கர்நாடகாவில் அடக்கி வாசித்த பாஜக.. மோடி இமேஜை நம்பித்தான் இருக்கு.. பத்திரிகையாளர் மணி பேட்டி!
சென்னை : "கடந்த நான்கு ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜக எடியூரப்பா, பசவராஜ் பொம்மையை நம்பி ஓட்டு கேட்கவில்லை. மோடியின் இமேஜை நம்பித்தான் பாஜக கர்நாடகா தேர்தல் களத்தில் இருக்கிறது." என ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில் மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
மூத்த பத்திரிகையாளர் மணி கூறுகையில், "கர்நாடகாவில் அப்பட்டமான மதவாத அரசியலை கையில் எடுத்த பாஜக ஓராண்டு காலத்திலேயே பின்வாங்கியது. பசவராஜ் பொம்மையை முதல்வராக்கிய பிறகு ஹிஜாப் விவகாரம், ஹலால் விவகாரங்களை கிளப்பியது பாஜக. ஆனால் வட இந்தியா போல செய்தால் இங்கு வேலைக்கு ஆகாது என்பதால் அதனை அடக்கி வாசித்தார்கள். இன்னொரு பக்கம், லிங்காயத் + வொக்கலிகர் + தலித் பிரச்சனைகளும் இருந்துகொண்டிருக்கிறது.

பாஜக அரசியல் : கர்நாடகாவில் இந்துத்வா அரசியலை கொண்டு வர எடியூரப்பா தடையாக இருப்பார் என்றே அவரை மாற்றியது பாஜக. பசவராஜ் பொம்மையாலும் தீவிரமான இந்துத்வா அரசியலை அங்கு செயல்படுத்த முடியவில்லை. தென்னிந்தியாவைப் பொறுத்தவரை பாஜகவின் நுழைவாயில் கர்நாடகா தான். 1991ல் கர்நாடகாவில் முதன் முதலில் பாஜகவிற்கு ஒரு எம்.பி கிடைத்தது கர்நாடகாவில் தான்.
பாஜக கர்நாடகாவில் நல்ல மெஜாரிட்டியோடு ஆட்சிக்கு வந்ததில்லை. அதேசமயம், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு என நிரந்தரமாக ஒரு வாக்கு வங்கி இருந்து கொண்டிருக்கிறது. 2018 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 38% வாக்குகள் பெற்றது. ஆனால், பாஜக 36% வாக்குகள் பெற்றிருந்தாலும் அதிக சீட்களைப் பெற்றது.
ஊழல் : கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் ஊழல் புதிய சிகரங்களைத் தொட்டது. எல்லா கட்சியினரும் இடம்பெற்றுள்ள கர்நாடகா ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர், கர்நாடகா அரசில் 40% கமிஷன் கேட்பதாக வெளிப்படையாக குற்றம்சாட்டினர். ஒப்பந்ததாரர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். அதை பெரிய அளவில் முன்னிறுத்தி காங்கிரஸ் கட்சி பிரச்சாரம் மேற்கொண்டது.
மோடி இமேஜ் : மோடியின் இமேஜை நம்பித்தான் பாஜக இருக்கிறது. பிரதமர் மோடி வரும் ஏப்ரல் 30ஆம் தேதிக்குப் பிறகு 20 இடங்களில் பிரச்சாரம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலரும் கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்திற்காக களமிறக்கப்பட்டுள்ளனர்.
கடந்த நான்கு ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜக எடியூரப்பா, பசவராஜ் பொம்மையை நம்பி ஓட்டு கேட்கவில்லை. எதிர்க்கட்சிகள் எந்த மாநிலத்திலாவது முதல்வர் வேட்பாளரை சொல்லவில்லை என்றால், முதல்வராக நிற்பதற்கு தகுதியான வேட்பாளரே இல்லை என ஏகடியம் செய்வார்கள். ஆனால், இன்று கர்நாடகாவில் சி.எம் வேட்பாளரை சொல்லாமல் தான் தேர்தலைச் சந்திக்கிறார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்!












Click it and Unblock the Notifications