Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் இறங்கியடிக்குது திமுக! பாஜகவின் 3 கிரிமினல் சட்டத்துக்கு தமிழில் பெயர்? சட்டத்துறை நறுக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் திமுக சட்டத் துறை சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகிய 3 சட்டங்களையும் முறையே, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா, பாரதிய சாக்‌ஷிய அதிநியம் என்ற பெயரில் புதிய குற்றவியல் சட்டங்களாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

BJP DMK

3 சட்டங்கள்: இந்த 3 புதிய சட்டங்களும் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் நடைமுறைக்கும் வந்துள்ளன.. ஆனால், இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கும் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களும், பல்வேறு அரசியல் தலைவர்களும், செயல்பாட்டாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சட்டத்துறை வல்லுநர்களையும், நீதித்துறை நிபுணர்களையும் கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசு, தன்னிச்சையாக கொண்டு வந்துள்ள மூன்று புதிய சட்டங்களும், தேவையற்ற குழப்பங்களையும், நீதி பரிபாலனையில் தாமதத்தையும் ஏற்படுத்தும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.. நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் இந்த சட்டங்களால் கடும் அதிருப்திக்கு ஆளாகி உள்ளனர்.

நீதிபரிபாலனை: காரணம், இந்த 3 புதிய சட்டத்தை படித்து வழக்கு நடத்துவது மிகவும் சிரமம் என்கிறார்கள்.. இது விசாரணை நீதிமன்றங்களின் நீதி பரிபாலனையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிடும் என்று சட்ட நிபுணர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமல்ல, காவல்துறையினருக்கும் இந்த சட்ட மாற்றங்கள் பெரும் குழப்பத்தை தந்துவிடுமாம்.. காரணம், இந்திய தண்டனை சட்டத்தில் கொண்டு வரப்பட்ட மாற்றங்களில் 90 சதவீத பிரிவுகளிலும், உட்பிரிவுகளிலும் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.. எனவே, வழக்கு பதிவு செய்யும்போது சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிக்கும் குழப்பம் ஏற்படக்கூடும் என்கிறார்கள்..

நீதித்துறை: இன்னொரு சிக்கலையும் நீதித்துறை இதில் சுட்டிக்காட்டுகிறது.. ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ள வழக்குகளை முந்தைய சட்டத்தின்படியும், ஜூலை 1ம் தேதிக்கு பிறகு பதிவு செய்யப்படும் வழக்குகளை புதிய சட்ட பிரிவுகளின்படியும் விசாரிக்க வேண்டிய நிலைமை விசாரணை நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஏற்பட்டிருக்கிறதாம்.

ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டம் என்பதால் மாற்றம் செய்கிறோம் என்று மத்திய அரசு காரணம் சொன்னாலும், ஆயுதமேந்திய கிளர்ச்சி, நாசகார நடவடிக்கைகள், பிரிவினைவாத நடவடிக்கைகள் அல்லது இந்தியாவின் இறையாண்மை தொடர்பான புதிய சட்ட விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

எதிர்ப்பு: அதனால்தான், தமிழக முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல மாநில முதல்வர்கள், இந்த சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

அத்துடன், திமுக தரப்பில் இதற்கு கண்டன ஆர்ப்பாட்டம் செய்யவும் முடிவாகி உள்ளது.. அந்தவகையில், திமுக சட்டத் துறை ஆலோசனை கூட்டம் கடந்த ஜூன் 29-ம் தேதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்தது... இதில், திமுக சட்டத் துறை தலைவர் ஆர்.விடுதலை முன்னிலையில், செயலாளர் என்.ஆர்.இளங்கோ தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட அமைப்பாளர்கள் பங்கேற்றிருந்தனர்..

கருத்துக்கள்: அப்போது, மத்திய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து திமுக கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது... இவை நீதி பரிபாலனம், மாநில சுயாட்சி, மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்றும், இந்தியாவை காவல்துறை ஆதிக்க ஆட்சி நாடாக மாற்றிவிடும் என்றும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

இதையடுத்து, திமுக சட்டத் துறை சார்பில் ஜூலை 5-ம் தேதி காலை 10 மணி அளவில் அனைத்து மாவட்ட நீதிமன்றங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், ஜூலை 6-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்றும் இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாதகங்கள்: மத்திய அரசு அமல்படுத்தியுள்ள 3 குற்றவியல் சட்டங்களின் பாதகங்களையும் வழக்கறிஞர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் அறிந்துகொள்ளும் வகையில் தமிழகம் முழுவதும் கண்டன கருத்தரங்கம், அரங்க கூட்டங்கள் நடத்தவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அந்தவகையில், நாளை ஜூலை 6 ல் திமுக வழக்கறிஞர் அணி சார்பில் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ள நிலையில், இன்று ஜூலை 5 ஆம் தேதி திமுக வழக்கறிஞர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் இந்த புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக வழக்கறிஞர் அணி சார்பில் மாவட்ட நீதிமன்றங்களில் வாயில் முன்பு இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

பாஜக எதிர்ப்பு: உயர் நீதிமன்றம் அருகே நடந்த இந்த மாபெரும் ஆர்பாட்டத்திற்கு திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ, திமுக வழக்கறிஞர்கள் கே.எஸ்.ரவிச்சந்திரன், சந்துரு மாவட்ட அணியினர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு புதிய சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால் என்.எஸ்.சி.போஸ் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, என்.ஆர்.இளங்கோ கூறும்போது, "திமுக சட்டத்துறையும் கூட்டணி கட்சிகளின் சட்ட பிரிவு வழக்கறிஞர்களும் இந்த போராட்டத்தை நடத்தி வருகிறோம். நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளை வெளியேற்றிவிட்டு எந்த விவாதமும் இல்லாமல் இந்த சட்டங்களை நிறைவேற்றியுள்ளனர். இந்த மூன்று சட்டங்கள் குறித்தும் நான், ப.சிதம்பரம் உள்ளிட்டோர் அடங்கிய நாடாளுமன்ற நிலைக்குழு எதிர்ப்பு கருத்துகளை தெரிவித்து அறிக்கை தந்தோம்.

தமிழில் பெயர்: அது குறித்து விவாதம்கூட நடத்தாமல் எதேச்சதிகாரமாக, தன்னிச்சையாக இந்த சட்டங்களை கொண்டுவந்துள்ளனர். குற்றவியல் நடைமுறையில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் என இரு தரப்புக்குமே இந்த சட்டங்கள் பாதகமாக அமைந்துள்ளது. இந்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாளை உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளோம்" என்றார்.

ஒன்றிய அரசு கொண்டு வந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை சமஸ்கிருதத்தில் பெயர் வைத்து விட்டு, ஆங்கில வார்த்தையை பயன்படுத்திருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளதே என்ற கேள்விக்கு, "மூன்று புதிய குற்றவியல் சட்டத்திற்கு தமிழில் பெயர் வைத்து விட்டு ஆங்கிலத்தில் எழுதிக் கொள்ளுங்கள்" என்று மத்திய அரசுக்கு திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர், இளங்கோ பதிலளித்தார். நாளைய தினம் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ள நிலையில், திமுகவின் நிகழ்வுகளை பாஜக கவனித்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+