பக்கா குற்றவாளி.. சீமானை நம்பி ஏமாந்தவர்களை மீட்பதே என் முதல் வேலை.. ராஜேஸ்வரி பிரியா ஆவேசம்
சீமான் கருத்துக்கு ராஜேஸ்வரி பிரியா கண்டனம் தெரிவித்துள்ளார்
சென்னை: "சீமானிடம் நம்பி ஏமாந்தவர்களை மீட்பதே இனி என் தலையாய வேலை" என்று ராஜேஸ்வரி பிரியா காட்டமாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பாஜக பிரமுகர் கே.டி. ராகவனின் சம்பந்தப்பட்ட வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது... அந்த அதிர்வலை இன்னமும் மக்களிடம் நீங்கவில்லை..
இதுகுறித்து விசாரணை நடத்த குழு ஒன்றினை தமிழக பாஜக நியமித்துள்ளது. வீடியோவில் சம்பந்தப்பட்ட ராகவன் பதவி விலகி உள்ளார்.

மதன்
வீடியோவை வெளியிட்ட மதன் என்பவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக பாஜக இதுகுறித்து எந்தவிதமான கருத்தையும் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யவில்லை. இப்படிப்பட்ட சூழலில், ராகவனின் வீடியோ பற்றி சீமான் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்திருந்தார்..

படுக்கையறை
அப்போது "அவருடைய ஒப்புதல் இல்லை, அவருடைய அனுமதியும் இல்லை.. அவருக்கே தெரியாமல் அவருடைய வீட்டின் படுக்கையறையிலும் கழிவறையிலும் கேமராவை வைத்து வீடியோ எடுத்துவிட்டு வருவதுதான் முதலில் சமூக குற்றம்.. அதைச் செய்து வெளியிட்டவரைத் தான் முதலில் கைது செய்திருக்க வேண்டும்... இந்த உலகத்திலேயே எங்கும் நடக்காத ஒன்ற இவர் செய்துவிட்டார் என்பது போல காட்டிக்கொண்டிருக்கிறீர்கள்?' என்றார்.

புகார்
இவர்தான் ராகவன் வீடியோ வெளியிட்டபோது, போலீஸ் வரை சென்று புகாரும் தந்திருந்தார்.. இப்போது சீமான் தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.. சீமான் இப்படி பேசுவது அதிர்ச்சியளிக்கிறது... அவர் கட்சியில் இருக்கும் கள்ளமில்லாத இளைஞர்களின் மனதில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சரியென்ற மனநிலையை சீமான் உருவாக்குகிறார்..

ஆபத்து
இது ஒட்டுமொத்த பெண்களுக்கும் தமிழ் சமூகத்துக்கும் அபாயம்.. இப்படிப்பட்ட ஆபாசமான, அருவருக்கத்தக்க, ஆபத்தான செயல்பாடுகளை ஆதரிக்கும் சீமான் போன்றவர்களிடமும் பெண்கள், தமிழ்சமூகம் விழிப்புடன் இருக்க வேண்டும்... இவர்கள் எல்லாம் பெண்களின் பாதுகாப்பு, மரியாதை, கண்ணியம் பற்றி துளிக்கூட கவலைப்படாதவர்கள்.. பெண்களை பாலியல் ரீதியான வன்முறைக்கு, ஒடுக்குமுறைக்கு உள்ளாக்குவதை ஆதரிப்பவர்கள்" என்று அறிக்கை விட்டு கூறியிருந்தார்.

ஜோதிமணி
ஜோதிமணியை தொடர்ந்து, அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி பிரியாவும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்... அதில், "சீமானின் இந்த கருத்து "பெண்களிடம் நாங்கள் இப்படித்தான்" என்று நேரடியாக ஆணாதிக்க உணர்வோடு கூறுவது போன்று உள்ளது... சீமானை நம்பி வாக்களித்த பெண்களும் கட்சியில் உள்ள பெண்களும் சிந்திக்க வேண்டிய தருணம்.

என் தலையாய வேலை
மாற்று அரசியல் பேசி 30 லட்சம் பேரை ஏமாற்றிய சீமான், பெண்களை இழிவாக எண்ணும் தங்களது கீழ்த்தரமான புத்தி வெட்ட வெளிச்சமாக தெரிகின்றது... யாரும் செய்யாத செயலை செய்தாரா என்பது பற்றி பேசுபவன் யாராக இருப்பான் என்றால், அந்த குற்றங்களை பலமுறை செய்யும் பக்கா குற்றவாளியாகவே இருக்க முடியும்... யாருடைய கை கூலியாக வேண்டுமானாலும் தாங்கள் இருக்கலாம்... ஆனால் பெண்களை பற்றி தங்களுடைய எண்ணவோட்டம் இப்படி இருப்பதை நாங்கள் பொறுத்து கொள்ள மாட்டோம்... உம்மை நம்பி ஏமாந்தவர்களை மீட்பதே இனி என் தலையாய வேலை" என்று காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications