மழலையர் பள்ளியில் குழந்தையை கட்டிப்போட்டு.. ஷாக் புகார்.. பாஜக பெண் நிர்வாகி அதிரடியாக கைது
சென்னை: தன்னுடைய மழலையர் பள்ளியில் ஒரு குழந்தையின் கை, கால்களை கட்டிப் போட்டு தாக்கியதாக பாஜக மத்திய சென்னை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளராக உள்ள மீனாட்சி என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மழலையர் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள், உலகத்தை முதல்முதலாக அங்கு தான் பார்க்கின்றன. அங்கு அவர்கள் பார்க்கும் உலகம் இனிமையானதாக இருக்க வேண்டும். வண்ணங்கள் முதல் எழுத்துக்கள் வரை மழலையர் பள்ளியில் தான் குழந்தைகள் முதல்முதலாக பார்ப்பார்கள் என்பதால், அவர்களின் கல்வி அடிப்படைக்கு அஸ்திவாரம் போடும் இடமாக இருக்கும்,.
அப்படிப்பட்ட மழலையர் பள்ளிகள் குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையிலும் இனிமையாகவும் இருக்கும். குழந்தைகள் எவ்வளவு குறும்பு செய்தாலும், எந்த காரணம் கொண்டும் அடிக்கவே கூடாது. குழந்தைகளை அடித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தையை தாக்கியவர்கள் மீது சட்ட நடவடிக்கையும் கடுமையாக இருக்கும். மழலையர் பள்ளிகள் இயக்குவதற்கும் விதிமுறைகள் கடுமையாக உள்ளன. எளிதாக ஆரம்பித்துவிடவும் முடியாது.
இந்நிலையில் சென்னை வில்லிவாக்கத்தில் ஒரு மழலையர் பள்ளியில் குழந்தை கடுமையாக தாக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. பாஜக நிர்வாகி மீனாட்சி என்பவரை போலீசார் புகாரின் பேரில் கைது செய்துள்ளனர்,.

இவர் சென்னை வில்லிவாக்கத்தில் பாஜக மத்திய சென்னை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளராக உள்ள மீனாட்சி என்பவர் குழந்தைகளுக்கென தனியாக ஒரு மழலையர் பள்ளியை நடத்தி வருகிறார்.
மீனாட்சி நடத்தி வரும் மழலையர் பள்ளியில், ராஜாஜி நகரை சேர்ந்த சரண்யா என்பவரின் குழந்தை படித்து வந்தானாம். சிறுவனை கை, கால்களை கட்டிப் போட்டு அடிப்பதும், துன்புறுத்துவதும், தேவை இல்லாமல் சிறுவனை துன்புறுத்தியாக புகார் எழுந்தது,.
கடந்த 7 மாதங்களாக மழலையர் பள்ளியில் சிறுவன் படித்து வருகிறான், இந்நிலையில் சேர்ந்ததில் இருந்தே சிறுவன் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டதாக சக ஊழியர்கள் சிறுவனின் பெற்றோருக்கு கூறியுள்ளார்களாம். இதையடுத்து தனது குழந்தை துன்புறுத்தப்பட்டது குறித்து மழலையர் பள்ளி உரிமையாளர் மீனாட்சியிடம் பெற்றோர் கேட்டனராம். அதற்கு அவர் மிரட்டல் விடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதையடுத்து வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் சிறுவனின் தாய் சரண்யா புகார் அளித்தார்.
அதன் பேரில் பள்ளிக்கு சென்று போலீசார் விசாரணை செய்ததில், பள்ளி நிர்வாகி மீனாட்சி சிறுவனை கொடுமைப்படுத்தியதற்கான ஆதாரம் உள்ளதாக கருதினர். இதையடுத்து, மழலையர் பள்ளியின் உரிமையாளரும் பாஜக மத்திய சென்னை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளருமான மீனாட்சி கைது செய்யப்பட்டார். மீனாட்சி மீது ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications