கர்நாடகாவில் பாஜக தோற்றது ஒரு விதத்தில் நல்லது தான்.. ஏன் தெரியுமா? அண்ணாமலை சொல்லும் சீக்ரெட்!
சென்னை: கர்நாடக தேர்தலை நாடாளுமன்ற தேர்தல் முன்னோட்டமாக கருத முடியாது எனவும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கு சென்று விட்டதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடி மீது கர்நாடக மக்கள் வைத்திருக்கும் அன்பு எள்ளளவும் கூட குறையவில்லை. அதை 2024 ஆம் ஆண்டு தேர்தலில் நாம் பார்ப்போம். கர்நாடகாவில் பாஜக கடந்து வந்த பாதை கடினமான ஒன்று. கர்நாடகாவில் பாஜக இதுவரை தனியாக மெஜாரிட்டியாக அமைத்த வரலாறு இல்லை.
கர்நாடகாவில் 38 ஆண்டுகளாக ஆளும் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்ததாக வரலாறு இல்லை. இதை பாஜக உடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. தேர்தலை பொறுத்தவரை மக்கள் பல விஷயங்களை பார்ப்பார்கள். அனைத்தையும் பார்த்து இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்கள்.
பாஜகவிற்கு வாக்கு வங்கி குறையவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு ஜேடிஎஸ் கட்சியின் 4.5 சதவீத வாக்குகள் போயிருக்கிறது. இதனால், காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவிகிதம் அதிகரித்து விட்டது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் 28 தொகுதிகளில் 26 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றி பெறும். அந்த நம்பிக்கை உள்ளது.
காங்கிரஸ் கட்சி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அக்கட்சிக்கு பல சவால்கள் ஆரம்பித்து உள்ளது. தேர்தலில் ஜெயிப்பது தோற்பது எல்லாம் சகஜம். பிரதமர் மோடி மீது மக்களுக்கு அன்பு இருக்கிறது. அதனால்தான் பெங்களூரில் 16 எம்.எல்.ஏக்களை பாஜக வென்றுள்ளது. பெங்களூரு மக்கள், மோடியின் ரோட்ஷோவிற்கு கொடுத்த வெகுமதியாக இதை பார்க்கிறேன்.

பெங்களூரில் தமிழர்க்ள் அதிகம் வசிக்கும் இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. ஜெயநகர் தொகுதியில் 16 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் பாஜக வென்றுள்ளது. கர்நாடக அரசியலை பொறுத்தவரை மிகப்பெரிய அனுபவம் எனக்கு கிடைத்துள்ளது. பாஜக வெற்றி இன்னும் இமாலய வெற்றிகளையும் பெரிய தோல்விகளையும் பார்க்கும் அதுதான் ஜனநாயகம்.
கர்நாடக சட்டப்பேரவையில் எந்த கட்சி தோற்குதோ அது லோக்சபாவில் ஜெயிக்கும். இது 40 ஆண்டுகளாக கர்நாடகாவில் இருக்கும் சீக்ரெட். எனவே கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி இங்கே ஆட்சி அமைத்தது என்றால் பாஜக மேலே ஆட்சி அமைக்கும். 2013 தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வென்று மோடி பிரதமர் ஆனார். 2018-ல் ஜேடிஸ் - காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. திரும்ப பாஜக ஆட்சி அமைத்தது. எனவே ஒரு விதத்தில் இது நல்லதுதான். இங்கே ஆட்சி அமைந்தால் அங்கே ஆட்சி அமையாது என்று இருக்கு... எனவே கர்நாடக தேர்தல் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இவ்வாறு அவர் கூறினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications