திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்த எச்.ராஜா.. அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!
சென்னை: பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஊடக நிகழ்வில் பங்கேற்றபோது எச்.ராஜா திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் இன்று என்டிடிவி ஊடகத்தின் தமிழ்நாடு சம்மிட் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கியுள்ள சூழலில், இன்று சென்னை கிண்டியில் நடைபெற்று நடைபெற்று வரும் இந்த ஊடக நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் பலரும் பங்கேற்று தங்களின் கருத்துக்களை அதில் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைந்த இந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் டிஆர்பி ராஜா, அன்பில் மகேஷ், காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, தவெக தேர்தல் பரப்புரை செயலாளர் அருண்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இன்று இரவு நடந்த விவாதத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பங்கேற்றார். விவாதத்தின் போது எச். ராஜா திடீரென மயங்கி விழுந்தார். அவர் கீழே விழப்போன மேடையில் இருந்தவர்கள் சுதாரித்துப் பிடித்தனர். சர்க்கரை அளவு குறைவாக இருப்பதாக கருதப்பட்டு அவருக்கு இனிப்பு வழங்கப்பட்டது. எனினும், அவரால் நிற்க முடியவில்லை.
மூளை பக்கவாதம் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்பட்டதால், உடனே அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி கொடுத்தனர். MRI மற்றும் CT ஸ்கேன்களை எடுத்தனர். பின்னர் அவர் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications