ரபேல் வாட்ச் சீரியல் நம்பரை மாற்றி சொன்னாரா? அண்ணாமலைக்கு டங் ஸ்லிப்.. ஆஹா பற்ற வைத்த பாஜக புள்ளி!
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு வீட்டு வாடகை தரும் அளவுக்கு நண்பர்கள் அவருக்கு கிடைத்திருக்கிறார்கள் என பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாஜக நாராயணன் திருப்பதி ஒன் இந்தியா அரசியல் தளத்திற்கு அளித்த பேட்டியின் கேள்வி பதில் வடிவம் இதோ:

கேள்வி: 2016 ஆம் ஆண்டு நவம்பர் தொடங்கி டிசம்பர் வரை ஏடிஎம் வாசலில் நான் நின்ற போது இந்தியாவல் கருப்பு பணம் ஒழிந்துவிட்டது என்ற நம்பிய சாமானியாக கேட்கிறேன், உண்மையில் கருப்பு பணம் ஒழிந்துவிட்டதா?
பதில்: பெரும்பாலான அரசு அலுவலகங்களில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துப்படுகிறது. அதாவது கணக்கில் பணம் செலுத்துவது என்பது அதிகமாகியுள்ளது. இது கருப்பு பணத்தை ஒழிக்கக் கூடிய மிகப் பெரிய சாதனம். பணமதிப்பிழப்பு என்பது இந்தியாவில் செய்யப்பட்ட மிகப் பெரிய புரட்சி. அதை எதற்காக செய்தோமோ அதில் நாம் வெற்றி கண்டிருக்கிறோம். இதன் மூலம் பல லட்சக்கணக்கான ஷெல் நிறுவனங்கள் மூடப்பட்டு அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பணமதிப்பிழப்பிற்கு முன்பும் அதற்குபின்பும் பிடிபடும் கள்ளநோட்டுகளின் எண்ணிக்கையை ஒப்பிட்டு பார்த்தால் மிக பெரிய வித்தியாசம் வரும். பணமதிப்பிழப்பு மூலம் அரசுக்கும் வருவாய் வந்தது. இதில் தப்பு இருந்தால் கண்டுபிடிக்கும் சாதனங்களும் வந்துவிட்டன. நீங்கள் கேட்ட கேள்விக்கு ஒரு வரியில் பதில் என்னவென்றால் கருப்பு பணத்தை கண்டுபிடிக்கக் கூடிய அற்புதமான விஷயமாகவே பணமதிப்பிழப்பு அமைந்துவிட்டது.
கேள்வி: கருப்பு பணத்தை ஒழிக்கும் முயற்சியில் அதானியின் ஷெல் நிறுவனங்கள் மூடப்பட்டதா?
பதில்: 3 லட்சம் ஷெல் நிறுவனங்களை மூடியாகிவிட்டது. அதன் பிறகு 50 ஆயிரம் ஷெல் கம்பெனிகள் வந்திருக்கலாம். இதற்கு முன்னர் ஷெல் நிறுவனங்களை கண்டுபிடிக்க முடியாத சூழல் இருந்தது. திநகரில் ஒரே கட்டடத்தில் 45 ஷெல் நிறுவனங்கள் இருந்தன. அதன் பெயர்களையும் அது யாருடையது என்பதையும் சொல்ல நான் தயார். திமுக குடும்ப உறுப்பினர் ஒருவரின் ஷெல் கம்பெனி சிங்கப்பூரிலும் ஹாங்காங்கிலிருந்தும் இங்கு கொண்டு வருகிறார் என்றுதான் அண்ணாமலை சொல்லியுள்ளார். இனிமேல் இவர்கள் ஷெல் கம்பெனி மூலம் கருப்பு பணத்தை புழக்கத்தில் வைத்திருந்தாலும் அதற்கு உண்டாக இயந்திரம் நம்மிடம் இருக்கிறது.

கேள்வி: கருப்பு பணத்தை ஒழிப்பதற்கான முயற்சி பணமதிப்பிழப்பா?
பதில்: இந்த பணமதிப்பிழப்பின் போதுதான் ஷெல் நிறுவனங்களை கண்டுபிடித்து நாம் நீக்கியுள்ளோம். இனி ஷெல் நிறுவனங்கள் வரக் கூடாது, அப்படியே வந்தாலும் அதை அடையாளம் காண முடியும். அதற்கேற்ற சட்ட திட்டங்களை வகுத்துள்ளோம்.
கேள்வி: 50 நாட்களில் அனைத்து பிரச்சினையும் சரியாகிவிடும் என சொல்லப்பட்டது , ஆனால் சரியாகவில்லை.
பதில்: இதெல்லாம் சிஸ்டம் சேஞ்ச். பேங்க் வாசலில் நின்று இறந்தார்கள் என்று கூறுவது எல்லாம் சரி, சாலை விபத்துகள் நடக்கின்றன, அதற்காக சாலை பணியே வேண்டாம் என சொல்ல முடியுமா?
கேள்வி: ரபேல் வாட்ச் குறித்து அண்ணாமலை முழு விவரத்தையும் கொடுக்கவில்லை என தோன்றுகிறது.
பதில்: உங்களுக்கு தோன்றவில்லை என்றால் அதற்கு நான் என்ன செய்வது? அடுத்த வாரம் அவர் மறுபடியும் பிரஸ் மீட் வைப்பார், அப்போது நீங்கள் கேளுங்கள்.
கேள்வி: ரபேல் வாட்ச்காக ரூ 3 லட்சம் கொடுத்தேன் என அண்ணாமலை சொல்கிறார். அது எப்படியாக கொடுக்கப்பட்டது?
பதில்: பணமாக கொடுத்தார்கள் என்று போட்டு அதில் பான் எண்ணும் இணைக்கப்பட்டிருக்கிறதே! பணமாக வாங்கக் கூடாது என யார் சொன்னது அப்படியெல்லாம் சட்டத்தில் இல்லை. 50 ஆயிரத்திற்கு மேல் போனாலே பான் எண் கொடுத்துவிட்டு வாங்கிக் கொள்ளலாம். சட்டத்தில் ஒரு செக்ஷனில் லட்சக்கணக்கில் பணமாக வாங்கக் கூடாது என இருக்கும். இதே வேறு செக்ஷ்னில் அப்படி வாங்க நேரிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதும் இருக்கும்.
கேள்வி: பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையின் வீட்டு வாடகையை நண்பர் செலுத்துகிறார் என்றால் அவரிடம் அந்த நண்பர் பிரதி உபகாரம் எதிர்பார்க்காமல் செய்வாரா?
பதில்: நண்பர்கள் செய்வதில் என்ன தவறு? இதில் என்ன பலனை எதிர்பார்க்க போகிறார்கள், அப்படி பிரதிபலனை எதிர்பார்த்தால் அவர்கள் நண்பர்களே இல்லை, அதற்கு பெயர் வேறு. இதை நீங்கள் லஞ்சமாக நினைத்தால் நான் ஒன்றும் செய்ய முடியாது. அண்ணாமலைக்கு வாடகை கொடுக்கக் கூடிய அளவுக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். இது லஞ்சமா நட்பின் ரீதியில் கொடுக்கப்படுகிறதா என்பதை நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும். எல்லாவற்றுக்கும் ஒரு லிமிட் இருக்கிறது. பத்திரிகையாளர் என்பதற்காக எதை வேண்டுமானாலும் கேட்கலாம் என்றால் அது என்னிடம் நடக்காது.
கேள்வி: வாட்ச் சீரியல் நம்பரை மாற்றி சொல்கிறாரே?
பதில்: ஸ்லிப் ஆப் தி டங் என்றுதான் நான் பார்க்கிறேன். ஏன் அவர் 2 வாட்ச் வைத்திருக்கிறார் என நீங்கள் நினைக்கிறீர்களா. அடுத்த வாரம் பிரஸ்மீட்டில் அவரிடம் கேளுங்கள்.
இவ்வாறு பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பேசினார்.












Click it and Unblock the Notifications