அதிமுகவை ஏன் தொங்கறீங்க...கேட்ட சி.வி. சண்முகம்..பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ரியாக்சன்
சென்னை: அதிமுக கூட்டணியை விட்டு பாஜக வெளியேறலாம் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளது பற்றி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஒரே வார்த்தையில் பதில் கூறியுள்ளார். அது பற்றி நாங்கள் எதுவும் கருத்து கூற முடியாது தேசிய தலைமைதான் எந்த முடிவையும் அறிவிக்கும் என்று கூறியுள்ளார் வானதி சீனிவாசன்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா என பேசியிருந்தார். தமிழ்நாட்டில் பல ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்திருக்கின்றன. முன்னாள் முதலமைச்சர்கள், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதனால்தான், ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது.

இந்தியாவின் ஊழல் மிக்க மாநிலங்களில் தமிழ்நாட்டுக்கு முதலிடம் என்று கூட சொல்வேன் அண்ணாமலை கூறியிருந்தார். இது அதிமுகவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரும், அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சரும், எம்.பியுமான சி.வி.சண்முகம் கூறியதாவது: பாஜக கட்சி என்பது வேறு, அண்ணாமலை என்பவர் வேறு. அதிமுக கூட்டணியை விட்டு பாஜக வெளியேறலாம். அதிமுகவை பிடித்து ஏன் தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள்? ஆளுமைமிக்க தலைவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை பற்றி கருத்துச் சொல்ல அண்ணாமலைக்கு தகுதி இல்லை. கவுன்சிலராகக் கூட அண்ணாமலை இருந்ததில்லை. ஜெயலலிதாவை பற்றி பேச இந்த முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு எந்தவித யோக்கிதையும் இல்லை என்றும் கூறினார் சி.வி. சண்முகம்.
இந்த கருத்து குறித்து கோவையில் தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த வானதி சீனிவாசன், கூட்டணி தொடர்பான விசயங்களில் தேசிய தலைமைதான் முடிவெடுத்து அறிவிக்கும். அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கூறும் கருத்துக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பது தேச நலனுக்காக கட்டமைக்கப்பட்டது. எனவே இது குறித்து பேசுவதற்கு தேசிய தலைமை இருக்கிறது.
அவர்களின் அறிவுரைப்படி என்ன சொல்கிறார்களோ அதை செய்யத்தான் நாங்கள் இருக்கிறோம் என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications