Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Exclusive செந்தில் பாலாஜியை அசைக்க முடியல.. உண்மையில் நடந்தது என்ன? விளக்கும் மூத்த பத்திரிகையாளர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சரவை மாற்றத்தில் சில அமைச்சர்களுக்கு வருத்தங்கள் உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் பிரகாஷ் நமது ஒன் இந்தியாவுக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும், செந்தில் பாலாஜி அமைச்சரானதை விமர்சிக்கும் எதிர்க்கட்சியினரால், செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை நடத்த முடியவில்லை எனக் கூறியுள்ளார் மூத்த பத்திரிகையாளர்பிரகாஷ்.

செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 471 நாட்கள் சிறையில் இருந்த நிலையில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். உடனே அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சரவையில் பல மாற்றங்கள் நடந்துள்ளன. இந்நிலையில் மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் பிரகாஷ் ஒன் இந்தியாவுக்கு அளித்துள்ள பிரத்யேக போட்டியில் கூறி உள்ளதாவது:

dmk mk stalin senthil balaji

மறுத்த பிடிஆர்: "திமுக ஆட்சி என்றாலே உயர்கல்வித்துறை பொன்முடிக்கு என்பது எழுதப்படாத விதி. இன்றைக்கு அந்த பதவியை ஒரு தலித்துக்கு கொடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தனது இலாகா மாற்றப்பட்டதில் அமைச்சர் பொன்முடிக்கு கொஞ்சம் வருத்தம். அமைச்சர் பொன்முடிக்கு உயர்கல்வித் துறையில் உள்ள அதிகாரிகளுடன் நிறைய தகராறுகள் உண்டு. அதனால் நிர்வாக ரீதியான மாற்றத்தில் அவரது இலாகாவை மாற்றி உள்ளனர். பொன்முடி வேறு முக்கியமான துறையை எதிர்பார்த்திருந்தார், ஆனால் வனத்துறை தனக்கு வழங்கப்பட்டதில் அவருக்கு வருத்தம்.

அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அமைச்சரவை பதவியேற்பு விழாவுக்கு வராததற்கு காரணம் அலட்சியம் தான். நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் இலாகா முன்பே பறிக்கப்பட்டு தங்கம் தென்னரசுவிடம் கொடுக்கப்பட்டது. இப்போது உயர்கல்வித் துறையை ஏற்றுக் கொள்கிறீர்களா என அவரிடம் கேட்டுள்ளனர். ஆனால் அதை பிடிஆர் மறுத்திருக்கிறார்.

செந்தில் பாலாஜி டார்கெட்: "எதிரி உன்னை தாக்குகிறான் என்றால் நீங்கள் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.". பாஜக இன்றைக்கு அரவிந்த் கெஜ்ரிவாலை, மனீஷ் சிசோடியாவை, ஹேமந்த் சோரனை அட்டாக் செய்கிறார்கள். பாஜக கடுமையாக எதிர்க்கிறது என்றாலே நீங்கள் வலிமையான ஆள் என்று அர்த்தம்.

செந்தில் பாலாஜியை கைது செய்து, ஜாமீன் கிடைக்கக்கூடாது என்பதற்காக PMLA சட்டத்தில் கொண்டு வந்து, ஜாமீன் கொடுக்கவிடாமல் தொடர்ந்து குடைச்சல் கொடுத்தனர். இதய பிரச்சனையால் பாதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் கொடுக்க முடியவில்லை. 471 நாட்களாக இவ்வளவு பெரிய இன்னல்களை அனுபவித்தார்.

அண்ணாமலை டெல்லிக்கு கொடுத்த பிரஷர்: சட்டமன்றத் தேர்தலில் கோவையில் உள்ள 11 தொகுதிகளில் அதிமுக கூட்டணி ஜெயித்த நிலையில், அதே கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவை மொத்தமுள்ள 100 மாநகராட்சி இடங்களில் 95 இடங்களை ஜெயிக்க வைக்கிறார் செந்தில் பாலாஜி. எனவே அண்ணாமலை பயப்படுகிறார். இவரை வைத்திருந்தால் கொங்கு மண்டலத்தில் நம்மால் வளர முடியாது என டெல்லிக்கு சிக்னல் கொடுக்கிறார்.

பாஜக தமிழ்நாட்டில் பெரிய அளவுக்கு ஜெயிக்க வேண்டும் என்றால் செந்தில் பாலாஜியை உள்ளே வைக்க வேண்டும் என கண்டிஷன் போடுகிறார் அண்ணாமலை. உடனே அமலாக்கத்துறை மூலம் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வர முடியாமல் செய்கிறார்கள். செந்தில் பாலாஜி உள்ளே இருந்துகொண்டே, வியூகங்களை அமைத்து பாஜகவை தோற்கடித்தார்.

ஜாமீன் நிபந்தனையே இதுதான்: செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தால் வழக்கில் செல்வாக்கு செலுத்துவார், சாட்சிகளை கலைப்பார் என்பதெல்லாம் அடிப்படையற்ற வாதம். வழக்கில் உண்மை இருந்தால் யாரும் தப்பிக்கவே முடியாது. உச்ச நீதிமன்றம் விதித்துள்ள ஜாமீன் நிபந்தனையே, சாட்சிகளை கலைக்க கூடாது என்பதுதான். செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை முன்பாக ஆஜராக போகும்போது கூட கொடி இல்லாத காரில் தான் செந்தில் பாலாஜி சென்றுள்ளார்.

அசோக் எங்கே இருக்கிறார்?: பாஜகவிடம், அதிமுகவிடம் எவ்வளவோ வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். செந்தில் பாலாஜி குற்றவாளி என்றால் ஆதாரங்களை முன்வைத்து தண்டனை வாங்கிக் கொடுங்கள். உங்களால் வழக்கை நகர்த்தி கொண்டு செல்ல முடியவில்லை. இன்றைக்கு வரை செந்தில் பாலாஜியின் தம்பியை கண்டுபிடிக்க முடியவில்லை. சிபிஐ-யை கைவசம் வைத்துள்ள பாஜக அரசால் இன்னும் அசோக்கை கண்டுபிடிக்க முடியவில்லை.

செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, தான் நிரபராதி என நிரூபிக்க நிச்சயம் போராடுவார். அவர் குற்றவாளி என நீங்கள் நிரூபியுங்கள்." எனத் தெரிவித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் பிரகாஷ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+