Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காமராஜர் குறித்து அவதூறு..வருந்திய ராஜீவ்காந்தி! அறிவாலய வாசலில் ’சீட்’ யாசகம்! காங்கிரஸை விடாத பாஜக

Subscribe to Oneindia Tamil

சென்னை: காமராஜர் குறித்து இழிவாக பேசியதாக திமுக மாணவர் அணி நிர்வாகி ராஜீவ் காந்திக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் நாடார் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் இது தொடர்பாக அவர் வருத்தம் தெரிவித்தார். இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக அவதூறுகளை தட்டிக் கேட்க மனமின்றி, சீட்டுகளுக்காக அறிவாலய வாசலை யாசகத்திற்கு நிற்பது போல காங்கிரஸ் வாய்மூடி நிற்பதாக பாஜக விமர்சித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்புதி.மு.க. இளைஞரணி அலுவலகமான அன்பகத்தில் நடைபெற்ற ஒரு நூல் வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய திமுக மாணவர் அணி நிர்வாகியான ராஜீவ் காந்தி முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் தலைவர்மான காமராஜர் குறித்து பேசியது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

bjp rajiv gandhi kamaraj

நிகழ்ச்சியில் பேசிய அவர்,” கள்ளுக் கடைகளை திறந்த ராஜாஜி பள்ளிக்கூடங்களை மூடினார். கள்ளு கடை தரும் போதையை விட பள்ளிக் கூடங்கள் தரும் போதை அதிகம். தங்களை விட படித்து விடக்கூடாது என்பதற்காக பள்ளிகளை மூடினார்.

அதே நேரத்தில் காமராஜர் ஒன்றும் தனது கை காசை போட்டு பள்ளிக்கூடங்களை திறக்கவில்லை. ராஜாஜி மூடிய பள்ளிக்கூடங்களை தான் திறந்தார். இதனால் தான் கல்வி கண் திறந்த காமராஜர் என கூறுகின்றனர். இன்று கல்வி என்ற ஒன்று இருப்பதற்கு பெரியார் தான் காரணம்” என பேசி இருந்தார். ராஜீவ் காந்தியின் இந்த பேச்சு கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியினரிடையே கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தி வைத்திருக்கிறது.

இது தொடர்பாக பேசிய தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னத்தம்பி,” ஆளுங்கட்சியை சேர்ந்தவர் என்ற பாதுகாப்பில் ஆணவத்தோடு கூட்டணி கட்சியான காங்கிரஸின் மனம் புண்படும் வகையில் ராஜீவ் காந்தியை பேசுவதை வன்மையாக கண்டிக்கிறேன். அவருக்கு காமராஜரை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை” எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் காமராஜர் குறித்து பேசிய ராஜீவ் காந்தியை கண்டிக்கவேண்டும் என பாஜகவின் தமிழிசை உள்ளிட்ட தலைவர்கள், மற்றும் நாடார் சமுதாய அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதற்கிடையே, காமராஜர் குறித்த பேச்சுக்கு வருத்தம் தெரிவித்திருந்தார் ராஜீவ் காந்தி. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் காமராஜர் குறித்து தாம் பேசியது காங்கிரஸ் தோழர்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, அவர்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக அறிந்தேன்.

bjp rajiv gandhi kamaraj

காமராஜர் மீது பற்று கொண்ட தலைவர்களும் நாடார் சமூக அமைப்பினை சேர்ந்த தலைவர்களும் தன்னிடம் வருத்தம் தெரிவித்தனர். பெருந்தலைவர் காமராஜரை சிறுமைப்படுத்தவோ, குறைத்து பேசவோ தனிப்பட முறையில் தனக்கு எவ்வித தவறான நோக்கமும் இல்லை. தாம் பேசியதன் மூலம் மனம் வருந்திய காங்கிரஸ் தொண்டர்களுக்கும் பெரும் தலைவர் காமராஜரை நேசிக்கும் உறவுகளுக்கும் தனது வருத்தத்தை மனதார தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறியிருந்தார்.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக அவதூறுகளை தட்டிக் கேட்க மனமின்றி, சீட்டுகளுக்காக அறிவாலய வாசலை யாசகத்திற்கு நிற்பது போல காங்கிரஸ் வாய்மூடி நிற்பதாக பாஜக விமர்சித்துள்ளது. இதுதொடர்பான பதிவில்,”அனைத்து நிகழ்வுகளுக்கும் திரு மு.கருணாநிதியின் பெயரைச் சூட்டி மற்ற தலைவர்களின் புகழை மறைக்கும் அறிவாலயம் அரசு, தற்போது மேலும் ஒரு படி சென்று, தேசத்திற்காக உண்மையாக உழைத்த தலைவர்களை நேரடியாக அவமதிக்கவும் துவங்கி விட்டது..

மூடிய பள்ளிகளைதான் காமராஜர் திறந்தார், சொந்த பணத்தில் பள்ளிகளை திறக்கவில்லை" என கர்மவீரர் திரு காமராஜர் அவர்கள் மீது அவதூறு பரப்பி வருகிறார் திமுகவின் மாணவரணி மாநில தலைவர் திரு
ராஜீவ் காந்தி அவர்கள். தனது ஆட்சியில் பள்ளிக்கூடங்களை போதைப்பொருள் கூடங்களாக மாற்றி வரும் திமுக, 12000 புதிய பள்ளிகளை திறந்து அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி கொண்டு வந்த ஓர் உன்னத தலைவரை கொச்சைப்படுத்தி வருகிறது.

திரு காமராஜர் அவர்கள் தோற்க வாய்ப்பிருந்ததாலேயே குடியாத்தத்தில் தங்கள் கட்சி போட்டியிடாததாக பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது திமுக. மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்து பல குழந்தைகளின் கல்விக்கு பாடுபட்ட திரு காமராஜரை திமுக இழிவு படுத்துவது முதல் முறை அல்ல. முதலமைச்சரின் வாகனத்தில் சைரனை முதலில் எடுக்கச்சொல்லிய திரு காமராஜர் அவர்களின் பெயருக்கு பதில் திரு கருணாநிதியின் பெயரை ஸ்டிக்கர் ஒட்டியவர் திமுகவின் பொதுச்செயலாளர் திரு துரைமுருகன் அவர்கள்.

திரு காமராஜர் அவர்கள் திமுகவினரின் கட்டை விரல்களை வெட்டச்சொன்னதாய் பொய் குற்றச்சாட்டு வைத்தவர் திமுகவின் திரு ஆர் எஸ் பாரதி. இப்படி அவர்கள் தொடர்ச்சியாக அள்ளித் தெளிக்கும் அவதூறுகளை தட்டிக்கேட்கக் கூட மனமின்றி, சீட்டுக்களுக்காக அறிவாலயம் வாசலில் யாசகத்திற்கு நிற்பது போல தமிழக காங்கிரஸ் வாய்மூடி முகம்பார்த்து நிற்பது வெட்கக்கேடு.

கர்ம வீரர் திரு காமராஜர் அவர்களை மட்டுமல்லாது அனைத்து தன்னலமற்ற தமிழ் தலைவர்களையும் பொய் அவதூறுகளால் மட்டப்படுத்தி, தங்கள் கட்சியின் ஊழல் ஊறிய தலைவர்களை தியாக வள்ளல்களாக தூக்கிப் பிடிக்கும் செயலை இனியாவது திமுக கைவிட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+