Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எடப்பாடிக்கு ‘லாக்’ போட்ட டெல்லி.. ‘சின்ன’ சீக்ரெட்.. ‘மோடி’ பேரை சொல்லலைனா காலி! ரவீந்திரன் பளிச்!

எடப்பாடி பழனிசாமி பிரதமர் வேட்பாளர் மோடி என்ற நிலைக்கு வராவிட்டால் 15% வாக்குகள் கூட வராமல் போய்விடும் என கணித்துள்ளார் ரவீந்திரன் துரைசாமி.

Subscribe to Oneindia Tamil

சென்னை : இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமிக்கு கொடுத்து பாஜக லாக் செய்திருக்கிறது. ஈபிஎஸ் - ஓபிஎஸ் இடையேயான உண்மையான ஃபைட் நாடாளுமன்றத் தேர்தலில் தான் இருக்கிறது என அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, நமது ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதலுக்கு மத்தியில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தது, பாஜக + ஓபிஎஸ்ஸின் மூவ் தான் என விமர்சிக்கப்படுகிறது.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக வைத்திருக்கும் 'செக்' பற்றியும், அண்ணாமலையை ஓபிஎஸ் தரப்பினர் கார்னர் செய்யத் தொடங்கியிருப்பது பற்றியும் பேசியுள்ளார் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி. அவரது பேட்டி இங்கே:

இரட்டை இலையை வேண்டாம் - எடப்பாடி

இரட்டை இலையை வேண்டாம் - எடப்பாடி

கேள்வி : எடப்பாடி பழனிசாமி, கூடுமானவரை தங்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பதை தவிர்க்கப் பார்த்ததாக பலரும் சொல்கிறார்கள்.. உண்மையில் அப்படியான விஷயம் நடந்ததா?

ரவீந்திரன் : இரட்டை இலை சின்னம் இருப்பதால், பாஜக வந்து ஆதரவு தெரிவித்துவிட்டது, இப்போது அவர்களை உதற முடியாது. இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கொண்டாடும் ஓ.பன்னீர்செல்வமும், இரட்டை இலையில் நிற்கும் வேட்பாளரை ஆதரிப்போம் எனத் தெரிவித்து விட்டார். இப்போது ஈபிஎஸ் தரப்பு வேட்பாளர் எவ்வளவு வாக்குகள் பெற்றாலும், அதை தனது பலம் என எடப்பாடி பழனிசாமியால் 'க்ளெய்ம்' செய்ய முடியாது. இரட்டை இலை என்பதால் நாங்களும் சப்போர்ட் செய்தோம் என ஓபிஎஸ், பாஜக என பலரும் சொல்வார்கள் என்பதால் முழுமையாக அது ஈபிஎஸ் ஆதரவு வாக்குகள் என கருத முடியாது.

எடப்பாடிக்கு மைனஸ் - லாக்

எடப்பாடிக்கு மைனஸ் - லாக்

அதனால், சின்னம் முடக்கப்பட்டிருந்தால், எங்களுக்கு எதிராக இரட்டை இலை சின்னத்தை முடக்கி விட்டார்கள் என்று சவுண்ட் விட்டு ஒரு விவாதத்தைக் கிளப்பி இருக்கலாம். பாஜகவுக்கு எதிரான சிறுபான்மையின வாக்காளர்கள் மத்தியில் ஒரு அலையை உருவாக்க முயற்சித்திருக்கலாம். இப்போது கிறிஸ்தவர், இஸ்லாமியர்கள் மத்தியில் பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இது எடப்பாடி பழனிசாமிக்கு இடர்பாடு தான். மைனஸ் பாயிண்ட் தான். இந்த இடைத்தேர்தல் முடிந்ததுமே இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையத்தின் கைக்குப் போய்விடும். அதன்பிறகு அது ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளருக்குத்தான் உரிமை. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என அண்ணாமலை சொல்வது மட்டும் தான் ஒரே ஆறுதல் பரிசு.

ஸ்டாலினுக்கு சான்ஸ்

ஸ்டாலினுக்கு சான்ஸ்

அதைக் குறிப்பிட்டு ஓபிஎஸ் அணியின் மருது அழகுராஜும், பெங்களூர் புகழேந்தியும் அண்ணாமலையை கார்னர் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். எனவே, இனிமேல் அண்ணாமலை அப்படிச் சொல்வாரா என்பது கூட கேள்விக்குறி தான். தொடர் தோல்வியில் தவிக்கும் தலைவர்கள், தோல்வி வளையத்தில் இருந்து மீண்டு வர முடியாமல் பரிதவித்துக் கொண்டிருப்பதுதான் உண்மையான நிலைமை. மீண்டு வர வேண்டும் என்றால், எல்லோரையும் ஒன்று சேர்த்துத்தான் எதிர் தரப்பை தோற்கடிக்க முடியுமே தவிர, வெறும் எடப்பாடி பழனிசாமியால் எந்தக் காலத்திலும் ஸ்டாலினை தோற்கடிக்க முடியாது. இப்படியாக ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி நல்ல வாய்ப்பைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

3வது இடத்துக்கு

3வது இடத்துக்கு

கேள்வி : இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி தரப்புக்கு தள்ளி விட்டது பாஜகவும் ஓபிஎஸ்ஸும் சேர்ந்து போட்ட பிளான் என்றும், அதன் மூலம் அவரை தனி சின்னத்தில் நின்று வலிமையை நிரூபிக்க விடாமல் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. பின் இப்போது எதற்காக ஓபிஎஸ் அணியினர் அண்ணாமலையை கார்னர் செய்ய வேண்டும்?

பதில் : இடைத்தேர்தல் என்பது பொதுத்தேர்தலுக்கான எதிரொலியாக இருக்காது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் நடக்கும் இடைத்தேர்தலைப் போன்றே பொதுத் தேர்தல் நிலை இருக்காது. திண்டுக்கல் இடைத்தேர்தல் சென்னையில் எங்காவது வந்திருந்தால் எம்ஜிஆர் மூன்றாவது இடத்திற்குப் போயிருப்பார். இப்போது ஈபிஎஸ் - ஓபிஎஸ் செல்வாக்கைத் தீர்மானிக்க பொதுத் தேர்தலைச் சந்திப்பதுதான் முடிவு. திமுக அணி பலமாக இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி வழிக்கு வந்தார் என்றால் அவருக்கு நல்லது. தனக்கு உள்ள 15% வாக்கு பலத்தை அனுசரித்து சீட் கேட்டால் அவருக்கு நல்லது. நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் இல்லாமல் ஈபிஎஸ் வந்தார் என்றால் 3வது இடத்திற்குப் போய்விடுவார் ஈபிஎஸ்.

ஈபிஎஸ்ஸுக்கு லாக்

ஈபிஎஸ்ஸுக்கு லாக்

பிரதமர் வேட்பாளர் என்ற ஆயுதத்தை வைத்து எடப்பாடி பழனிசாமியை 'லாக்' செய்தால் தான் சரியாக இருக்குமே தவிர இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், அதாவது எடப்பாடிக்கு அமைப்பு பலம் உள்ள இடத்தில் அவரை லாக் பண்ண முடியாது. இப்போது இரட்டை இலை சின்னத்தை தற்காலிகமாக அவருக்குக் கொடுத்து, அவர் எவ்வளவு வாக்குகள் வாங்கினாலும், அது அவருடைய தனிப்பட்ட பலமாகத் தெரியாது. ரியல் ஃபைட் 2024ல் வரும். எடப்பாடி பழனிசாமி யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு, பிரதமர் வேட்பாளர் மோடி என்ற அணிக்குள் வராவிட்டால் 15% வாக்குகள் கூட வராமல் போய்விடும். உலக்கில் கிழக்கு மேற்கு பார்ப்பது போல, வெற்றி பெற்ற அணி ஸ்ட்ராங்காக இருக்கும்போது தோல்வியுற்ற அணி சண்டை போட்டுக் கொண்டிருந்தால் மீண்டும் தோல்விதான் கிடைக்கும்.

அண்ணாமலை ரியாக்‌ஷன்

அண்ணாமலை ரியாக்‌ஷன்

கேள்வி : அண்ணாமலை, எதற்காக ஈபிஎஸ்ஸுக்கு நிபந்தனையற்ற ஆதரவைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்? ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எதற்காக அண்ணாமலையை மட்டும் கடுமையாக அட்டாக் செய்து பேசத் தொடங்கியுள்ளனர்?

பதில் : அண்ணாமலை டெல்லியை மீறி செயல்படுவதாகத் தோன்றவில்லை. இடைக்காலப் பொதுச் செயலாளர் என அவர் ஈபிஎஸ்ஸை குறிப்பிட்டதால் தான் ஓபிஎஸ் தரப்பினர் அதிருப்தியை பிரதிபலித்துள்ளனர். கூட்டணி உறவில் அண்ணாமலை விஷம் கலப்பதாக மருது அழகுராஜ் சொன்னது கடுமையான வார்த்தை தான். டெல்லி பாஜக தலைமை என்ன சொல்லி இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரியவில்லை. அண்ணாமலையின் ரியாக்‌ஷன் எப்படி இருக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

மூவ் - பல மாநிலங்களில்

மூவ் - பல மாநிலங்களில்

கேள்வி : இந்த மோதல் போக்கின் நீட்சியாக ஓபிஎஸ் அதிரடி முடிவை எடுக்க வாய்ப்பிருக்கிறதா?

பதில் : இந்த மாதிரிதான் பொன்னையன், கேபி முனுசாமி போன்றோரும் பேசினார்கள். இப்போது எடப்பாடி பழனிசாமி, பட்டும் படாமல் கூட்டணி தொடரும் என்கிறார். பாஜக - ஈபிஎஸ் அணி மட்டும் கூட்டணி அமையும் என்று நான் நினைக்கவில்லை. ஓபிஎஸ்ஸும் இருக்க வேண்டும் என்பதைத்தான் சிடி ரவியின் மூவ் காட்டுகிறது. சாதி ரீதியான ஒருங்கிணைவின் பலன்களை பல மாநிலங்களில் பல தேர்தல்களில் பார்த்த கட்சி பாஜக. எனவே, இங்கும் ஒருங்கிணைவைத்தான் விரும்பும். இரட்டை இலையின் ஒரு இலை ஈபிஎஸ், இன்னொரு இலை ஓபிஎஸ் என்று இருந்தால் தான், அதிமுக சாதி சார்பற்ற கட்சியாக இருக்கும் என்பதைத்தான் பாஜக தலைமை விரும்புகிறது. எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ்ஸை கழற்றிவிட்டதே பாஜகவை தட்டி விடுவதற்குத்தான். ஆனால், அது முடியாமல் 'லாக்' ஆகி 4 சதவீத ஓட்டுக்காக பாஜக கூட்டணி தொடரும் எனச் சொல்கிறார் எடப்பாடி. "போகப் போகத் தெரியும் இந்த பூவின் வாசம் புரியும்" என்பதற்கேற்ப பாஜக எடப்பாடியை அலெர்ட்டாக கவனிக்கிறது.

வின் + வின் பாலிசி

வின் + வின் பாலிசி

கேள்வி : திமுக கூட்டணி கட்சிகள் திமுகவுக்கு அடிமையாக இருப்பதாக எடப்பாடி தொடர்ந்து விமர்சிக்கிறார்.. திமுக கூட்டணி கட்சிகள் உண்மையிலேயே பிளவுபடாமல் இணக்கமாக இருக்கிறதா?

பதில் : கூட்டணியை பிளவுபடாமல் வைக்க வேண்டும் என்று ஸ்டாலின் நினைக்கிறார். 10 வருடங்களாக வெற்றி பெற முடியாத கம்யூனிஸ்டுகள், விசிக ஆகியோருக்கு இரண்டு இரண்டு எம்.பிக்களை பெற திமுக கூட்டணி உதவியிருக்கிறது. வின் + வின் பலன் கொடுக்கக்கூடிய அளவுக்கு வேறு எந்த தலைவரும் இல்லை. எனவே, கூட்டணி கட்சிகளுக்கு ஸ்டாலினோடு இணக்கமாக நிற்பதுதான் லாபம். இன்னும் சொல்லப்போனால், கடந்த மக்களவை தேர்தலில் 53 சதவீதம் வாக்குகள் பெற்ற திமுக கூட்டணியை நோக்கி கமல்ஹாசன் வருகிறார். அந்த அணியை நோக்கி அதிமுக கூட்டணியில் இருந்த ராமதாஸ் இன்ச் பை இன்ச்சாக நகர்கிறார். இதனால், திமுக அணியில் இருப்பவர்களும் இதே நிலையில் இருந்தால் தான் அரசியல் களத்தில் வெற்றி பெற முடியும் என்ற புள்ளியில் திமுகவோடு நிற்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+