"இது திமுக ஆட்சி.. பாஜக தலைகீழாக நின்றாலும்.. அதுக்கு வாய்ப்பே இல்லை".. திருமாவளவன் மீண்டும் கறார்
பாஜகவின் அண்ணாமலை கருத்துக்கு திருமாவளவன் பதிலடி தந்துள்ளார்
சென்னை: தமிழகத்தில் பாஜக ஒருபோதும் ஆட்சி செய்ய முடியாது என்று, மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்கு திருமாவளவன் திட்டவட்டமாக பதில் அளித்துள்ளார்.
பாஜக எந்த ரூபத்திலும் தமிழகத்தில் காலூன்றி விடக்கூடாது என்பதில் திருமாவளவன் உறுதியாக இருந்து வருகிறார்..
திமுக கூட்டணி வெற்றி பெற்றதில் திருமாவளவனின் பங்கும் அளப்பரியது.. காரணம் பாஜகவுக்கு எதிராக இவர் செய்த பிரச்சாரம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

மதவெறி மோதல்கள்
"கலைஞர் ஆட்சியிலும் சரி, அதிமுக ஆட்சியிலும் சரி, சிறுபான்மையினர் மக்களுக்கு ஒரு பாதுகாப்பு இருந்தது.. ஏனென்றால், இங்கு பாஜக இல்லை.. அதுதான் காரணம்... பாஜக எங்கு இருக்கிறதோ, எந்த மாநிலத்தில் இருக்கிறதோ அங்கே மதவெறி மோதல்கள் இருக்கின்றன... தமிழகத்தில் தற்போது மதவெறியை தூண்டுகிறார்கள்.. இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் ஒரு வெறுப்பு அரசியலை உண்டு பண்ணுகிறார்கள். சமத்துவத்துடன் வாழும் இந்த மண்ணில் அந்த முயற்சியை முறியடிக்க வேண்டும்.

கூட்டணி
திருமாவளவனை சீண்டினால் ஆவேசப்படுவார், ஆத்திரப்படுவார், கூட்டணியை விட்டு வெளியே வருவார்.. இதனால் கூட்டணி சின்னாபின்னமாகிவிடும் என்று பலர் நினைத்தார்கள்.. ஆனால், நான்தான் கூட்டணியில் முதல் ஆளாக போய் கையெழுத்து போட்டேன்.. எனக்கு ஒதுக்கப்பட்ட சீட் ஆறா அல்லது பத்தா என்பது பிரச்சனை இல்லை, இந்த நாட்டில் பாஜக இங்கு வரணுமா, வரவேண்டாமா என்பதுதான் பிரச்சனை" என்றார் திருமாவளவன்.

அண்ணாமலை
அதுபோலவே இப்போது உள்ளாட்சி தேர்தலுக்கான களை கட்டி வருகிறது.. அதிமுக கூட்டணியுடன் இணைந்து பாஜக தேர்தலை சந்திக்க முனைப்பு காட்டி வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், "இந்தியாவில் இந்த 7 வருடங்களாகவே நிலைமை மொத்தமாக நல்ல நிலைமைக்கு மாறியுள்ளது... பிரதமராக நரேந்திர மோடி இருக்கும் போதே தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்கும். தமிழ்நாட்டில் மிக விரைவில் பாஜகவைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சர் பதவியில் அமரத்தான் போகிறார். அதைப் பிரதமர் மோடியே பார்க்கத்தான் போகிறார்" என்றார்.

திருமாவளவன்
அண்ணாமலையின் இந்த பேச்சு குறித்து, அருப்புக்கோட்டை வந்த விசிக தலைவர் திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர்.. அதற்கு அவர் சொன்னதாவது: "வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், மோடி அரசின் கொள் கைகளை எதிர்த்தும் இப்போது ஒரு வாரத்துக்குப் போராட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் திமுக தலை மையில் அனைத்துக் கட்சிகள் சார்பில் வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடைபெறுகிறது.
Recommended Video

ஒப்புதல்
தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வுக்கு விலக்குக் கோரும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து சட்டமாக்க வேண்டும்.. தமிழ்நாட்டில் பாஜக தலைகீழாக நின்றாலும் ஆட்சியைப் பிடிக்க முடியாது... தமிழகத்தில் பாஜக ஒருபோதும் ஆட்சி செய்ய முடியாது.. ஆளுநராகப் பதவியேற்ற ரவி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது. தமிழகத்திற்கு அவரை நியமனம் செய்யக்கூடாது என கூறியும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை.

வெளிச்சம்
அதிமுக ஆட்சியில் அடி முதல் நுனி வரை ஊழல் நடந்துள்ளது. அது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பதில் விசிகவுக்கு உடன்பாடு இல்லை. ஏற்கனவே மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய பல ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி உள்ளது. திமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது திமுக அரசு.. சமூக நீதி அரசு" என்றார்.. நேற்று முன்தினம் திருமாவளவன் விடுத்திருந்த ஒரு அறிக்கையிலும், பாஜக ஆட்சிக்கு வந்தால் நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications