கள்ளச்சாராய மரணம்..செந்தில் பாலாஜிக்கு செக்..ஆளுநரை சந்திக்கப்போகும் அண்ணாமலை
சென்னை: தமிழ்நாட்டில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்களை கையில் எடுத்து போராட்டத்தை அறிவித்துள்ளது. அதே நேரத்தில் செந்தில் பாலாஜியை முதல்வர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அண்ணாமலை வரும் ஞாயிறன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளிக்கப்போவதாகவும் கூறியுள்ளார்.
தமிழகத்தில் விஷ சாராயம் குடித்து விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 22 பேர் உயிரிழந்தனர். கள்ளச்சாராய மரணத்திற்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக, வரும் 20ம் தேதி கண்டன போராட்டம் நடத்தப்படும் என, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனையையும், அவற்றால் ஏற்பட்ட துயர் மரணங்களையும் தி.மு.க. அரசு தடுக்கத் தவறிவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், தமிழக பாஜக சார்பில், வரும் 20ஆம் தேதி கண்டன போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார். சென்னையில் நடைபெறும் போராட்டத்தில், தான் பங்கேற்க இருப்பதாகவும், அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம், டாஸ்மாக் மது ஆறாக ஓடுகிறது. கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக வரும் 21ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து இரண்டு புகார் மனுகள் அளிக்கப்போவதாகவும் அண்ணாமலை தெரிவித்தார். ஆளுநர் அவர்கள் நேரடியாக இந்த பிரச்சினையில் தலையிட்டு மது விற்பனை, மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு ஆளுநர் அவர்கள் உத்தரவிட வேண்டும் இதற்காகவும் ஆளுநரை சந்தித்து மனு அளிக்கப்போவதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார்.
பிரதமர் மோடி பதவியேற்ற 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு மாநிலம் முழுவதும் ஒரு மாதம் சிறப்பு கூட்டங்கள் நடத்தி பாஜக அரசு செய்துள்ள சாதனைகளை கொண்டு செல்லப்போவதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications