33 மாதங்கள் ஆகியும் சூரிய ஒளி மின்சார பூங்கா வரலையே.. தனியாரை பயமுறுத்தினா எப்படி? பாஜக பாய்ச்சல்!
சென்னை: 33 மாதங்களுக்கு முன்னர் தமிழகமெங்கும் சூரிய ஒளி மின்சார பூங்காக்கள் உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், இன்று வரை அதற்கான ஒரு முயற்சியையும் செய்யவில்லை என பாஜக விமர்சித்துள்ளது.
சூரிய ஒளி மின் பூங்காக்களை அமைக்க அரசு எந்த முயற்சியையும், முதலீடுகளையும் மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை. தனியாருக்கு தொல்லை தராமல், வெளிப்படையான கொள்கையுடன் அரசு செயல்பட்டாலே போதுமானது என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்தவுடனேயே, அதாவது 33 மாதங்களுக்கு முன்னர் தமிழகமெங்கும் சூரிய ஒளி மின்சார பூங்காக்கள் உருவாக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், இன்று வரை அதற்கான ஒரு முயற்சியும் செய்யப்படவில்லை என்பது இந்த ஆட்சியின் நிர்வாக திறமையின்மையை உணர்த்துகிறது. உண்மையில் தமிழகத்தில் சூரிய ஒளி மின் உற்பத்தியில் கவனம் செலுத்தினால் அதிக அளவு மாற்று எரிசக்தி தமிழகத்திற்கு கிடைக்கும்.
தனியார் நிறுவனங்கள் பல இந்த திட்டத்தில் ஆர்வம் செலுத்தினாலும் சில மாதங்களுக்கு முன்னர் வரை இதற்கான அனுமதி பெறுவதற்கே லஞ்சமாக ஒரு மெகா வாட்டுக்கு ரூபாய் 20 லட்சம் செலுத்த வேண்டியிருந்தது என்பது அனைவரும் அறிந்த ரகசியம். ஆனால், தற்போது நிலைமை சற்றே மாறியிருப்பதாக சொல்லப்பட்டாலும், அனுமதி அளிக்கப்பட்ட பின்னர் திட்டத்தை மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
சூரிய ஒளி மின் பூங்காக்களை அமைக்க அரசு எந்த முயற்சியையும், முதலீடுகளையும் மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை. தனியாருக்கு தொல்லை தராமல், வெளிப்படையான கொள்கையுடன் அரசு செயல்பட்டாலே போதுமானது. இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு அரசு சலுகைகள் ஏதும் கொடுக்க வேண்டியதில்லை. ஆனால், உரிய நேரத்தில் முறையான அனுமதியை வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.
இந்தியாவில் சூரிய ஒளி மின் உற்பத்தியில் தமிழகம் முதல் மாநிலமாக விளங்க அனைத்து வாய்ப்புகள் இருந்தாலும், நிர்வாகமின்மை, ஊழல், லஞ்சம் ஆகியவற்றால் தனியார் நிறுவனங்கள் முதலீடுகளை செய்ய அஞ்சுவதால் பின்தங்கி உள்ளது என்பதே மறுக்க முடியாத உண்மை. இதை புரிந்து கொண்டு மின்சாரத்துறை அமைச்சரும், முதலமைச்சரும் உரிய நடவடிக்கை எடுப்பது நலம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications