்.
சிராக் பஸ்வான் வருகை குறித்தும் அவரது பேச்சு குறித்தும் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் பணிபுரியும் வடமாநில சகோதரர்களின் நிம்மதியைகெடுக்கும் வகையில் சுயநல அவதூறு அரசியலை பாஜ செய்வதும், அதற்கு லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான் துணை போவதும் கடும் கண்டனத்திற்குரியது.
இந்நிலையில் தாங்கள் காலம் காலமாகச் செய்து வந்த பொய்களைப் பரப்பும் தொழில் மக்களிடையே அம்பலப்பட்டு நிற்பதால், சிராக் பஸ்வானை துணைக்கு அழைத்து ஆறுதல் தேடியிருக்கிறார்கள்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜவுக்கு எதிரான வலிமையான கூட்டணியைக் கட்டமைக்க வேண்டும் என்று திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறைகூவல் விடுத்து, அதற்கு அச்சாரமாக தனது 70வது பிறந்தநாள் விழா மேடையையே களமாக மாற்றியதில், கும்பி எரிய இந்த பொய்ப் பரப்புரை மேற்கொள்ளப்படுவதை அறியாதவர்கள் அல்ல மக்கள். எனவே, சிராக் பஸ்வானை வைத்து நடத்தும் நாடகங்களையும் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். தமிழ்நாட்டில் பாதுகாப்பாக உள்ள வடமாநில தொழிலாளர்களிடையே பாஜவின் விஷமத்தன பிரசாரத்திற்கு துணை போக வேண்டாம் என ராம் விலாஸ் பஸ்வானின் மகனுக்கு எச்சரிக்கையோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
சமூகநீதிக் கருத்தியலை நெஞ்சில் தாங்கிச் செயல்பட்ட ராம்விலாஸ் பஸ்வானை, அவருடைய கடைசிக் காலங்களில் பா.ஜ. தனது சுயநல அரசியலுக்குப் பயன்படுத்திக் கொண்டதை அவரது மகன் உணர்ந்து, அவர்களது வலையில் வீழாமல் தற்காத்துக் கொள்ள வேண்டும். எனவே, சிராக் பஸ்வானுக்கு சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். பாஜவுக்கான பி-டீம் அரசியலை பீகாரிலேயே செய்யட்டும், தமிழ்நாட்டில் அத்தகைய நயவஞ்சக எண்ணத்துடன் வர வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications