கைது பண்ணுங்க! அல்சேஷன் ரூபத்தில் பாஜக எச்.ராஜாவுக்கு வந்த சிக்கல்! இப்போ என்ன சொல்றார் தெரியுமா?
சென்னை : தங்கள் வீட்டில் வளர்த்த அல்சேஷன் நாய்க்கு வெறி பிடித்ததால் அடித்துக் கொன்று விட்டதாக பாஜக மூத்த தலைவர் எச். ராஜா ட்விட்டர் பதிவிட்டு இருந்த நிலையில், இது தொடர்பாக அவர் மீது விலங்குகள் நல வாரியத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக எச்.ராஜா புதுவகையான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர், பாஜக முன்னாள் தேசிய செயலாளருமான எச்.ராஜா சிவகங்கை மாவட்டத்தில் வசித்து வருகிறார். தீவிர ஆர்.எஸ்.எஸ் பற்றாளரான இவர், சரணர் தேர்தல் உள்ளிட்ட பல தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வி அடைந்திருக்கிறார்.
ஒருமுறை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கபட்டவரான எச்.ராஜா எப்போதும் ஆவேசமாகவும், சர்ச்சைக்குரிய வகையிலும் பேசக்கூடியவர்.

எச்.ராஜா
மேலும் சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் இவர் அதிலும் தீவிர அரசியல் செய்யக்கூடியவர் தான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தந்தை பெரியார் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவதூறாக பேசியதாக எச் ராஜாவுக்கு தமிழகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்தது. அவரை கைது செய்ய வேண்டும் கடும் தண்டனை வழங்க வேண்டும் என பெரிய அளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.

அட்மின் தான் ..
இந்நிலையில் அந்த ட்விட்டர் பதிவை தான் போடவில்லை எனவும் தனது அட்மின் தான் போட்டுவிட்டார் என நீதிமன்றத்தில் மன்னிப்பு கூறினார் எச் ராஜா. ஏதாவது சொல்லி விட வேண்டியது அதன் பின்னர் பிரச்சனை ஏற்பட்டால் அட்மின் தான் காரணம் என தப்பித்துக் கொள்வது என்ற பொது ட்ரெண்டையே அவர் தான் உருவாக்கி வைத்தார். இதனை பல பிரபல நடிகர்களே பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

மீண்டும் சர்ச்சை
அப்படி ஒரு சர்ச்சையில் தான் மீண்டும் சிக்கியுள்ளார் எச்.ராஜா. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில்,"எங்கள் வீட்டில் அல்சேஷன் நாய் ஒன்றை பிரியமாக வளர்த்தோம். ஆனால் ஒருநாள் அதற்கு வெறி பிடித்து மாடு, கன்றுகளை கண்டிக்கத் துவங்கியது. நாய் பிடிப்பவரிடம் சொன்னோம். அவர் ஒரு கல்லு மூங்கிலால் அதன் மண்டையில் ஒரே போடு போட்டார். 'நாய் பரிதாபமாக இறந்தது. வருத்தமாக உள்ளது. என்ன செய்வது." என பதிவிட்டிருந்தார்.

புதுமையான விளக்கம்
விலங்குகளை துன்புறுத்தியது, வளர்ப்பு நாயை கொலை செய்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக மிருக வதை தடைச் சட்டத்தின் கீழ் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலரான ஸ்வபனா சுந்தர் என்பவர் மத்திய விலங்குகள் நல வாரியத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஒரு வாரத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டதாக தகவல் வெளியானது. இதை அடுத்து எச்.ராஜா கைது செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார். அதில் "தமிழகத்தில் சிலர் வெறி பிடித்தது போல் தொடர்ந்து பேசி வருகின்றனர். அவர்களுக்கு உரைக்க புத்தி புகட்ட வேண்டும் என்பதற்காகவே இந்த ட்விட்டர் பதிவை போட்டேம் எனவும், ஆனால் இதனை சிலர் வேண்டுமென்றே திசை திருப்புவதாக" கூறியிருக்கிறார்












Click it and Unblock the Notifications