2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை? மொடக்குறிச்சியை திணிக்கும் பாஜக மேலிடம்? Annamalai அப்செட்
சென்னை: மொடக்குறிச்சியில் போட்டியிடுகிறீர்களா என அண்ணாமலைக்கு பாஜக மேலிடம் கட்டாயப்படுத்திய நிலையில் அவர் தேர்தலில் போட்டியிடும் முடிவில் இருந்து பின்வாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. கூட்டணிக் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில், பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தொடர்ந்து இழுபறி நிலவி வருகிறது. டெல்லி தலைமை விரும்பியும்கூட, முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை ஆரம்பத்தில் தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டார்.

சிங்காநல்லூர், மதுரை, விருகம்பாக்கம், காரைக்குடி உள்ளிட்ட ஆறு தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளராக இருந்த அண்ணாமலை, தனது தந்தையின் உடல்நிலையைக் காரணம் காட்டி அந்தப் பொறுப்பிலிருந்து விலகினார்.
அதிமுக கூட்டணியில் உடன்பாடு இல்லாததே இதற்கு உண்மையான காரணம் என்று பேசப்பட்டாலும், கட்சித் தலைமையின் அழுத்தம் காரணமாக அவர் தற்போது சில நிபந்தனைகளுடன் போட்டியிட ஒப்புக் கொண்டுள்ளார்.
கோவை வடக்கு தொகுதியில் மட்டுமே தான் போட்டியிடுவேன் என்பதே அண்ணாமலையின் முக்கிய நிபந்தனையாக உள்ளது. இந்த நிலையில், கோவை வடக்கை வானதி சீனிவாசன் கேட்டிருக்கிறார். மொடக்குறிச்சி தொகுதியை சிட்டிங் எம்எல்ஏ சரஸ்வதி தனது மகளுக்கும் கேட்டு வரும் நிலையிலும், அண்ணாமலை, இந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என பாஜக நிர்பந்திப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அண்ணாமலையோ கோவை வடக்கு மட்டுமே குறி என்கிறாராம்.
இந்த இழுபறியைத் தீர்ப்பதற்காக, பாஜகவின் மேலிடப் பொறுப்பாளர் பியூஷ் கோயல் நேற்று முன்தினம் சென்னை வந்தார். அப்போது, புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த அண்ணாமலையை ஹெலிகாப்டர் மூலம் அவசரமாக வரவழைத்தார். சென்னை கமலாலயத்தில் நடந்த நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, அண்ணாமலை உட்பட அனைத்து தொகுதிகளுக்கான உத்தேச வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டது.
அண்ணாமலையின் விருப்பம் நிறைவேற்றப்படுமா அல்லது அவருக்கு வேறு ஏதேனும் வியூகம் வகுக்கப்படுமா என்பது, டெல்லி தலைமை அதிகாரபூர்வ வேட்பாளர் பட்டியலை வெளியிடும்போதே தெளிவாகத் தெரியும்.
அண்ணாமலை கோவை வடக்கு தொகுதியை கேட்பதற்குப் பின்னால் ஒரு திட்டம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
கோவை வடக்கு: இது பாஜகவின் கோட்டையாகக் கருதப்படும் பகுதி. வானதி சீனிவாசன் ஏற்கனவே சிட்டிங் எம்எல்ஏ-வாக இருக்கும் நிலையில், அண்ணாமலை இங்கு போட்டியிட்டால் அது "பாதுகாப்பான வெற்றி" என அவர் கருதுவதாகத் தெரிகிறது.
மொடக்குறிச்சி: இங்கு தற்போது பாஜகவின் சி.சரஸ்வதி எம்எல்ஏ-வாக உள்ளார். அண்ணாமலைக்கு அவருடைய தனது சொந்த மாவட்டமான கரூருக்கு மிக அருகில் உள்ள இந்தத் தொகுதியைத் கொடுப்பதன் மூலம், கொங்கு மண்டலத்தின் செல்வாக்கான தலைவராகத் அவரை நிலைநிறுத்திக் கொள்ளலாம் என பாஜக தலைமை அறிவுறுத்துகிறது.
ஆனால் கோவை வடக்கு தொகுதியை வானதி சீனிவாசன் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை என்று தெரிகிறது. அவர் தேசிய அளவில் மகளிர் அணித் தலைவியாக இருந்தபோதும், தனது தொகுதியை விட்டுக் கொடுத்தால் அது தனது அரசியல் செல்வாக்கை பாதிக்கும் என நினைக்கிறார். வானதி சீனிவாசனை மீண்டும் கோவை தெற்கு தொகுதிக்கே மாற்ற டெல்லி தலைமை ஆலோசித்ததாகவும், ஆனால் அங்கு கடந்த முறை அவர் நூலிழையில் வெற்றி பெற்றதால் அந்த ரிஸ்க்கை எடுக்க அவர் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.
அண்ணாமலைக்கு ஒருவேளை கோவை வடக்கு கிடைக்கவில்லை என்றால், அவருக்கு அரவக்குறிச்சி அல்லது கரூர் தொகுதிகளை வழங்க மேலிடம் பரிசீலித்தது. ஆனால் அண்ணாமலை தனது பழைய தோல்விகளைத் தவிர்க்கும் பொருட்டு கொங்கு மண்டலத்தின் கோவை வடக்கு தொகுதியிலேயே பிடிவாதமாக இருக்கிறார்.
இந்த நிலையில் அண்ணாமலை கேட்ட கோவை வடக்கு தொகுதியை பாஜக தலைமை கொடுக்க முன்வராததால் அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் அண்ணாமலை சட்டசபை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்ற முடிவை எடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications