மத்திய அரசு வேலை என மிகப்பெரிய மோசடி .. தலைமறைவான பாஜக நிர்வாகி, மனைவியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

மத்திய அரசில் வேலை வாங்கி தருவதாக கூறி 50 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த பாஜக நிர்வாகி மற்றும் அவரின் மனைவியின் முன் ஜாமீன் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் லோகேஷ் குமார் என்பவர் விளையாட்டுத்துறை ஒதுக்கீட்டில் மத்திய அரசு பணியில் சேர விரும்பியுள்ளார். அவரிடம் பாஜக பிரமுகரான ஜெயராம் என்பவர் மத்திய அரசு வேலை வாங்கித்தருவதாக பல லட்சம் வசூல் செய்து மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை பொழிச்சலூரில் யங் ஸ்போர்ட்ஸ் ஆப் இந்தியா என்ற பெயரில் விளையாட்டு பயிற்சி மையம் செயல்பட்டு வந்தது. இதில் பயிற்சிக்காக வேலூர் மாவட்டத்தை சேர்ந்த லோகேஷ் என்பவர் சேர்ந்துள்ளார். அப்போது, அந்த பயிற்சி மையத்தின் உரிமையாளரும் செங்கல்பட்டு மாவட்ட பாஜக விளையாட்டு பிரிவு துணைத்தலைவர் ஜெயராமன், தான் பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருப்பதால் மத்திய அரசு பணியில் வேலை வாங்கி தருவதாக கூறி பல தவணைகளில் 30 லட்ச ரூபாய் வரை பணம் பெற்றுள்ளார்.

chennai vellore bjp

பின்னர் மத்திய அரசு பணியில் சேர பணி நியமன ஆணையையும் லோகேஷ்க்கு வழங்கியுள்ளார். இதனை ஆய்வு செய்த போது தான் இது போலியான நியமன ஆணை என்பது தெரியவந்தது. இதே போல் மத்திய அரசில் பணி வாங்கித் தருவதாக கூறி 50 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்திருப்பது தெரிய வந்ததையடுத்து, லோகேஷ்குமார் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதையடுத்து தாம்பரம் காவல் ஆணையர் உத்தரவின் பெயரில் சங்கர் நகர் காவல் நிலையம் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பாஜக கட்சியை சேர்ந்த ஜெயராம், அவரது மனைவி அஸ்வினி ஜெயராம், ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் பணியில் இருந்த பிரியா ஆகியோரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வழக்கில், முன் ஜாமீன் கோரி ஜெயராம், ப்ரியா, அஸ்வினி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி சுந்தர் மோகன், அப்போது காவல்துறை தரப்பில், விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தலைமறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, 3 பேரின் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+